இறைவனைத் தேடி நாம் செல்ல வேண்டாம். அந்த இறைவனே நம்மை தேடி வருவார். இந்த 6 குணாதிசயம் கொண்ட மனிதர்களை, அந்த இறைவனே வணங்கியுள்ளாரே!

Krishnar-1-1
- Advertisement -

வாழ்க்கையில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கஷ்ட நஷ்டத்திற்கு நாம் செய்த, பூர்வ புண்ணிய பாவங்கள் தான் காரணம் என்பதை நாம் எல்லோரும் அறிந்திருப்போம். இந்த கர்மவினைகளை குறைக்க நாம் எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருந்தால் அந்த இறைவனின் அருளாசியானது நமக்கு முழுமையாகக் கிடைக்கும்? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்பிட்டு சொல்ல போனால் கிருஷ்ண பரமாத்மாவே இந்த 6 பேரை தினம் தோறும் வழங்கியதாக, மனுதர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

krishnan

கிருஷ்ணரே இறைவன் தான். அந்த பரமாத்மாவே, தினம்தோறும் காலையில் எழுந்தவுடன், கைகூப்பி இவர்களை வணங்குவாராம். ஒரு முறை, கிருஷ்ணனின் மனைவி ருக்மணி, கிருஷ்ணரைப் பார்த்து, ‘பரமாத்மாவான நீங்கள், தினம்தோறும் காலை பொழுதில் கைகூப்பி யாரை வணங்குகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, கிருஷ்ண பரமாத்மாவே கூறிய பதில்தான் இவைகள். இந்த 6 குணாதிசயங்கள் உங்களிடம் இருக்க வேண்டும். கிருஷ்ண பரமாத்மா வணங்கிய, இந்த ஆறு குணாதிசயங்கள் கொண்டவர்களை, நீங்களும் வணங்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவு.

- Advertisement -

முதலில், இந்த உலகத்தில் படைக்கப்பட்ட எல்லா ஜீவராசிகளும் இறைவனால் தான் படைக்கப்பட்டது. இதில் எந்த ஏற்றத் தாழ்வும் கிடையாது, என்று நினைத்து, ஈ எறும்பைகூட மதித்து, எவரொருவர் தினம் தோறும் அன்னதானம் செய்து கொண்டிருக்கிறாரோ, அவர்களை கிருஷ்ண பரமாத்மாவே தினம்தோறும் வணங்குவார். பசி என்று கேட்டு வந்தவர்க்கு, இல்லை என்று நாம் எந்த சூழ்நிலையிலும் சொல்லி விடக்கூடாது. தொடர்ந்து அன்னதானம் செய்து வருபவரை கிருஷ்ண பரமாத்மா வணங்குவதாக மனுதர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, தொடர்ந்து அக்னிஹோத்திரம் செய்பவர்களை கிருஷ்ணபரமாத்மா வணங்குகிறார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அக்னிஹோத்திரம் என்ற வார்த்தை யாகம் வளர்பதை குறிக்கின்றது. தினம்தோறும் நம்முடைய வீட்டில் யாகம் வளர்ப்பது என்பது சாத்தியம் கிடையாது. ஆனால் எவர் ஒருவர் வீட்டில் தினம்தோறும் விளக்கு ஏற்றிவைத்து, தீப ஒளி மூலம் இறைவனை தரிசனம் செய்கின்றாரோ அவர்களையும் கிருஷ்ண பரமாத்மா வழங்குவார் என்பதில் சந்தேகமே கிடையாது.

- Advertisement -

தினம் தோறும் சூரிய தரிசனம் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு தினசரி சந்திர பகவானின் தரிசனத்தையும் நாம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாமல் பவுர்ணமியை அடுத்து வரும், மூன்றாவது நாள் அதாவது, மூன்றாம் பிறையில் சிவசிவா மந்திரத்தை உச்சரித்து எவரொருவர் பிறை தரிசனத்தை காண்கின்றாரோ அவர்களையும், நான் வணங்குவேன் என்று கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார்.

Lord Shiva

மாதம் ஒருமுறையாவது உண்ணா விரதத்தை மேற்கொள்பவர்களையும், தான் வணங்குவதாக கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார். விரதம் இருப்பது என்பது, மாதத்தில் ஒரு முறை உணவு சாப்பிடாமல், கொஞ்சமாக தேவைப்பட்டால் தண்ணீரை மட்டும் பருகி கொண்டு, விரதம் இருக்கவேண்டும். இது நம்முடைய உடலில் இருக்கும் உள் உறுப்புகளையும், சுத்தப்படுத்தும். அதே சமயம் நம்முடைய சக்கரங்கள் சீராக இயங்குவதற்கும், இந்த விரதம் உதவியாக இருக்கும். உள் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பது என்பது, நம்முடைய உடல் ஆரோக்கியத்தை கூட மேம்படுத்தும்.

- Advertisement -

madam

வேதம் படித்தவர்களை கிருஷ்ண பரமாத்மா வணங்குவார் என்றும் மனுதர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. எக்காரணத்தைக் கொண்டும், எந்த சூழ்நிலையிலும் வேதம் படித்தவர்களை நாம், இழிவாக பேசி விடக்கூடாது. அது நமக்கு பாவத்தை சேர்க்கும்.

Krishna-mantra-in-tamil

இதேபோல் பதிவிரதைகளையும் தினந்தோறும் கிருஷ்ணபரமாத்மா, இரு கரங்களைக் கூப்பி வழங்குவார் என்று சொல்லப்பட்டுள்ளது. கணவருக்கு மரியாதை தரும் பதிவிரதைகள் போல, மனைவிக்கு மரியாதை தரும் கணவன்மார்களையும் நிச்சயம் அந்த பரமாத்மா வணங்குவார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

krishna

இப்படியாக இந்த 6 குணாதிசயங்களை கொண்டவர்களை என்றைக்கும் நாம் இழிவாக நடத்தக்கூடாது. அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நாம் கொடுக்க வேண்டும். இந்த குணாதிசயங்கள் நம்மிடத்தில் இருந்தாலும், அந்த எம்பெருமான் தினம்தோறும் நம்மையும் வணங்க தான் செய்வார். ஆக, முடிந்தால் இந்த குணாதிசயங்களை உங்களிடத்தில் வர வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் இப்படிப்பட்டவர்களையாவது வணங்கி, மரியாதை செலுத்தி நமக்கு இருக்கக்கூடிய பாவங்களை குறைத்துக் கொள்ளலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
இந்த 2 பேருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டால் போதும்! எடுக்கும் முயற்சிகள் எந்த தடையும் இல்லாமல் 100% வெற்றி பெறும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -