உங்களுக்கே தெரியாத மறைமுக எதிரிகள் மற்றும் பொல்லாத திருஷ்டிகள் போன்றவை நீங்க வாரம் 1 முறை இப்படி செய்யுங்கள்.

thirusti-garlic-peel

நாம் உயர்ந்து கொண்டே இருந்தால் சட்டென ஏதாவது ஒரு பிரச்சனை வந்துவிடும். இதற்கு மற்றவர்களின் கண் திருஷ்டிகள் காரணமாக இருக்கிறது. ஒருவர் ஓஹோவென்று வாழ்ந்து கொண்டிருந்தால், அவர்களைப் பார்த்து பொறாமை படாதவர்கள் இருக்க முடியாது. இது இயல்பான ஒரு விஷயம் என்றாலும் இவைகள் திருஷ்டியாக மாறி நல்லவர்களை கூட கஷ்ட நிலைக்கு கொண்டு வந்து விட்டு விடுகிறது. இவைகள் பல இடங்களில் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது.

enemy1

அதை விட கொடுமை மறைமுகமாக இருக்கும் எதிரிகளின் தொல்லை. நேரடியான எதிரிகளை கூட சுலபமாக சமாளித்து விடலாம். ஆனால் மறைமுகமாக இருந்து தாக்குபவர்களை என்னதான் செய்வது? பெரிதாக ஒன்றும் செய்யத் தேவையில்லை. வாரம் ஒரு முறை இது போல் வீட்டில் தூபம் போடுங்கள். இதற்கு தேவையான இரண்டு பொருட்கள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

நேரடியாக இருக்கும் எதிரிகள் தொல்லை நீங்க சாதாரணமாக நாம் திருஷ்டி சுற்றி போட்டாலே போதும். எத்தகைய தீவினைகளும் நம்மை நெருங்காது. ஆனால் மறைமுகமாக சில எதிரிகள் இருப்பார்கள். அவர்கள் நண்பர்களாகவும் கூடவே நம்முடனேயே இருக்க வாய்ப்புகளுண்டு. இவர்களை கண்டு பிடிப்பதும், கையாள்வது மிகவும் கஷ்டமான ஒன்று. அத்தகையவர்களின் தொல்லைகள் நீங்க, அவர்களின் சூழ்ச்சிகளை முறியடிக்க இந்த பரிகாரத்தை செய்யலாம்.

enemy

நாம் உயர்ந்த நிலைக்கு செல்ல செல்ல, நம் மேல் பொறாமைகளின் பார்வைகள் அதிகமாக விழத் துவங்கும். அது போன்ற சமயத்தில் தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்கு முன்னர் நாம் எவ்வளவோ கஷ்டப்பட்டு இருப்போம். அப்போதெல்லாம் திரும்பிப் பார்க்காதவர்கள் கூட, உயர்ந்து கொண்டிருக்கும் பொழுது நம்மிடம் வந்து ஒட்டிக் கொள்வார்கள். இவர்களின் பார்வைகள் மிகவும் பொல்லாதது.

- Advertisement -

பொதுவாகவே திருஷ்டி கழிப்பது மற்றவர்களின் தீய பார்வைகளில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதற்கு தான். புதுமண தம்பதிகளின் மீது வைத்திருக்கும் அத்தனை பேரின் கண்களும் திருஷ்டிகளாக மாறக் கூடும் என்பதால் தான் அவர்களுக்கு திருஷ்டி சுத்தி கழிக்கின்றனர். அதே போல் தான் ஒவ்வொரு நல்ல விஷயங்கள் நடக்கும் பொழுது திருஷ்டிகள் சுத்தி போட்டு மற்றவர்களின் தீய எண்ணங்களை அந்த திருஷ்டியிலேயே எரித்து சாம்பலாக்கி விடுகின்றனர்.

அது போல் இருக்கும் கண் திருஷ்டிகள் மற்றும் மறைமுக எதிரிகளின் தொல்லைகளையும், சூழ்ச்சிகளையும் முறியடிக்க 5 கிராம்புகளை எடுத்துக் கொள்ளுங்கள். தூபம் போடும் தூப கரண்டியில் சிறிதளவு வெள்ளைப் பூண்டின் தோலை உரித்து போட்டுக் கொள்ளுங்கள். வெள்ளைப் பூண்டின் தோலுடன் சேரும் கிராம்பு கொடிய திருஷ்டிகளில் இருந்து பாதுகாக்கிறது. ஐந்து கிராம்புகளை போட்டு, சாம்பிராணி சேர்த்து தூபம் ஏற்றுங்கள். இந்த புகையை வீடு முழுவதும் பரவச் செய்யுங்கள்.

sambrani

இவ்வாறு செய்து வருவதால் உங்களுக்கு நேரடியாக இருக்கும் எதிரிகளும், மறைமுகமாக இருக்கும் எதிரிகளும் துவம்சம் ஆகி விடுவார்கள். அவர்களின் சூழ்ச்சிகளும் முறியடிக்கப்பட்டு விடும். சாதாரண கண் திருஷ்டிகளை விட, மறைமுகமாக நம் மேல் விழும் பொறாமை பார்வைகளுக்கு வலிமை அதிகம். எப்பொழுது யாருக்கு என்ன நடக்கும்? என்று தெரிவதில்லை. நாம் வாரம் ஒருமுறை வீடு முழுவதும் இவ்வாறு தூபம் போட வீட்டில் இருப்பவர்கள் என்றுமே பாதுகாப்பாக இருக்கலாம்.

இதையும் படிக்கலாமே
கார்த்திகை தீபத்தன்று பழைய அகல் விளக்குகளை பயன்படுத்தலாமா? கூடாதா? எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? கார்த்திகை தீப ஸ்பெஷல்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.