மாதம் தோறும் இரண்டு சதுர்த்தி திதிகள் வரும். பௌர்ணமி முடிந்து வரக்கூடிய சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி. அமாவாசை முடிந்து வரக்கூடிய சதுர்த்தி திதி, வளர்பிறை சத்துருத்தி. நாளைய தினம் திங்கட்கிழமை வளர்பிறை சத்துருத்தி விரதம். உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று, இந்த விளக்கை மட்டும் போடுங்கள்.
விநாயகர் கோவிலுக்கு முடிந்தால் இந்த ஒரு பொருளை வாங்கி தானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கை படிப்படியாக முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. குறிப்பாக பண கஷ்டத்தில் இருப்பவர்கள், கடன் சுமையில் சிக்கி இருப்பவர்கள் எல்லாம், செல்வ நிலையில் முன்னேற இந்த வழிபாடு சிறப்பான ஒரு வழியை காட்டிக் கொடுக்கும்.
சதுர்த்தி திதி வழிபாடு
திங்கட்கிழமை சதுர்த்தி திதி அன்று மாலை விநாயகர் கோவிலுக்கு செல்ல வேண்டும். விநாயகருக்கு உங்கள் கையால் அருகம்புல்லை எடுத்து மாலையாக கட்டிக் கொண்டு போய் போடுங்கள். கட்டிய மாலையை வாங்குவதை விட, நாம் கட்டின மாலைக்கு விசேஷ பலன். பிறகு விநாயகருக்கு இரண்டு மண் அகல் விளக்குகளில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, வாழைத்தண்டு திரி போட்டு, தீபம் ஏற்ற வேண்டும். இது அவ்வளவு அற்புதமான பலனை உங்களுக்கு கொடுக்கும்.
இந்த வாழைத்தண்டு திரியானது நாட்டு மருந்து கடைகளில் சுலபமாக கிடைக்கும். வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி உங்களுக்கு அந்த திரி கிடைக்கவே இல்லை என்றால், வாழைத்தண்டை வாங்கி வட்ட வட்டமாக நறுக்கும் போது அதிலிருந்து கொஞ்சம் நார் கிடைக்கும். அதையெல்லாம் சேகரித்து திரித்து நிழலிலேயே காய வைத்தால் வாழைத்தண்டு திரி தயார்.
இந்த திரி போட்டு விநாயகர் கோவிலில் தேங்காய் எண்ணெயில் விளக்கு போட்டால் உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் அத்தனை கஷ்டங்களும் அன்றோடு முடிந்து விட்டது என்று வைத்துக் கொள்ளலாம்.
பிறகு உங்களுடைய வாழ்க்கையில் வசந்தம் வீசத் தொடங்கிவிடும். ரொம்ப ரொம்ப நல்ல பரிகாரம் இது. சுலபமான பரிகாரம். சக்தி வாய்ந்த பரிகாரம். விநாயகரை நம்பி இதை செய்யுங்கள். அடுத்தது ஒரு தகவல். விநாயகர் பற்றிய சிறப்பு தகவல். விநாயகருக்கு அச்சு வெல்லம் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். கோவிலில் விநாயகருக்கு தினமும் சர்க்கரை பொங்கலோ அல்லது வேறு ஏதாவது இனிப்பு பலகாரங்கள் செய்வதற்காக அச்சு வெல்லம் வாங்கி, கோவில் குருக்களிடம் தானமாக கொடுங்கள்.
விநாயகருக்கு சர்க்கரை பொங்கல் செய்யும் போது, இந்த வெல்லத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லி தானம் கொடுத்து பாருங்கள். உங்கள் வாழ்க்கை அன்றிலிருந்து இனிமையாக மாறிவிடும். இந்த பரிகாரத்தையும் வளர்பிறை சதுர்த்தி திதி அன்று, தேய்பிறை சதுர்த்தி திதி அன்றும் செய்யலாம். ரொம்பவும் நல்லது.
அடுத்ததாக இன்னொரு அரிய தகவல் உங்களுக்காக. விநாயகருக்கு ரொம்பவும் பிடித்த காய் அவரைக்காய். திங்கட்கிழமை விநாயகருக்கு உகந்த நாள். வாரம் தோறும் வரக்கூடிய திங்கட்கிழமையில், அவரைக்காய் பொரியல் செய்து விநாயகருக்கு படைத்து விட்டு, அந்த உணவை நீங்கள் சாப்பிட்டால் விநாயகரின் அருள் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: தேவதை நாள் வழிபாடு
உங்களுக்கு இருக்கும் காரிய தடைகள் விலகும் என்பது நம்பிக்கை. இந்த அவரைக்காய் பொரியலை சதுர்த்தி திதியிலும் சமைத்து சாப்பிடலாம். விநாயகருக்கு கொஞ்சமாக அவரைக்காய் பொரியல் நெய்வேத்தியமாக வைத்துவிட்டு நீங்கள் மதிய உணவிற்கு அதையே பயன்படுத்திக் கொள்ளுங்கள். அத்தனை சிறப்பான பலன் உண்டு என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.