16 செல்வங்களை பெற உதவும் அபிராமி அந்தாதி பாடல்

16-selvangal

ஒரு சில மந்திரங்களை சொல்லும்போது நம்மை அறியாமலே நமது மனம் மென்மையாகும், எதையும் சாதிக்கும் ஒரு துணிவு வரும், மட்டற்ற மகிழ்ச்சிவரும். அத்தகைய மந்திரங்களை திரும்ப திரும்ப கூற வேண்டும் என்று நம் மனது ஏங்க அராமிக்கும். அப்படியான ஒரு மந்திரம் தான் அபிராமி அந்தாதி.

amman

மந்திரம்:

கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும்
ஒரு துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவி
பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!

– அபிராமி பட்டர்

பொருள்: 

என்றும் நீங்காத கல்வி, நீண்ட ஆயுள், கள்ளம் இல்லாத நட்பு, என்றும் குறையாச் செல்வம், எப்போதும் இளமை, பிணி இல்லாத ஆரோக்கியமான உடல், முயற்சிகளைக் கைவிடாத மனோபலம், (சலிப்பு வராத மனம்), அன்பு நீங்காத மனைவி, புத்திர பாக்கியம், குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான குணம், எந்தத் தடையும் ஏற்படாத கொடை(அளித்தல்), என்றும் குன்றாச் செல்வச் செழிப்பு, துன்பமில்லாத வாழ்வு, உன் பாதத்தின்மேல் பக்தி, இவை அனைத்தையும், பாற்கடலில் உணர்நிலை உறக்கம் கொள்ளும் திருமாலின் தங்கையாய் ஆதி கடவூரில் திருக் கோவில் கொண்டு, வாழ்வின் அமுதமாய், தொண்டருக்கெல்லாம் தொண்டராய் விளங்கும் ஈசனின் ஒரு பாதி மேனி கொண்ட அபிராமித் தாயே எமக்கு அருள்வாய்.

இதையும் படிக்கலாமே:
கேட்டது கிடைக்க உதவும் அற்புத மந்திரம்.

இந்த மந்திரத்தை நீங்கள் தினமும் உச்சரிப்பதன் மூலம். அபிராமி தாய் உங்களுக்கு 16 செல்வங்களும் அளித்து அருள்புரிவாள்.