விளக்கு ஏற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

vilakku
- Advertisement -

நாம் காலையிலும் மாலையிலும் இறைவனுக்கு விளக்கு ஏற்றும் போது நம் மனதில் ஏதோ ஒரு வேண்டுதல்களை வைத்துக் கொண்டுதான் இருக்கின்றோம். அந்த வேண்டுதல்கள் விரைவாகவும் முழுமையாகவும் நிறைவேறுவதற்கு இந்த மந்திரத்தைச் சொல்லி விளக்கு ஏற்றுங்கள். நீங்கள் விளக்கு ஏற்றுவதற்கான பலன் உங்களை முழுமையாக வந்தடையும். காலையும் மாலையும் விளக்கு ஏற்றும் போது என்ன மந்திரத்தை சொல்ல வேண்டும். காலைப்பொழுதில் விளக்கினை எந்த நேரத்தில் ஏற்ற வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.

Vilakku

நாம் அதிகாலைப் பொழுதில் நான்கு மணிக்கோ அல்லது ஐந்து மணிக்கோ அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் போது விளக்கினை நம் வீட்டில் ஏற்றலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உள்ளது. பிரம்ம முகூர்த்த நேரமான இந்த அதிகாலைப் பொழுதில் வீட்டில் உள்ளவர்கள் உறங்கிக் கொண்டிருந்தாலும் நம் வீட்டில் விளக்கினை ஏற்றலாம் என்பதை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். விளக்கினை ஏற்றும் பொழுது என்ன மந்திரத்தை கூறலாம் என்று பார்ப்போம். இது தமிழ் மந்திரம் என்பதால் அனைவரும் சுலபமாக உச்சரிக்கலாம்.

- Advertisement -

விளக்கு ஏற்றும் பொழுது

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே

- Advertisement -

விளக்கை ஏற்றிய பின் சொல்ல வேண்டிய மந்திரம்.

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே.

- Advertisement -

vilakku

இந்த இரண்டு மந்திரங்களையும், விளக்கினை ஏற்றும் போதும், ஏற்றிய பின்பும் இறைவனை நினைத்து மனதார பிழையில்லாமல் கூறுவதால், விளக்கு ஏற்றுவதால் கிடைக்கும் முழுப் பலனையும் நாம் அடையலாம்.

விளக்கு ஏற்றும் போது கவனிக்கப்பட வேண்டியவை

விளக்கேற்றும் போது பருத்தியால் ஆன பஞ்சுத்திரி அல்லது தாமரை தண்டின் உள்ளே உள்ள திரியை உபயோகிக்கலாம். விளக்குத்திரியானது இரண்டு அல்லது மூன்றாக திரிக்கப்பட வேண்டும். நல்லெண்ணெய் மற்றும் நெய் விளக்கு ஏற்றுவது நல்லது. இரண்டையும் கலந்து ஏற்றக்கூடாது. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது எண்ணெயில் உள்ள தூசியை கைவிரலால் எடுக்கக் கூடாது. இது தரித்திரத்தை தரும்.

kamatchi vilakku

அடுத்தபடியாக நம் வீட்டில் மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்றிய பின் பெண்கள் செய்யக்கூடாத தவறுகள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.

விளக்கு ஏற்றிய பிறகு பெண்கள் தலை சீவ கூடாது. வீட்டைக் கூட்டக் கூடாது. கூட்டிய குப்பையை இரவு நேரத்தில் வெளியே கொட்டக் கூடாது. துணிகளை துவைக்கவோ, துவைத்த துணிகளை காயவைக்கவோ கூடாது. விளக்கேற்றியவுடன் தலைக்கு குளிக்கக் கூடாது. மாதவிடாய் நாட்களில் மூன்று நாளும் பூஜை அறையை தொடக்கூடாது. விளக்கு ஏற்றிய உடனே சுமங்கலிப் பெண்கள் வெளியே செல்லக் கூடாது. விளக்கேற்றியவுடன் சாப்பிடக் கூடாது. விளக்கு ஏற்றிய பின்பு யாருக்கும் காசு கொடுக்க கூடாது. விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக் கூடாது. விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் இவைகளையெல்லாம் வெளி ஆட்களுக்கு கொடுக்கக்கூடாது.

இதையும் படிக்கலாமே
உங்களுக்கு ஏற்படும் கண் திரிஷ்டி, செய்வினை பாதிப்புகளை போக்கும் மந்திரம் இதோ

இது போன்ற மந்திரம் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have all the details about Vilakku etrum pothu sollum manthiram. Vilakku etrum mantra. Vilakku etrum palangal in Tamil.

- Advertisement -