இந்த கலியுகத்தில் மனிதர்கள், கடன் என்னும் மாய வலையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள். சித்தர்களுக்கும், ஞான புருஷர்களுக்கும் இது அன்றே தெரிந்திருக்கிறது. கலியுகத்தில் கடனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக தான், இப்படிப்பட்ட அதிசயமான நேரத்தை எல்லாம் நமக்காக விட்டுவிட்டு சென்று உள்ளார்கள் போல.
வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்காகவே சொல்லப்பட்டுள்ள நேரம் தான் இந்த மைத்ரேய முகூர்த்த நேரம். மாதம் தோறும் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் இந்த மைத்ரேய முகூர்த்த நேரம் ஆனது வரும். இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் வாங்கிய கடனிலிருந்து ஒரு சிறு தொகையை திருப்பி அடைத்தால் போதும்.
நமக்கு இருக்கும் மொத்த கடனும் சீக்கிரம் அடையும் என்பது நம்பிக்கை. வெறும் நம்பிக்கை மட்டும் அல்ல. இந்த பரிகாரத்தை நிறைய பேர் செய்து பலன் கண்டுள்ளார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
மார்ச் மாத மைத்ரேய முகூர்த்த நேரம்
அந்த வகையில் இந்த மார்ச் மாதத்தின் முதல் மைத்ரேய முகூர்த்தமானது நாளைய தினம் 3-3-2025-ம் தேதி வரவிருக்கிறது. நாளைய தினத்தில் குறிப்பிட்ட அந்த மைத்ரேய முகூர்த்தம் எந்த நேரத்தில் வருகிறது என்பதை பற்றியும், அந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றியும் தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
இந்த நாளில் இன்னும் ஒரு அதிசயமும் இருக்கிறது. 3-3-2025, தேதியில் 3. தேதியும் மாதத்தையும் கூட்டினால், 6. வருடத்தைக் கூட்டினால் 9 என்ற எண் வந்திருக்கிறது. இந்த நாளில் 369 என்ற எண் மறைமுகமாக சேர்ந்து வந்திருக்கின்றது. இது ஒரு பிரபஞ்ச வசிய நம்பர். ஏஞ்சல் நம்பர் என்று சொல்லுவார்கள். ஆக மொத்தத்தில் இந்த நாள் ஒரு சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் பரிகாரங்கள் நமக்கு இரட்டிப்பு பலனை கொடுக்கும் என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்வோம்.
3-3-2025 திங்கட்கிழமை காலை 8:46 மணி முதல் 10:33 மணி வரை மைத்ரேய முகூர்த்தமானது இருக்கிறது. இதன் மத்திய பகுதி என்று பார்த்தால் காலை 9:21 மணி முதல் 9:56 மணி வரை இருக்கிறது. இந்த நேரத்தில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும். வங்கி கடன் நகை கடனை திருப்பித் தருவதற்கும் இந்த நேரம் உகந்ததாக இருக்கும்.
வாங்கிய கடனை மொத்த தொகையையும் திருப்பி கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாங்கிய கடனிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை திருப்பி செலுத்தும் போது, அந்த கடன் மொத்தம் படிப்படியாக சீக்கிரம் குறையும் என்பதுதான் நம்பிக்கை.
ஒரு உதாரணத்திற்கு உங்களுக்கு 2 லட்சம் ரூபாய் கடன் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 20 ஆயிரம் ரூபாயை, இந்த நேரத்தில் திருப்பிக் கொடுத்தால், 2 லட்சம் கடன் அவ்வளவு எளிமையாக சீக்கிரத்தில் அடைந்து விடும் என்பது தான் இந்த பரிகாரத்திற்கு பின்னால் இருக்கக்கூடிய சூட்சமம், 2 லட்ச ரூபாய் கடன் இருக்கிறது.
எங்களிடம் 20 ரூபாய் தான் இருக்கிறது என்ன செய்வது. இதை கொண்டு போய் கடன் கொடுத்தவரிடம், திருப்பி கொடுத்தால் ஏற்றுக்கொள்வாரா. நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என்ன செய்வது. ஒரு மொய்க்கவர், அல்லது பிரவுன் கவர், வெள்ளை கவர் ஏதோ ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள்.
அதன் கவர் மேலே யாரிடம் நீங்கள் கைநீட்டி கடன் வாங்கினீர்களோ, அந்த நபரின் பெயரை எழுதி, அந்த 20 ரூபாயை அவர் கையில் கொடுத்ததாக நினைத்து, அந்த கவருக்குள் போட்டு விடுங்கள். ஒரு பிரியாணி இலையில் கடன் சீக்கிரம் அடைய வேண்டும் என்று எழுதி, அந்த கவருக்குள்ளேயே போட்டு உங்கள் வீட்டு அலமாரியில் வைத்து விடலாம். இந்த பரிகாரத்தை நாளைய தினம், குறிப்பிட்ட நேரத்தில் செய்தால் உங்கள் 2 லட்ச ரூபாய் கடனும் சீக்கிரம் அடையும்.
உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இந்த மைதரேய முகூர்த்த நேரத்தை நம்பிக்கையோடு, குலதெய்வத்தை நினைத்து பயன்படுத்தி பாருங்கள். நிச்சயம் கடன் சுமையிலிருந்து சீக்கிரமாக வெளிவருவீர்கள். இரண்டு லட்ச ரூபாய் கடன் இருப்பவர்கள் மட்டும்தான், இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.
இதையும் படிக்கலாமே: 3-3-2025 சதுர்த்தி திதி விநாயகர் வழிபாடு
பத்தாயிரம் ரூபாய் கடன் இருந்தாலும், இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். கோடி ரூபாய் கடன் இருந்தாலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். இந்த மைதரேய முகூர்த்த நேரம் நிச்சயம் உங்களை ஏமாற்றாது. ஆனால் நம்பிக்கை ரொம்ப ரொம்ப முக்கியம். இந்த தகவலை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மனமகிழ்ச்சியுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.