மார்கழி மாதத்தில் கோலத்திற்கு ஏன் இவ்வளவு சிறப்பு?

Margali
- Advertisement -

இந்த மார்கழி மாதமானது தேவர்களுக்கெல்லாம் அதிகாலை பொழுதாக இருக்கின்றது என்று, சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இறைவன் கண்விழிக்கும் இந்த வேலையில், பக்தர்கள் வேண்டும் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றுவார் என்பது ஐதீகம். இதனால்தான் இந்த மார்கழி மாதமானது இறை வழிபாட்டிற்கு சிறந்த மாதமாக கூறப்படுகிறது. மார்கழி மாதம் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது வாசலில் மாக்கோலமிட்டு சாண பிள்ளையார் பிடித்து வைத்து, அதன் மேல் பூசணிப் பூ வைப்பது தான். இந்த பழக்கத்தை எதற்காக நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தார்கள் என்பதில் சிலருக்கு இன்றளவும் சந்தேகங்கள் இருக்கின்றது. அந்த சந்தேகத்தினை இந்தப் பதிவின் மூலம் நாம் தீர்த்துக்கொள்வோமா.

kolam

மார்கழி மாதம் அதிகாலை வேளையில் ஓசோன் வாயுவானது எந்தவிதமான நச்சுத் தன்மையும் இல்லாமல் வெளிவருகிறது. இதனை நாம் சுவாசிப்பதன் மூலம் அந்த வருடத்திற்கு தேவையான ஆக்சிஜன் சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்கின்றது என்பதைக் கூறுகிறது விஞ்ஞானம். இது உண்மைதான்.

- Advertisement -

ஆனால் நம் பாரம்பரியத்தில், அந்தக் காலங்களில், மார்கழி மாதத்தில் எந்த வீட்டில், கோலம் போட்டு, சாண பிள்ளையார் பிடித்து வைத்து, அதன் மேல் பூசணிப் பூவை வைத்து இருக்கிறார்களோ, அந்த வீட்டில் கன்னிப் பெண் இருக்கின்றாள் என்பதை குறித்தது. இதைப் பார்க்கும் மற்றவர்கள் அந்த வீட்டில் கல்யாணம் ஆகாத பெண் இருக்கிறாள் என்பதை அறிந்துகொண்டு, திருமணத்திற்காக பெண் பார்ப்பவர்கள் அந்த வீட்டில் உள்ள பெரியவர்களை அணுகுவார்கள். அந்த காலத்தில், கிராமங்களில் எல்லாம் வீட்டில் உள்ள கன்னிப் பெண்களை வெளியே காண முடியாது. இதற்காக இந்த பழக்கமானது மேற்கொள்ளப்பட்டது.

pen-1

அடுத்ததாக மார்கழி மாதக் காலை வேளையில் வீட்டு வாசலில் போடப்படும் கோலமானது கன்னிப்பெண்ணின் கையால் போடவேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். மார்கழி மாதக் காலை வேளையில் வெளிவரும் ஓசோன் வாயுவானது கன்னிப்பெண்கள் சுவாசிக்கும் போதும், உடல் மீது படும் போதும் அவர்களின் முகமானது பொலிவுடனும், பிரகாசமாகவும் மாறிவிடும். மார்கழி மாதத்திற்கு அடுத்து வரும் தை மாதத்தில் அந்தப் பெண்ணை காணவரும் மாப்பிள்ளை வீட்டினர் அந்தப் பெண்ணின் அழகான தோற்றத்தைக் கண்டு திருமணத்தை நிச்சயித்து விடுவார்கள். கன்னிப் பெண்ணிற்கு திருமணம் நடந்துவிடும் என்பதற்காகவும் இந்த வழக்கமானது கடைபிடிக்கப்பட்டது.

- Advertisement -

குறிப்பாக சாண பிள்ளையாரையும் பூசணி, பூவையும் எதற்காக வைக்கின்றனர் என்பதிலும் சிலருக்கு சந்தேகம் உள்ளது. இந்த மார்கழி மாதத்தில் பூசணி பூவானது அதிகமாகப் பூக்கும் என்பதால் இந்தப் பூவினை நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள். நம் கையில் எந்த பூ கிடைத்தாலும் அதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் அதில் ஒன்றும் தவறில்லை.

கிராமங்களில் மார்கழி முதல் தேதி அன்று ஒரு சாண பிள்ளையார், இரண்டாம் தேதியன்று இரண்டு, இப்படி முப்பது தேதிகளுக்கு வரிசையாக அதிகப்படுத்திக் கொண்டே போவார்கள். இந்தப் பிள்ளையாரை கோலத்தின் மீது மண்ணில் வைக்கக்கூடாது. அரச இலையிலோ அல்லது ஆள இலையின் மீது வைக்கலாம். நம் பிடித்து வைத்த சாண பிள்ளையாரை எல்லாம் சேகரித்து வைத்து, தை மாத தொடக்கத்தில், கன்னிப் பெண்கள் அனைவரும் சேர்ந்து, நீர் நிலைகளில் கொண்டு போய் கரைத்து விடுவார்கள். இந்தப் பிள்ளையாரை பிடித்து வைக்கும் பெண்கள் மனதார பிள்ளையாரை பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இன்றளவும் சில கிராமங்களில் இந்த பழக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

- Advertisement -

Hindu Marriage

அரசமரப் பிள்ளையாரை சுற்றினால் திருமணம் நடக்கும் என்பது அந்த காலத்தில் இருந்து வரும் நம்பிக்கை. திருமணத்தடையை நீக்குபவர் பிள்ளையார். ராகு-கேது தோஷம் இருந்தாலும் சிலருக்கு கல்யாணம் தடைபடும்.  சர்ப்ப தோஷமாக கருதப்படும் பாம்பினை தனது இடுப்பிலேயே சுற்றி தனக்குள் அடக்கி வைத்திருப்பவர் விநாயகர். எந்தவித தோஷமாக இருந்தாலும் விநாயகரை வழிபடும் போது அந்த தோஷமானது விளக்கப்படுகிறது. இதனால்தான் திருமண தடை நீங்க பிள்ளையாரை வணங்குகின்றோம். உங்களுக்கு சாணம் கிடைக்கவில்லை என்றால் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, பூ வைத்து கோலத்தின் மீது வைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் திருமணமாகாதவர்களாக இருந்தால், இந்த வருடம் மார்கழி மாதம் மாக்கோலமிட்டு பிள்ளையார் பிடித்து, அவர் தலையின் மீது பூ வைத்து வழிபட்டு பாருங்கள் வரும் தையில் உங்களுக்கு திருமணம் நிச்சயம் நடக்கும்.

இதையும் படிக்கலாமே
ஐயப்பனுக்கு மாலை போட்டு இருக்கிறீர்களா? இதைப் படித்துவிட்டு 18 படிகளை கடந்து செல்லுங்கள்.

இது போன்ற மேலும் பல ஆன்மிக தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Margali kolam sirappugal. Margali rangoli specialty. Margali kolam uses in Tamil. Margali kolam payangal.

- Advertisement -