குளிக்கும் முன்பு தினமும் கூறவேண்டிய மந்திரம்

0
878
bathing
- விளம்பரம் -

ஒருவரது வீட்டில் மகாலட்சுமி குடிகொள்ளவேண்டுமானால் அதற்கு உள்ளத்தூய்மை மட்டும் போதாது உடல் தூய்மையும் மிக மிக முக்கியம். அதோடு குளிக்கும் சமயத்தில் எதை நினைக்கவேண்டும், எந்த மந்திரத்தை சொல்லவேண்டும் எப்படி குளிப்பது சிறந்தது இப்படி பல தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

bathing in river

இன்றைய காலகட்டத்தில் பலர் வெண்ணீரிலேயே குளிக்கிறார்கள் அனால் உண்மையில் பச்சை தண்ணீரில் குளிப்பதே உடலுக்கு மிகவும் நல்லது. அறிவியல் ரீதியாகவும் இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. குளிக்கும் சமயத்தை தீயவை எதையும் நினைக்காமல் நல்லதை மட்டுமே நினைத்துக்கொண்டு குளிக்க வேண்டும்.

Advertisement

மனிதனாய் பிறந்தவர்கள் அனைவரும் குறைந்ததது 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது புண்ணிய நதிகளில் நீர்த்தாடுவது நல்லது. ஆனால் இப்போதைய சூழ்நிலைகளில் பெரும்பாலானோர் புண்ணிய நதிகளுக்கு செல்வதில்லை. ஆனாலும் நாம் தினமும் எங்கு குளித்தாலும் அதை கங்கை நீராக கருதி கீழே உள்ள மந்திரத்தை சொல்லிக்கொண்டே குளித்தால் அது நாம் புனித நதிகளில் நீராடுவதற்கு சமம் என்பது ஐதீகம்.

bathing

மந்திரம்:

கங்கேச யமுனா சைவ
கோதாவரி சரஸ்வதி நர்மதா
சிந்து காவிரி ஜலேஸ்மின் சந்நிதம் குரும்

shower

கிருபானந்தவாரியார் எப்போதும் நீராடுவதற்கு முன்பாக தான் குளிக்கும் நீரில் ‘ஓம் சரவணபவ‘ என்று எழுதிவிட்டு தான் குளிப்பாராம். அதுபோல் நாமும் நமக்கு பிடித்த இறைவனின் நாமத்தை சொல்லிக்கொண்டே குளிப்பதாலும் நல்ல பலன் உண்டு.

Advertisement