- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இந்த வடை சுட உளுந்தே தேவை இல்லை. இப்படி ஒரு சூப்பர் ரெசிபியை இவ்வளவு ஹெல்தியான...

இந்த வடை சுட உளுந்தே தேவை இல்லை. இப்படி ஒரு சூப்பர் ரெசிபியை இவ்வளவு ஹெல்தியான ஈவினிங் ஸ்நாக்ஸா சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க.

- Advertisement -

வடை என்றாலே நமக்கு தெரிந்தது உளுந்து வடை, கடலை பருப்பு வடை இவை தான். இந்த இரண்டு பருப்பை வைத்து இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக வாழைப்பூ வடை. மிளகு வடை இப்படி கொஞ்சம் வகைகளை கேள்விப்பட்டிருப்போம். எது எப்படி இருந்தாலும் வடை செய்ய பருப்பு வேண்டும் தானே. பருப்பே இல்லாமல் வடை சுட முடியும் என்பது ஒரு புது ரெசிபி தான். அந்த வித்தியாசமான ரெசிபி மரவள்ளிக் கிழங்கை வைத்து செய்யும் வடை தான். இப்பொழுது நாம் ஹெல்தியான மரவள்ளி கிழங்கு வடை வடை எப்படி செய்வது என்று தான் எப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்: மரவள்ளி கிழங்கு – 1/2 கிலோ, வெங்காயம் மீடியம் சைஸ் – 1 பொடியாக நறுக்கியது, இஞ்சி- 1 துண்டு பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் – 4 பொடியாக நறுக்கியது, கறிவேப்பிலை கொத்தமல்லி ஒரு கைப்பிடி, சீரகம் – 1 ஸ்பூன், உப்பு -1/2 ஸ்பூன் அரிசி மாவு – 1/2 கப்.

- Advertisement -

முதலில் அரை கிலோ மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நீங்கள் குக்கரிலும் வேக வைக்கலாம் அல்லது ஏதாவது ஒரு பாத்திரத்தில் போட்டும் இந்த கிழங்கை வேக வைக்கலாம்.

இப்படி வேக வைத்த மரவள்ளிக்கிழங்கை தண்ணீர் வடித்து எடுத்துக் கொண்டு ஒரு பவுலில் போட்டு நன்றாக மசித்து கொள்ள வேண்டும். கொஞ்சம் கூட கட்டிகள் இல்லாமல் மசித்து கொள்ள வேண்டும். இப்படி மசித்த உடன் இந்த கிழங்கு உளுந்த பருப்பு அரைத்த மாவு பதத்திற்கு வந்து விடும்.

- Advertisement -

இந்த கிழங்கு மாவில் அரை கப் பச்சரிசி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் எண்ணெயை ஊற்றி நன்றாக காய்ந்தவுடன் எப்போதும் வடை சுடுவது போலவே கையில் கொஞ்சம் எண்ணெய் தடவிக் கொண்டு இந்த மாவை எடுத்து நடுவில் துளைகளை இட்டு வடையை சுட்டு எடுக்க வேண்டியது தான்.

இதையும் படிக்கலாமே: காலையில் வடித்த சாதம் மீந்து விட்டதா கவலைய விடுங்க, அந்த மீந்த சாத்தை வைத்து அருமையான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி பண்ணிடலாம்.

மிகவும் எளிமையாக செய்யக்கூடியதுதான் இந்த மரவள்ளி கிழங்கு வடை. அது மட்டும் இன்றி மரவள்ளி கிழங்கு உடலுக்கும் மிகவும் நல்லது. இதுபோன்று கிழங்கு வகைகளில் இப்படி ருசியாக வடை செய்து கொடுத்தால் உங்கள் வீட்டு பெரியவர் முதல் குழந்தை வரை அனைவரும் விரும்பி திரும்பத் திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இந்த வடை ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

சற்று முன்