பண வரவுக்காக எந்த மந்திரம் சொன்னாலும் பலன் அளிக்கவில்லை! உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சனை என்ன? எந்த மந்திரத்தை எப்படி உச்சரிப்பது?

நம்மில் பல பேரது வீட்டில் இருக்கும் பிரச்சனை! என்ன செய்தாலும் பணவரவு அதிகரிப்பதில்லை. அப்படியே பணம் வந்தாலும், அது வீண் விரயமாகி விடுகின்றது. இதற்காக, எத்தனையோ பரிகாரங்கள் செய்தாலும் பலன் இல்லை. மந்திரங்கள் உச்சரித்தாலும் பலன் இல்லை. என்ன செய்வது? உங்கள் வீட்டில், நீங்கள் செய்யும் தவறுகள் என்னென்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

money

உங்களுடைய வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறுவதற்காக, உங்களுடைய பூஜைகளை செய்வதற்கு முன்பு, உங்களுடைய வீடு முதலில் சுத்தமாக இருக்கின்றதா என்பதை கவனித்துக் கொள்ளவேண்டும். அழுக்குத் துணியையும், எச்சில் பாத்திரத்தையும், ஒட்டடை பிடித்த வீட்டையும் வைத்துக் கொண்டு எவ்வளவு தான் பூஜை செய்து, எவ்வளவுதான் மந்திரம் ஜபித்தால் பலன் அளிக்காது.

குறிப்பாக பெண்கள் மாதவிலக்கான காலத்தில், தங்களுடைய வீட்டில் எப்படி இருக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். தீட்டு முடிந்த பின்பு உங்களுடைய வீட்டை முறைப்படி சுத்தப்படுத்தி விட வேண்டும். உங்களது படுக்கை, உங்களது வீடு, உங்களது சமையலறை, உங்களது பூஜை அறை, உங்களது துணிமணிகள், எல்லாம் ஒருமுறை சுத்தப்படுத்தப்பட்டு, வீடு முழுவதும் மஞ்சள் தண்ணீர் தெளிப்பது மிகவும் உத்தமம். மாதம்தோறும் மாத விலக்கு முடிந்ததும் இவைகளை பின்பற்றி வர வேண்டும்.

Turmeric

அசுத்தம் நிறைந்த வீட்டில் செய்யப்படும் பூஜையாக இருந்தாலும், உச்சரிக்கப்படும் மந்திரமாக இருந்தாலும், கட்டாயம் அதற்கு பலன் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் உங்கள் வீட்டை சுத்தப்படுத்தி விட்டு, அதன்பின் மகாலட்சுமியை நினைத்து பணவரவிற்கு சொல்லக்கூடிய மந்திரம் தான் இது!

- Advertisement -

பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க சொல்ல வேண்டிய மந்திரம்:
ஓம் யம் ஓம்
அங் சிவாய நம
சவ்வும் நம சிவாய நம
ஸ்ரீயும் நம சிவாய நம
அங் உங் வங் சிவாய நம!

mahalakshmi

தினம்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, உங்கள் வீட்டை சுத்தம் செய்த பின்பு, இந்த மந்திரத்தை மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு முன்பாக மூன்று முறை உச்சரித்தாலே போதும். பணவரவில் இருக்கும் பிரச்சனை தீர்ந்து உங்கள் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்குவாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மந்திரம் மட்டும் அல்ல. எந்த மந்திரத்தை உச்சரிக்கும் போதும் உங்கள் வீடும், மனதும் சுத்தமாக இருக்கின்றதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
நாளை நரசிம்ம ஜெயந்தி! இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தால், நரசிம்மரின் முழுமையான ஆசீர்வாதத்தையும் பெற்றுவிடலாம்!

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Pana varavu manthiram in Tamil. Mantra for money flow. Mantra for getting money. Pana varavu manthiram. Panam vasiyam manthiram.