உங்களுக்கு ஏற்படும் கண் திரிஷ்டி, செய்வினை பாதிப்புகளை போக்கும் மந்திரம் இதோ

muneeswaran

முற்காலத்தில் இந்தியாவில் கிராமங்களில் அதிகமாக இருந்தன அந்த கிராமங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான குல தெய்வத்தை வழிபடும் வழக்கம் இருந்தது அதில் தங்களின் குடும்ப கஷ்டங்கள் தீரும் தங்களுக்கு சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கவும் அதிகம் மக்களால் வழிபடப்படும் ஒரு தெய்வமாக முனீஸ்வரன் இருந்து வருகிறார். தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் காவல் தெய்வமாக வழிபடப்படுகிறார் முனீஸ்வரன். தீய சக்திகளை அழிக்கும் சக்தி படைத்த முனீஸ்வரனின் இந்த மூல மந்திரத்தை துதிப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

muneeswaran

முனீஸ்வரன் மூல மந்திரம்

ஓம் ஹம் ஜடா மகுடதராய
உக்ர ரூபாய துஷ்ட மர்தனாய

சத்ரு சம்ஹாரனாய ஜடா
முனீஸ்வராய நமஹ

muneeswaran

தமிழக மக்கள் பெரும்பாலானோரின் காவல் தெய்வமாக இருக்கும் முனீஸ்வரருக்குரிய மூல மந்திரம் இது. இந்த துதியை தினமும் காலை 3 முறை துதித்து வெளியே செல்வது நல்லது. செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அருகிலுள்ள கிராம கோயிலுக்கு சென்று முன்பாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, இத்துதியை 27 முறை அல்லது 108 முறை துதித்தால் உங்களுக்கு எதிரிகளால் செய்யப்பட்ட செய்வினை ஏவல்களின் கடுமையான பாதிப்புகள் நீங்கும். வீட்டில் அண்டியிருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் வெளியேறும். உடல் நலக்குறைவு, மனகுழப்ப நிலை நீங்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும். ஊரில் முனீஸ்வரர் கோயில் இல்லாதவர்கள் வீட்டிலேயே முனீஸ்வரை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை துதித்து வழிபடலாம்.

- Advertisement -

muneeswaran

வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் மனிதர்கள் நிறைந்த உலகம் இது. அதாவது இந்த பூமியில் நாம் வாழும் காலத்தில் நாம் ஏழையாகவோ அல்லது சராசரி பொருளாதார நிலைமை கொண்டிருந்தால் நம்மை மட்டமாக எண்ணுகின்றனர். அதே நேரம் நாம் சுயமாக செல்வம் ஈட்டி அதை நாம் அனுபவித்தால் மிகுந்த பொறாமை கொண்டு நம்மை மனதிற்குள்ளாகவே சபிக்கின்றனர். ஒரு சிலர் நாம் அழிய வேண்டும் என்பதாற்காக தீய மாந்த்ரீக கலைகளை பயன்படுத்தி நமக்கு துன்பம் தருகின்றனர். மேலும் நம்மை அறியாமல் நம்மை துஷ்ட சக்திகள் பிடிக்கின்றன. அத்தகைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் முனீஸ்வரரை நாம் வழிபடுவதால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
உங்களுக்கு வாக்குவன்மை கிட்ட, வெற்றிகள் உண்டாக மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Muneeswaran moola mantra in Tamil. It is also called as Muneeswaran mantra in Tamil or Moola mantras in Tamil or Seivinai theera in Tamil or Muneeswarar manthiram in Tamil.