பலன்களை அள்ளித்தரும் அதிபயங்கர சக்திவாய்ந்த சுதர்சன மந்திரம்

0
2657
Vishnu sudharsana chakra
- விளம்பரம் -

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கையில் உள்ள சக்கரமே ‘சுதர்சன சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கான மந்திரத்தை ஒருவர் ஜெபித்தால் எண்ணற்ற பலன்களை பெறுவதோடு எத்தகைய தீய சக்தியாக இருந்தாலும் அதில் இருந்து தன்னை காத்துக்கொள்ளும் ஆற்றல் பெறுவார். இப்படி பல அற்புதங்கள் நிறைந்த சுதர்சன மந்திரம் இதோ.

sudarshana vishnu

ஸ்ரீ சுதர்சன சக்கர ரக்ஷா மந்திரம் :
ஓம் நமோ சுதர்சன சக்ராய
ஸ்மரண மாத்ரேண ப்ரகடய ப்ரகடய
த்வம் ஸ்வரூபம் மம தர்சய தர்சய
மம சர்வத்ர ரக்ஷய ரக்ஷய ஸ்வாஹா

Advertisement

மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் இந்த மந்திரத்தை முதன் முதலில் சூரிய கிரகணத்தன்றோ அல்லது சந்திர கிரகணத்தன்றோ விளக்கேற்றிவைத்து 1008 முறை ஜபித்தால் சித்தியாகும்.

sudharsana chakra

அதன் பிறகு தேவையானபோது 3 தடவை ஜபித்தால் எத்தகைய ஆபத்தில் இருந்தும் தப்பிக்கலாம். அதோடு எந்த வித தீய சக்தியும் நெருங்க விடாமல் இது கவசம் போல் காக்கும்.

chakram

இது மிகவும் சக்திவாய்ந்த மந்திரம் என்பதால் நினைத்தபோதெல்லாம் இதை ஜபிக்க கூடாது. இந்த மந்திரத்தை ஜெபிக்கும் முன்பு ஒருவர் கட்டாயம் உடலளவிலும் மனதளவிலும் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். அதோடு வீடும் சுத்தமாக இருக்க வேண்டும்.

sudarshan chakram

இதை ஜெபிக்க எண்ணுபவர்கள் கட்டாயம் அசைவ உணவை உண்ணக்கூடாது. அதோடு வீடு சுத்தமாக இல்லை என்று எண்ணுபவர்கள் கோயிலிற்கு சென்று இந்த மந்திரத்தை ஜெபிக்கலாம். இதை எல்லாம் மீறி, இது ஒரு சாதாரண மந்திரம் தானே என்று நினைத்து சுத்தமில்லாமல் இந்த மந்திரத்தை ஜெபித்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும்.

Advertisement