மார்கழி மாத ராசி பலன் – 12 ராசிக்கும் துல்லிய கணிப்பு

Margali matha rasi palan

மேஷம்:
Mesham Rasi

இந்த மாதம் உங்களுக்கு பணவரவு சீராக இருக்கும். உங்கள் தொழிலில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். உங்கள் தொழிலுக்காக நீங்கள் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றியில் முடியும். உங்களின் பிள்ளைகளினால் உங்களுக்கு பெருமை தேடி வரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே முன்னேற்றம் அடைய முடியும். சனிக்கிழமை தோறும் சனீஸ்வரனுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடலாம்.

ரிஷபம்:
Rishabam Rasi

இந்த மாதம் நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து உங்களுக்கு பணவரவு கிடைக்கும். இதன்மூலம் புதிய பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் வரும் சூழ்நிலை உள்ளதால் அனாவசியமான பேச்சுக்களை தவிர்த்துக் கொள்ளலாம். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. மாணவர்களுக்கு படிப்பில் அதிக கவனம் தேவை. வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

மிதுனம்:
midhunam

இந்த மாதம் உங்களுக்கு பணவரவு சீராக இருக்கும். உங்கள் உடல்நலனில் சிறிது கவனம் தேவை. நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் இந்த மாதத்தில் வெற்றியை தரும். பண பரிமாற்றத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கணவன் மனைவியின் பிரச்சனைகளை மூன்றாவது மனிதர்களிடம் கூறாமல் இருப்பது நல்லது. சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே : உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

கடகம்:
Kadagam Rasi

இந்த மாதத்தில் உங்களது தொழிலில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். உங்களுக்கான சுபச் செலவுகள் அதிகரிக்கும். வீட்டில் உறவினர்களின் வருகையால் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உங்கள் உறவினர்களை அனுசரித்து சென்றால் பிரச்சனையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். கணவன் மனைவி இடையே சிறு வாக்குவாதங்கள் வந்து நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் வரும். தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் நன்மை கிடைக்கும்.

சிம்மம்:
simmam

உங்களின் முயற்சிக்கு ஏற்ப உங்கள் தொழிலானது முன்னேற்றம் தரும் காலமாக இது அமையும். சில மறைமுக பிரச்சனைகளை உங்கள் தொழிலில் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.  உங்கள் குடும்பத்தினரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல்நலனில் அக்கறை அவசியம் தேவை. மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை கொள்வது அவசியம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால் கஷ்டங்கள் தீரும்.

கன்னி:
Kanni Rasi

உங்கள் தொழிலானது இந்த மாதம் சற்று மந்தமாகத்தான் காணப்படும். புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. எதையும் சாதிக்க வேண்டும் என்ற மன உறுதி மட்டும் உங்களை விட்டு அகலாமல் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். தினமும் காலை எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் நல்ல பலனைக் கொடுக்கும்.

துலாம்:
Thulam Rasi

உங்கள் தொழிலில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியைத் தேடித்தரும். பணவரவு அதிகரிக்கும். இதன் மூலம் புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். நீண்ட நாட்கள் கழித்து, பிரிந்த கணவன் மனைவிகள் சேர்வதற்கு கூட இந்த மாதம் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புதன் கிழமைகளில் பசு மாட்டுக்கு அகத்திக்கீரை கொடுப்பதால் நன்மை ஏற்படும்.

விருச்சிகம்:
virichigam

இந்த மாதம் உங்களது முயற்சியானது அதிகரித்தாலும், உங்கள் தொழிலில் லாபமானது குறைவாகத்தான் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளால் உங்களின் மனநிம்மதி பாதிக்கப்படும். அனாவசியமான பேச்சுக்களை தவிர்ப்பது மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வாகனத்தில் செல்லும் போது அதிக கவனம் தேவை. அதிக கவனம் எடுத்து படிப்பது மாணவர்களுக்கு நல்லது. செவ்வாய்க்கிழமை தோறும் முருகனை வழிபடுவது நல்லது.

தனுசு:
Dhanusu Rasi

உங்கள் வியாபாரமானது படிப்படியாக முன்னேற்றத்தை அடையும். முன் பின் தெரியாதவர்களை நம்பாமல் இருப்பது நல்லது. எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் பலமுறை யோசித்து செயல்படுவது அவசியம். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை துணையின் மூலம் பணம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் அதிக கவனம் எடுத்து படிப்பது நல்லது. வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு விளக்குப் போட்டு வழிபடுவது நல்ல பலனைக் கொடுக்கும்.

மகரம்:
Magaram rasi

உங்கள் வியாபாரமானது சற்று மந்தமாகத்தான் காணப்படும். வியாபாரத்தில் வரும் லாபமானது குறையும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யூன்யம் அதிகரிக்கும். இரவு நேர பயணத்தை தவிர்த்துக் கொள்ளலாம். மாணவர்கள் கஷ்டப்பட்டு படிப்பதன் மூலம் முன்னேற்றம் அடையலாம். சனிக்கிழமை தோறும் சனீஸ்வரனுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

இதையும் படிக்கலாமே : உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

கும்பம்:
Kumbam Rasi

நீங்கள் எதிர்பார்த்தபடி உங்கள் வியாபாரமானது முன்னேற்றத்தை அடையும். உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு சீராக இருக்கும். உங்களின் பிள்ளைகளின் மூலம் சில பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உறவினர்களின் வருகையால் சில செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் காட்டுவார்கள். வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடலாம்.

மீனம்:
meenam

உங்களது தொழிலானது வெற்றியை நோக்கி சென்றாலும் சில பிரச்சனைகளை எதிர் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். பணவரவு சீராக இருக்கும் இதன்மூலம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பயணங்களின் போது உங்கள் பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடுவதன் மூலம் நன்மை நடக்கும்.