- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமார்கழியில் செய்ய வேண்டிய தானம்

மார்கழியில் செய்ய வேண்டிய தானம்

- Advertisement -

மார்கழி மாதம் பிறந்து இன்று 2வது நாள். இந்த மார்கழி மாதம் முடிவதற்குள் நீங்கள் எவ்வளவு புண்ணிய காரியங்களை செய்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பல மடங்கு நன்மை வந்து சேரும். அந்த வகையில் இந்த மார்கழி மாதம் முடிவதற்குள் கோவிலில் நீங்கள் செய்ய வேண்டிய ஒரு சில பரிகாரத்தை பற்றியும், ஒரு சில தானங்களை பற்றியும் தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

மார்கழியில் செய்ய வேண்டிய தானம்

முதலில் மார்கழி மாதம் என்று சொன்னாலே நம் நினைவிற்கு வருவது பஜனை. பெருமாள் கோவிலில் மார்கழி மாதம் அதிகாலை வேளையில் பஜனை நடக்கும். அந்த பஜனை வீதியில் உலா வரும். உங்களுடைய ஊர் பெருமாள் கோவிலில், ராமர் கோவிலில் பஜனை செய்யும் வழக்கம் இருந்தால் அந்த பஜனைக்கு ஆர்மோனிய பெட்டி வாசிப்பவர்கள், தாளம் போடுபவர்கள், என்று இசைக்கலைஞர்கள் இருப்பார்கள்.

- Advertisement -

அவர்களுக்கு உங்களால் முடிந்த தானத்தை செய்வது மிக மிக சிறப்பான பலனை தரும். அதே போல கோவிலில், காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விசேஷ பூஜைகளில், நாதஸ்வரம் வாசிப்பவர்கள், தவில் வாசிப்பவர்கள் இன்னும் சின்ன சின்ன வாத்தியம் வாசிப்பவர்கள் எல்லாம் இருப்பார்கள். மார்கழியில் இறைவனுக்காக வாத்தியம் வாசிப்பவர்களுக்கு உங்களால் முடிந்த தானங்களை செய்யலாம். என்ன தானம் கொடுக்கலாம்.

வெற்றிலை பாக்ககல், தட்சனை வைத்துக் கொடுத்தாலும் சரி, நல்லது. வேட்டி, அங்க வஸ்திரம் இது போன்ற பொருட்களை வாங்கி அதில் வெற்றிலை பாக்கு வைத்து உங்களால் முடிந்த தக்ஷனையை வைத்து கொடுத்தாலும் சரி, அது உங்களுடைய நிதி நிலைமையை பொறுத்தது.

- Advertisement -

பெரிய அளவில் செய்ய வேண்டாம். 51 ரூபாய், 101 ரூபாய், இந்த மார்கழி மாதத்தில், ஒரே ஒருநாள் ஒருவருக்கு கொடுத்தாலும் போதும். அந்த தானம் உங்கள் வாழ்வில் பெரிய அளவில் நன்மையை செய்யும். ராகு கேது தோஷத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தானத்தை செய்தால், அவர்களுக்கு அந்த கிரகங்களின் தோஷமானது கொஞ்சம் தனியும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அதேபோல சிவன் கோவிலுக்கு, பெருமாள் கோவிலுக்கும் உங்களால் முடிந்த சுத்தமான நெய் வாங்கி தானம் கொடுக்கலாம். கோவிலில் இந்த மார்கழி மாதம், தினமும் வெண் பொங்கலோ, சர்க்கரை பொங்கலோ அல்லது வேறு ஏதாவது பிரசாதமோ செய்து தானமாக கொடுப்பார்கள். நீங்கள் கொடுக்கும் நெய்யை, இறைவனுக்கு பிரசாதம் செய்ய பயன்படுத்தி கொண்டால், உங்களுக்கு அதனை புண்ணியம் கிடைக்கும். நீங்களே பிரசாதம் செய்து கொண்டு போய் தானம் கொடுக்கலாம் தவறு கிடையாது. இருந்தாலும் நெய் தானத்திற்கு நல்ல பலன் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

சுத்தமான நெய் வாங்கி கோவில்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். அதை அவர்கள் விளக்கு ஏற்ற பயன்படுத்தினாலும் உங்களுக்கு நல்ல புண்ணியம் தான். அடுத்தபடியாக நல்லெண்ணெய் தானம், கோவிலில் கருவறையில் விளக்கு ஏற்ற நல்லெண்ணெய் தானமாக இந்த மார்கழி மாதத்தில் வாங்கி கொடுப்பது அதி அற்புதமான பலனை தரும். குடும்பத்தில் சனி பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலக இந்த தானத்தை செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனை தீர்க்கும் மகாலட்சுமி தீபம்

தோஷம் இருப்பவர்கள் மட்டும்தான் மேற் சொன்ன பரிகாரங்களை செய்ய வேண்டுமா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. தோஷம் இல்லாதவர்கள் கூட இந்த பரிகாரத்தை செய்தால், இந்த கிரகங்கள் எல்லாம் சேர்ந்து உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நன்மையை மட்டுமே செய்யும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்