- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இப்படி சுவையான மரவள்ளிக்கிழங்கு செய்து கொடுத்தால் உடம்பு இருக்கும் ஆரோக்கியம் கொடுக்கும். சுவையும் அற்புதமாக இருக்கும்

இப்படி சுவையான மரவள்ளிக்கிழங்கு செய்து கொடுத்தால் உடம்பு இருக்கும் ஆரோக்கியம் கொடுக்கும். சுவையும் அற்புதமாக இருக்கும்

- Advertisement -

உடலிற்க்கு ஆரோக்கியம் கொடுக்கக்கூடிய சில உணவுகளை வீட்டில் வாங்கி வைத்து, எவ்வளவு வற்புறுத்தினாலும் சில குழந்தைகள் அவற்றை சாப்பிடுவதில்லை. அவ்வாறு கிழங்கு வகைகள், காய்கறிகள் இவற்றை பெரும்பாலும் அனைவரும் தவிர்த்து விடுகின்றனர். ஆனால் இதுபோன்று மற்றவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கும் உணவுகளையும் அவர்களுக்கு பிடித்த வகையில் சுவையாக சமைத்து கொடுத்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு மரவள்ளி கிழங்கு வைத்து செய்யக்கூடிய ஒரு பொரியலை இப்படி செய்து பாருங்கள். எவரும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிட்டு முடிப்பார்கள். மரவள்ளிக்கிழங்கில் உடம்பிற்குத் தேவையான இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஜீரண பிரச்சனையையும் சரி செய்கிறது. இவ்வளவு ஆரோக்கியம் நிறைந்த மரவள்ளிக்கிழங்கை வைத்து எப்படி சுவையான பொரியல் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

தேவையான பொருட்கள்:
மரவள்ளி கிழங்கு – 5, பெரிய வெங்காயம் – 2, பூண்டு – 4 பல், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் மரவள்ளிக்கிழங்கை, அதன் மேல் உள்ள தோல் அனைத்தையும் சீவி கொள்ளவேண்டும். பிறகு கிழங்கை சுத்தமாக தண்ணீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் இவை அனைத்தையும் ஒரு குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு மரவள்ளி கிழங்கு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும்.

அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு குக்கரை மூடி, விசில் போட்டு, அடுப்பின் மீது வைத்து 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பிறகு குக்கரில் பிரஷர் குறைந்ததும் குக்கர் மூடியைத் திறந்து மரவள்ளிக்கிழங்கை வெளியே எடுத்து ஆற வைக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பின்பு மரவள்ளிக்கிழங்கின் நடுவே இருக்கும் நார் போன்ற பகுதியை மட்டும் நீக்கிவிடவேண்டும். பிறகு இவற்றை சிறு துண்டுகளாக கைகளால் உடைத்து கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கி விட வேண்டும். அதன்பின் மசாலாக்கள் சேர்த்து கலந்து வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கை இவற்றுடன் சேர்த்து 5 லிருந்து 10 நிமிடத்திற்கு வதக்கி விட்டு, கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான பொரியல் தயாராகிவிடும்.

சற்று முன்