மன சஞ்சலங்களை போக்கும் சாய் பாபா மந்திரம்

Sai-baba-manthiram

ஒரு முறை ஷீர்டி மசூதியில் ஸ்ரீ சாய் பாபாவும், அவருடைய பக்தர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது அங்கு ஒரு இளம் வயது இஸ்லாமியப் பெண் அவரை வணங்குவதற்காக வந்தாள். அவளின் பாபா தரிசனதிற்கு இடையூறாக இருக்கக்கூடாதென்றெண்ணி ஒரு சீடர் வெளியேற முயன்றார். ஆனால் அவரை அங்கேயே இருக்கும் படி பாபா கட்டாயமாகக் கூறிவிட்டார். அப்போது அந்த இஸ்லாமியப் பெண், தான் முகத்திரையை விளக்கி பாபாவைத் தரிசித்தப் போது அப்பெண்ணின் முகத்தைக் கண்ட அச்சீடர் அவளின் முக அழகில் மயங்கினார், இதனால் அவர் மனம் சஞ்சலப்பட்டது. அனைத்தையும் அறிந்தவரான ஸ்ரீசாய் பாபா தன் சீடரின் இந்த எண்ணத்தை தன் மனதாலேயே அறிந்து “மனதின் உணர்ச்சிகளுக்கு இடங்கொடுக்காமல் எதைக் கண்டாலும் அது இறைவனின் அம்சமாகவே தெரியும்” என்று பொதுவாகக் கூறினார். தன்னைப் பற்றி தான் பாபா கூறுகிறார் என்று புரிந்து கொண்ட அச்சீடர் பாபாவிடம் மனதார மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். இது போன்று மனிதர்களின் மனம் எந்த வித சஞ்சலத்தையும் அடையாமல் இருக்க உதவும் சாய் பாபா மந்திரம் இதோ.

Sai baba tamil song

மந்திரம்:
“லோக ஸமஸ்த சுகினோ பாவந்தூ
ஓம் ஷாந்தி,ஷாந்தி, ஷாந்தி”

இம்மந்திரத்தைக் தொடர்ந்து உச்சரித்து வருவதின் மூலம்,பாபா கூறியது போல நம்முடைய மன சஞ்சலங்கள் நீங்கி, விருப்பு வெறுப்பற்ற நிலைப் பெற்று நம் மனம் அமைதி அடைந்து நாமும் எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் நிலையை அடைய முடியும். ஸ்ரீசாய் பாபாவை மிகுந்த உள்ளன்போடு வழிபடுவோர்க்கு, அவர் அனைத்தையும் தருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதையும் படிக்கலாமே:
சாய் பாபா 108 அஷ்டோத்தர மந்திரம்

English Overview:
Here we have Sai baba mantra in Tamil to destroy bad thoughts and increase our will power.