பண வரவு குறையாமல் இருக்க உதவும் அற்புத மந்திரம்

lakshmi

பணத்தை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. பண தேவையினால் பலருக்கும் பல பிரச்சனைகள் வருகிறது. சிலருக்கு கடன் பிரச்சனை, சிலருக்கு தொழில் பிரச்சனை இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை உள்ளது. இதுபோன்ற பண பிரச்சனைகள் நீங்கி, நாளுக்கு நாள் செல்வம் பெறுக உதவும் ஒரு அற்புத மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

lakshmi

ஸ்ரீ தனவர்ஷிணி லக்ஷ்மி மூலமந்திரம் :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனவர்ஷிணி |
லக்ஷ்மீர் ஆகச்ச ஆகச்ச |
மம க்ருஹே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா |

மந்திரத்தை கூறும் முறை:

புதன் கிழமையில் வரும் வளர்பிறை நாளன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த வேலையில் எழுந்து குளித்துவிட்டு தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு பூஜை அறையில் நெய்விளக்கேற்றவேண்டும். இந்த மந்திரத்தை ஜெபிப்பதற்கு ஸ்ரீ லக்ஷ்மி எந்திரம் அவசியம். ஆகையால் இந்த பூஜைக்கு முன்பே அதை தயாராக வைத்துக்கொள்ளவேண்டும்.

mahalakshmi

- Advertisement -

ஸ்ரீ லக்ஷ்மி யந்திரத்தைக் தண்ணீரில் நன்கு கழுவி பின் ஒரு பலகை மீது வெள்ளை துணி போட்டு அதற்கு மேல் செம்பு அல்லது பித்தளை தட்டு வைத்து அதில் ஸ்ரீ லக்ஷ்மி யந்திரத்தை வைக்க வேண்டும்.

பின் ஒரு மஞ்சள் துணியை தரையில் விரித்து அதில் சிறுது தண்ணீர் தெளித்துவிட்டு அதன் மீது கிழக்கு நோக்கி அமர வேண்டும். பின் மேலே உள்ள மூலமந்திரத்தை 108 முறை ஜபித்தபடியே ஸ்ரீ லக்ஷ்மி எந்திரத்திற்கு அட்சதை, குங்குமம் மற்றும் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

lakshmi

பிறகு வலது உள்ளங்கையில் சிறிது நீரை ஊற்றி, மந்திரம் சித்தியாக வேண்டும் என்று ஸ்ரீ லக்ஷ்மி தேவியை மனதார பிராத்தனை செய்துகொண்டு மூலமந்திரத்தை மூன்று முறை ஜெபித்து பின் அந்த நீரை அருந்திவிடவேண்டும். பிறகு துளசி மாலை கொண்டு “ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்” என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும்.

பின்பு மந்திரத்தின் பயனாக வீட்டில் செல்வம் சேரவேண்டும் என்று மகாலட்சுமியிடம் மனதார வேண்டிக்கொண்டு தீப தூபம் காட்டி பூஜையை முடிக்க வேண்டும். இந்த பூஜையின்போது வெற்றிலை, பாக்கு, பால், பழங்கள், பாயசம் போன்றவற்றை படைக்கவும்.

இதையும் படிக்கலாமே:
குளிக்கும் முன்பு தினமும் கூறவேண்டிய மந்திரம்

இந்த மந்திரத்தின் பயனாக வீட்டில் நிரந்தரமாக செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.