தெய்வீக சக்தியை பெற உதவும் சக்தி மந்திரம்

ஒருவர் செய்யும் அனைத்து செயலிற்கும் காரணம் அவரது மனமே. மன பலம் இல்லாத ஒருவர் அனைத்திலும் பலவீனமாகவே இருப்பார். மன பலவீனத்தை அதிகரிப்பது மன துயரமே. ஆகையால் மன துயரத்தை போக்கி, மனதை திடப்படுத்தி, உடல் சக்தியையும் ஆன்ம சக்தியையும், தெய்வீக சக்தியையும் அதிகரிக்க உதவும் ஒரு அற்புதமான மந்திரம் இதோ.

Amman

சக்தி மந்திரம்:

ஓம் தேஜோஅஸி தேஜோமயி தேஹி | வீர்யமஸி
வீர்யம் மயி தேஹி | பலமஸி பலம் மயி தேஹி |
ஓஜோஅஸி ஓஜோமயி தேஹி | மந்யுரஸி மன்யும் மயி
தேஹி | ஸஹோஸி ஸஹோமயி தேஹி || ஓம்

பொருள்:
ஆன்சக்தியாய் இருக்கும் இறைவா, எனக்கு ஆன்ம சக்தியை தர வேண்டுகிறேன். ஒழுக்க சக்தியாய் இருக்கும் இறைவா எனக்கு ஒழுக்க சக்தியை தர வேண்டுகிறேன். உடல் சக்தியாய் இருக்கும் இறைவா, எனக்கு உடல் சக்தியை தர வேண்டுகிறேன், தெய்வீக சக்தியாய் இருக்கும் இறைவா எனக்கு தெய்வீக சக்தியை தர வேண்டுகிறேன். தைரியத்தின் சொரூபமாக இருக்கும் இறைவா எனக்கு தைரியத்தை தர வேண்டுகிறேன். பொறுமையின் உச்சமாய் இருக்கும் இறைவா எனக்கும் பொறுமையை தர வேண்டுகிறேன்.

இதையும் படிக்கலாமே:
தீராத நோய் தீர்க்கும் விஷ்ணு மந்திரம்

இறைவா, உனக்குள் இருக்கும் சக்திகள் அனைத்தையும் எனக்கும் அருள்வாய் என இறைவனிடம் பிராத்திக்க உதவும் இந்த மந்திரமானது யஜூர் வேதத்தில் வருகிறது. இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து இறைவனை போற்றி வர மனமானது செம்மை அடையும். உடல் சக்தி அதிகரிக்கும். நமக்குள் இருக்கும் ஆன்ம சக்தி பெருகும்.