மண்வாசனை மாறாத முருங்கை கீரை கடையல் கிராமத்து சுவையில் செய்வது எப்படி? இந்தக் கீரையை சாப்பிட்டால் கொள்ளு பாட்டி கையால் கீரை சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்.

murngai-keerai-kadaiyal
- Advertisement -

முருங்கைக்கீரை உடம்புக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. அந்த காலத்தில் எல்லோரும் வீட்டு கொள்ளை பக்கத்தில் இந்த முருங்கைக் கீரையை வளர்த்து வருவார்கள். வாரத்தில் ஒரு முறையோ, அல்லது இரண்டு முறையோ கட்டாயமாக வீட்டில் முருங்கைக்கீரை மதிய உணவில் இருக்கும். உங்க வீட்ல முருங்கைக் கீரை வாங்கினால், ஒரு முறை இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. பாரம்பரியமான சுவையில் முருங்கைக்கீரை கடையல் செய்வது எப்படி. ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

முதலில் ஒரு மீடியம் சைஸில் இருக்கும் முருங்கைக்கீரை கட்டு எடுத்து சுத்தம் செய்து உருவி வைத்துக் கொள்ளுங்கள். எப்போதுமே கீரையை கழுவும் போது அதில் கொஞ்சம் கல்லுப்பை சேர்த்து நன்றாக அலசி கழுவினால் பூச்சுகள் இருந்தாலும் அது செத்துப் போய்விடும்.

- Advertisement -

சுத்தம் செய்த கீரையை தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு பாத்திரத்தையோ அல்லது குக்கர் வைத்து, உங்களுடைய சவுகரியம் அதில் 1/2 கப் அளவு – துவரம் பருப்பை போட்டு, கழுவி தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, மஞ்சள் தூள் போட்டு முக்கால் பாகம் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும். துவரம் பருப்பு குழைய குழைய வேகக் கூடாது.

முக்கால் பாகம் பருப்பு வெந்ததும் அதில் சுத்தம் செய்த முருங்கைக் கீரையை போட்டுக் கொள்ளவும். பிறகு நறுக்கிய தக்காளி பழம் – 2, பச்சை மிளகாய் – 4, தோல் உரித்த சின்ன வெங்காயம் – 15 பல், இந்த பொருட்களை எல்லாம் போட்டு 10 நிமிடம் வேகவிட்டால் கீரையும் பருப்பும் சரியான பக்குவத்தில் வெந்து கிடைக்கும். அடுப்பை அணைத்து விடுங்கள். கீரை சூடாக இருக்கும் போதே அதில் இருக்கும் தண்ணீரை மட்டும் தனியாக வடிகட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கீரையும் மற்ற பொருட்களும் சேர்ந்து இருக்கும் அல்லவா அதை அப்படியே மண் சட்டியில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு, (இதற்கு ஒரு சிறிய தாளிப்பை முதலில் கொடுக்க வேண்டும். சிறிய தாளிப்பு கரண்டியில் 1 ஸ்பூன் – நல்லெண்ணெய் விட்டு, மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், தோல் உரித்து நசுக்கிய பூண்டு பல் – 10 போட்டு பொரிய விடுங்கள்.) இந்த மிளகு சீரகம் தாளிப்பை, தண்ணீரை வடித்து மண்சட்டியில் போட்டு வைத்திருக்கும் கீரையில் கொட்டி மத்தை வைத்து நன்றாக கடைய வேண்டும்.

மீண்டும் இரண்டாவது இதற்கு ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும். 1 – ஸ்பூன் எண்ணெயில், கடுகு – 1 ஸ்பூன், கிள்ளி போட்ட வர மிளகாய் – 4, இவைகளை தாளித்து இதை அப்படியே கீரையில் கொட்டி ஏற்கனவே வடித்து வைத்திருக்கும் தண்ணீரை இதில் ஊற்றி நன்றாக கலந்து, சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள் வேற லெவல் டேஸ்ட் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பாலக் பன்னீர் செய்வது இவ்வளவு ஈஸியா? சத்தான உணவை, சுவையாக செய்து கொடுத்தால் யாரும் வேண்டாம் என்று சொல்லவே மாட்டாங்க.

இந்த கடுகு வரமிளகாய்க்கு பதிலாக, வெங்காய வடகம் வரமிளகாய் தாளித்துக் கொட்டினால் இன்னும் கூடுதல் ருசி இருக்கும். உங்க வீட்டில் வெங்காய வடகம் இருந்தால் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொட்டுக்கொள்ள ஒரு அப்பளம் அல்லது வடாம் இருந்தால் போதும். இந்த சாப்பாடு எவ்வளவு வேண்டுமென்றாலும் சாப்பிடலாம். ஆரோக்கியம் சொல்ல முடியாத அளவுக்கு கிடைக்கும். ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -