மார்ச் மாத ராசி பலன்கள் – 2020

march-matha-rasi-palan

மேஷம்

Mesham Rasi
இந்த மாதம் உங்களுக்கு பணவரவு சீராக இருக்கும். உங்களது வீட்டில் தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் சுமூகமாக நடைபெறும். வேலைக்கு சென்று கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கடந்த மாதம் உறவினர்களிடையே இருந்த பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும். மொத்தத்தில் அதிகப்படியான நன்மை தரக்கூடிய வாரமாகத்தான் இது அமையும். சொந்தத் தொழிலில் புதிய முயற்சிகள் ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் இந்த மாதத்தில் தொடங்குவது நல்ல முன்னேற்றத்தை தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிவிப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.

ரிஷபம்

Rishabam Rasi
அதிகப்படியான நன்மைகளை தரக்கூடிய மாதமாக தான் இந்த மாதம் அமையப்போகிறது. சந்தோஷத்திற்கு எந்த ஒரு குறைவும் இருக்காது. நல்ல வருமானம் இருக்கும். ஆனால் அதற்கு பின்னாலேயே சுப விரயச் செலவுகள் வந்து கொண்டே இருக்கும். வீட்டில் விசேஷங்களுக்கு பஞ்சமிருக்காது. புதிய வீடு, மனை வாங்கும் யோகம் அமையும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலைக்கு சென்று கொண்டிருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

- Advertisement -

வழிபட வேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அனுமன் கோவிலுக்கு சென்று குங்குமம் அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

மிதுனம்

midhunam
கடந்த மாதம் இருந்துவந்த குடும்ப பிரச்சனைகள் அனைத்தும் இந்த மாதம் ஒரு முடிவுக்கு வரும். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். திருமண பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். கோபத்தை மட்டும் சற்று கட்டுப்படுத்திக் கொள்வது நல்ல பலன்களை கொடுக்கும். பணம் கொடுக்கல் வாங்கல்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகள் எதுவும் சொந்தத் தொழில் எடுக்க வேண்டாம். அதிக முதலீடு செய்ய வேண்டாம். செய்துவரும் தொழிலை அப்படியே நடத்தி வருவது நல்ல லாபத்தைக் கொடுக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு முல்லைப் பூ சூட்டி வழிபடுவது நல்ல பலனைக் கொடுக்கும்.

கடகம்

Kadagam Rasi
அதிகப்படியான மாற்றங்களை சந்திக்க வேண்டிய மாதமாக தான் உங்களுக்கு இது அமையும். பணவரவிற்கு எந்த ஒரு குறைபாடும் இருக்காது. சொத்துக்களை வாங்குவதாக இருந்தாலும், விற்பதாக இருந்தாலும் இந்த மாதத்தில் செய்யலாம். உங்களுக்கு இருந்த கஷ்டங்கள் எல்லாம் நீங்கி மன நிம்மதி அடையக்கூடிய காலம் வந்துவிட்டது. அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்தி வந்து சேரும். திருமணப் பேச்சுவார்த்தை நல்ல முடிவுக்கு வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் வேலையில் இருப்பவர்கள், செய்து கொண்டிருக்கும் வேலையை எக்காரணத்தைக் கொண்டும் விட்டுவிட வேண்டாம். சுயதொழில் செய்பவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் கடன் வாங்க வேண்டாம். யாரையும் நம்பி பொருட்களை கடனாகவும் கொடுக்க வேண்டாம். பணப் பரிமாற்றத்தின் மூலம் வியாபாரம் செய்வது நன்மை தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: துர்க்கை

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தீபமேற்றி வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

சிம்மம்

simmam
உங்களுக்கு தேவைக்கு அதிகமாகவே பணவரவு இருக்கும். நீங்கள் வேலை செய்து கொண்டிருந்த இடத்தில் இதுநாள்வரை இருந்த பிரச்சினைகள் இந்த மாதம் தீர்ந்துவிடும். சொந்தத் தொழிலில் பொறுமையோடு முடிவெடுப்பது அவசியம். அவசரப்பட்டு எந்த காரியத்திலும் ஒரு முடிவினை எடுத்துவிட வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. அனாவசிய பேச்சை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். முடிந்தவரை முக்கியமான முடிவுகள் எதையும் எடுக்காமல் அடுத்த மாதம் வரை தள்ளிப் போடலாம். அவசியமான முடிவுகளை எடுப்பதாக இருந்தால் பெரியவர்களை ஆலோசனை செய்து பொறுமையாக முடிவு எடுப்பது நன்மை தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சூரியன், சிவன்

பரிகாரம்: காலை எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு, சிவனை நினைத்து 10 நிமிடம் தியானம் செய்வது நல்ல பலனைத் தரும்.

