மார்கழி மாதம் முடிவதற்குள் இந்த ஒரு தானத்தை செய்து விட்டால் தீராத நோய் தீரும். உங்களுக்கு அடுத்து வரும் பல தலைமுறைகள் செல்வ செழிப்போடு ஆரோக்கியத்துடன் வாழும்.

dhanam
- Advertisement -

இன்று காசு பணத்தோடு வாழ்கின்றோமோ இல்லையோ, கை நிறைய மருந்து மாத்திரையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆரோக்கியம் என்பதே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இல்லாமல் போய்விட்டது. நிறைய காசு பணம் சம்பாதிக்கின்றோமோ இல்லையோ, நிறைய பாவத்தை சேர்த்து வைத்திருக்கின்றோம். பாவ கணக்கு நமக்கு, மருந்து மாத்திரையை அட்டை அட்டையாக சேர்த்து வைத்திருக்கிறது. இந்த பாவத்தை எல்லாம் எங்கே தான் போய் கழிப்பது. கர்ம வினைகளை கழிப்பதற்காகத்தான் இந்த மார்கழி மாதம் நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளது. இறையருள் நிறைந்த இந்த மார்கழி மாதத்தில் நாம் செய்யக்கூடிய சில தர்ம காரியங்கள் நமக்கு இருக்கும் கர்ம வினைகளை படிப்படியாக குறைக்கும். மார்கழி மாத தானம் பற்றிய ஆன்மீக தகவல் இதோ உங்களுக்காக.

மார்கழி மாதத்தில் பெண்கள் காலையில் எழுந்து போடக்கூடிய அரிசி மாவு கோலம் தான் முதல் தர்ம காரியம். மார்கழி மாதம் முழுவதுமே இதை செய்ய வேண்டும். இதை ஒருநாள், இரண்டு நாள் என்று கணக்கு வைத்து கொள்ளாதீர்கள். மார்கழி மாதம் மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் தினமும் இந்த தர்ம காரியத்தை செய்து வந்தால் உங்கள் குடும்பம் கோடான கோடி புண்ணியத்தை தரும். நான்கு எறும்புகள் கோலம் போட்டு இருக்கும் அரிசி மாவை சாப்பிட்டுவிட்டு உங்கள் வாசலில், உங்கள் குடும்பத்தை மனதார வாழ்த்து விட்டுச் செல்லும்.

- Advertisement -

மார்கழி மாதம் செய்ய வேண்டிய தானம் 

பைக்கில் செல்லும்போது, பேருந்தில் போகும்போது, காரில் போகும்போது, நடந்து செல்லும் போது கூட, ரோட்டோரங்களில் கஷ்டப்படக்கூடிய எத்தனையோ குடும்பங்களை பார்த்திருக்கின்றோம். அந்த ஏழை குழந்தைகளுக்கு போட்டுக் கொள்ள ஒரு நல்ல துணி கூட இருக்காது. இரவு இந்த குளிரில், தரையில் விரிப்பதற்கு பாய் கூட இல்லாமல் கோணி பைகளை விரித்து தூங்கக்கூடிய ஏழைகள் இன்னும் இருக்கிறார்கள். அதை கண்கூடாக நாம் பார்ப்போம்.

அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று கூட நினைப்போம். ஆனால் யாராவது ஏதாவது சொல்லி விடுவார்களோ. இவர்களுக்கு உதவி செய்தால் வேறு ஏதாவது பிரச்சனை வருமோ என்ற அச்சத்தில், அந்த உதவியை நாம் செய்ய மாட்டோம். தயவு செய்து இந்த மார்கழி மாதத்தில் இப்படி கஷ்டப்படக்கூடிய ஒரு குடும்பத்திற்கு தரையில் விரித்து படுக்க பாய் இரண்டு, வாங்கி தானம் செய்தால் உங்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் தீராத நோய் நொடிகள் படிப்படியாக குறையும். குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் வயதான முதியவருக்கு பெட்ஷீட் வாங்கிக் கொடுப்பது அவ்வளவு சிறப்பான பலனை கொடுக்கும்.

- Advertisement -

மருந்து மாத்திரை வாங்க ஆயிர கணக்கில் செலவு செய்வோம். நூற்றுக்கணக்கில் இந்த பொருட்களை வாங்கி நிச்சயமாக நம்மால் தானம் கொடுக்க முடியும். (சில பேருக்கு தானம் செய்ய மனசு வராது) உங்கள் குடும்ப நன்மைக்காக மார்கழி மாதம் முடிவதற்குள் ஒரு ஏழை குடும்பத்திற்கு பாய், பெட்ஷீட் இந்த இரண்டு பொருட்களை முடிந்த வரை தானமாக வாங்கி கொடுக்க பாருங்கள். உண்மையாக கஷ்டப்படும் ஒரு ஏழைக்கு வாங்கி கொடுத்தால் கூட புண்ணியம் தான்.

வழக்கத்தை விட குளிர்காலத்தில் இந்த பறவைகளின் வருகை அதிகாலை வேளையில் நிறைய இருக்கும். அப்படி அந்த பறவைகள் எல்லாம் அதிகாலை வேலையில் எழுந்து பறக்கும் போது அவைகளுக்கு பசியும் அதிகமாக இருக்கும். ஆகவே இந்த மார்கழி மாதத்தில் ஒரு சிறிய கிண்ணத்தில் உங்களால் முடிந்த சாப்பாட்டை போட்டு மொட்டை மாடியில் அல்லது பால்கனியிலோ வையுங்கள். இரண்டு ஸ்பூன் அரிசியை போட்டு வைத்தால் கூட அந்த பறவைகள் வந்து சாப்பிட்டு கொஞ்சம் உணவை தன்னுடைய குஞ்சுகளுக்கு எடுத்து செல்லும். பறவை பறந்து போகும்போது இளைப்பாறும் போது அதை நிச்சயம் வந்து சாப்பிடும்.

இதையும் படிக்கலாமே: பெண்களின் மனதில் இருக்கும் இனம் புரியாத கவலையை போக்கும் கிராம்பு. எவ்வளவு குழப்பம் இருந்தாலும், தெளிவான முடிவை எடுப்பதற்கு இந்த ஒரு பரிகாரம் போதும்.

வீதிகளில் குளிரில் சுற்றி திரியும் பைரவர்களுக்கு உங்களால் முடிந்த பிஸ்கட்டை போடலாம். அதிகாலை வேலை, இரவு வேலை என்று குளிர் நேரத்தில் இந்த வாயில்லா ஜீவன்களுக்கு நிச்சயமாக பசி இருக்கும். அவைகளின் பசியை போக்கக்கூடிய இந்த புண்ணிய காரியங்களை எல்லாம் செய்ய எல்லோராலும் முடியுமா. நிச்சயமாக முடியாது. பாவ கணக்கு தீர வேண்டும் என்று தலைவிதி இருப்பவர்கள், புண்ணியம் செய்தவர்களால் மட்டுமே இந்த புண்ணிய காரியங்களை செய்வதற்கு உண்டான சந்தர்ப்பங்கள் கிடைக்கும். இந்த பதிவை நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் நீங்கள் செய்த புண்ணியம் தான், நீங்கள் செய்த பாவத்தை தீர்ப்பதற்கு உண்டான ஒரு வழியை இந்த பதிவின் மூலம் காட்டிக் கொடுத்திருக்கிறது என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -