வருமானம் பன் மடங்கு அதிகரிக்க உதவும் சொர்ண பைரவர் மந்திரம்

swarna-bairavar-1

மனிதர்களில் பலர் எவ்வளவு உழைத்தாலும் அவர்களிடம் செல்வம் சேருவது இல்லை. சிலர் அலுவலகத்தில் கடுமையாக உழைப்பர் ஆனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ப்ரோமோஷன் போன்றவை தக்க சமயத்தில் கிடைக்காமல் தட்டிக்கொண்டே போகும். இதனால் அவர்களுக்கான சம்பள உயர்வு இருக்காது. இப்படி நமது வீட்டில் செல்வம் சேருவதற்கு ஏதோ ஒரு விஷயம் தடையாக இருக்கும். அத்தகைய தடைகளை போக்கி செல்வம் பெறுக உதவும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் காயத்ரி மந்திரம் இதோ.

bairavar

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் காயத்ரி மந்திரம்:

ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!

இவ்வுலகில் வாழும் மனிதர்களின் நலனுக்காக அஷ்ட லட்சுமிகள் தங்களது சக்தியின் மூலம் மனிதர்களுக்கு செல்வ வளத்தை தந்தருள்புரிகின்றனர். ஆனால் அவர்களின் சக்தி அவ்வவ்போது குறைவதால், அந்த குறைபாட்டை சரி செய்ய தேய்பிறை அஷ்ட நாட்களில் வரும் ராகு காலத்தில் அஷ்ட லட்சுமிகள் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுகிறார்கள் என்று நம்பப்படுகிறது.

மனிதர்களாகிய நாமும் தேய்பிறை அஷ்ட நாட்களில் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவதன் மூலம் நமக்கு குறைவில்லாத செல்வம் கிடைக்கும். ஸ்ரீஆகர்ஷண பைரவரை வழிபடும் சமயத்தில் மேலே உள்ள அவருக்குரிய காயத்ரி மந்திரம் அதை ஜபித்து வழிபடுவது நல்லது.

இதையும் படிக்கலாமே:
40 வரங்களை அருளும் அற்புத ஸ்லோகம்

- Advertisement -

இந்த அகில உலகத்தையும் காத்து அதே நேரத்தில் தீயவற்றை அழித்து இந்த உலகம் மற்றும் மறுஉலகத்தின் சமநிலையை கட்டி காப்பவர் எல்லாம் வல்லவராகிய சிவ பெருமான். அப்படிப்பட்ட சிவபெருமானின் தத்புருஷ முகத்திலிருந்து உதித்தவர் தான் காக்கும் கடவுளாகிய “பைரவர்”. ஆயக்கலைகள் 64 எனக்கூறுவர். அதுபோல சிவபெருமானிடமிருந்து 64 வகையான பைரவர்கள் தோன்றினார்கள். சிவபெருமானின் அம்சமாக தோன்றியதால், இந்த பைரவ மூர்த்தி தன்னை வழிபடும் மக்களின் தீவினைகளை போக்கி, நன்மைகளை அளிக்கும் கடவுளாக இருக்கிறார்.

kaala bairavar

அதிலும் சிவப்பு நிற மேனியையும், கையில் அபய முத்திரையும் கொண்டு தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அருள் புரியும் இந்த “ஸ்வர்ணாகர்ஷண பைரவர்” மிக ஆற்றல் வாய்ந்தவராவார். வாழ்க்கையில் மிகவும் வறுமையிலும், பொருளாதார சிக்கல்களிலும் இருந்து மீள விரும்புபவர்கள் இந்த ஸ்வர்ணாகர்ஷண பைரவரை அஷ்டமி அன்று வழிபட, உங்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகும்.

English Overview:
Here we have Swarna akarshana bhairava gayatri mantra in Tamil. This can also be called as Swarna bhairava mantra in Tamil. By chanting this mantra one get all his need and he will become wealthy. This mantra needs to be chanted on Ashtami days.