கன்னி

Kanni Rasi
உங்கள் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் அதிக கவனம் எடுத்து பார்த்துக் கொள்ளவும். மாணவர்கள் படிப்பு விஷயத்தில் அதிக கவனத்தோடு ஈடுபடவேண்டும். சொந்தத் தொழில் செய்பவர்கள் தொழிலில் அதிக முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், உடன் பணிபுரிபவர்களிடம் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நன்மை தரும். இந்த மாத இறுதியில் திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிரச்சினைகள் வந்தாலும் பொறுமையோடு கையாளுங்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எந்த வேலை கிடைத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தேவை. எதிர்பார்த்த சம்பளம் இல்லை என்று கிடைக்கும் வேலையை எக்காரணத்தைக் கொண்டும் விட்டுவிட வேண்டாம்.

வழிபட வேண்டிய தெய்வம்: முருகர்

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் முருகனுக்கு அரளிப்பூ சாத்தி வழிபடுவது நல்ல பலனைக் கொடுக்கும்.

துலாம்

Thulam Rasi
இந்த மாதம் உங்களின் சந்தோசம் அதிகரிக்கக்கூடிய மாதமாக தான் அமையப்போகிறது. மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களின் தேவைக்கு அதிகமாகவே இந்த மாதம் பணவரவு இருக்கும். பயணங்களின்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம். உடல் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் தேவை. நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வோடு இடமாற்றமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் நன்றாக சிந்தித்து முடிவெடுப்பது நன்மை தரும். இந்த மாத இறுதியில் திருமணப் பேச்சுவார்த்தை நல்ல முடிவுக்கு வரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: அம்மன்

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றுவது நல்ல பலனைத் தரும்.

விருச்சிகம்

Virichigam Rasi
இந்த மாதம் பண வரவிற்கு எந்தக் குறைவும் இருக்காது. ஆனால் கணவன் மனைவிக்கு இடையே வீண் பேச்சுக்கு இடம் தரவேண்டாம். விட்டுக்கொடுத்து சென்றால், சண்டை வராமல் தடுக்கலாம். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதாக இருந்தால் இந்த மாதம் தொடங்கலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலையில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டைப் பெறும் காலம் வரப்போகிறது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. அதிகப்படியான நன்மைகள் நடந்தாலும், பொறுமையாக இருப்பது அவசியம் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சிவன்

பரிகாரம்: தினம் தோறும் சிவனை நினைத்து வீட்டிலேயே பத்து நிமிடம் தியானம் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

தனுசு

Dhanusu Rasi
இந்த மாதம் உங்களுக்கு யோகமான மாதமாக தான் அமையப்போகின்றது. சுகபோகமான வாழ்க்கையை அனுபவிக்கப் போகிறீர்கள். உங்களது வேலையில் ஏற்படக்கூடிய மாற்றம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அதிகப்படியான நன்மைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது என்ற கர்வத்தில் அனாவசிய பேச்சுக்களை பேசிவிட வேண்டாம். வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டு. மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணப் பேச்சுவார்த்தையில் இருந்த தடங்கல்கள் நீங்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: முருகன்

பரிகாரம்: தினம் தோறும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்ல பலனைத்தரும்.

மகரம்

Magaram rasi
பண வரவு சற்று மந்தமான சூழ்நிலையில் தான் இருக்கும். சுமாரான மாதமாக தான் இது உங்களுக்கு அமையப்போகிறது. கல்வியில் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களிடம் அனாவசிய பேச்சை குறைத்துக் கொள்ளலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள் உங்களது பங்குதாரர்களிடம் அளவோடு பேசுவது நல்லது. மொத்தத்தில் உங்களது பேச்சை குறைத்துக் கொண்டால், எந்த பிரச்சனையும் வராது. திருமண முயற்சிகள் கைகூடும். வருமானமும் குறைவாகத்தான் இருக்கும்.  செலவுகளும் அதிகமாகத்தான் இருக்கும். சற்று சிரமங்கள் வந்தாலும் சமாளிக்க வேண்டிய மனப்பக்குவம் உங்களிடம் வந்து விடும்.

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

கும்பம்

Kumbam Rasi
இந்த மாதம் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபட வேண்டாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு குறைவிருக்காது. திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் முதலீடு செய்ய வங்கிகளில், கடன் பெற முயற்சி செய்யலாம். வேலைக்கு சென்று கொண்டு இருப்பவர்கள் பணியில் சற்று கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: விஷ்ணு

பரிகாரம்: தினமும் காலையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

மீனம்

Meenam Rasi
இந்த மாதம் பணவரவிற்கு எந்த பற்றாக்குறையும் ஏற்படாது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். இதுநாள் வரை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவி உயர்வு உங்களுக்கு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. உங்கள் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலை ஏற்படும். புதியதாக எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனத்தோடு படிப்பது நல்ல முன்னேற்றத்தை தரும். பயணங்களின்போது கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

வழிபட வேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது அம்மன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றுவது நல்ல பலனை தரும்.

English Overview:
Here we have March month Rasi palan 2020 in Tamil or March matha Rasi palangal in Tamil. This March month Rasi palangal covers Mesham to Meenam Rasi.