ஐயப்பனுக்கு மாலை போட்டு இருக்கிறீர்களா? இதைப் படித்துவிட்டு 18 படிகளை கடந்து செல்லுங்கள்.

sabarimalai-aiyyapaa-compressed

ஐயப்பனை தரிசனம் செய்ய கார்த்திகை மாதம் தொடக்கத்தில் மாலை அணிந்து, 48 நாட்கள் விரதமிருந்து, கடுமையான மலைப் பாதையை தாண்டி பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டிக் கொண்டு 18 படிகளை தாண்டி அந்த ஐயப்பனை தரிசனம் செய்வார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒரு விஷயம். ஆனால் அந்தப் பதினெட்டு படிகளின் மகத்துவம் பற்றியும், அதில் அடங்கியுள்ள தத்துவங்கள் என்னென்ன என்பது பற்றியும் சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தன்னலமற்ற குணத்தைக் கொண்ட அந்த சபரிமலை ஐயப்பனினை காண்பதற்காக செல்லும் பக்தர்களுக்கான சிறப்பு பதிவு இது.

padhinettu padi aiyyapa

ஐயப்பன் உபயோகப்படுத்திய 18 கருவிகளை வைத்து 18 படிகளை உருவாக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. வில், வாள், வேல், கதை, அங்குசம், பரசு, பிந்திபாவம், பரிசை, குந்தம், ஈட்டி, கை வாள், முன்தடி, கடுதிவை, பாசம், சக்கரம், ஹலம், மழு, முஸலம் இவைகள் ஐயப்பனால் உபயோகப்படுத்தப்பட்ட 18 போர் கருவிகளாகும்.

ஐயப்பனை தரிசிப்பதற்கு முன்பு 18 குணங்களை நாம் கடந்து வர வேண்டியிருக்கிறது. மெய், வாய், கண், காது, மூக்கு, சினம், காமம், பொய், களவு, சூது, சுயநலம், பிராமண,  க்ஷத்திரிய, வைசிய, சூத்திர, ஸத்ய, தாமஸ, ராஜஸ இவைகளைத் கடந்து வந்தால்தான் நாம் ஐயப்பனை தரிசிக்க முடியும்.

aiyyapaa 1

பதினெட்டு படிகளில் வாசம் செய்யும் கடவுள்கள்

- Advertisement -

ஒன்றாம் திருப்படி : சூரிய பகவான்
இரண்டாம் திருப்படி : சிவன்
மூன்றாம் திருப்படி : சந்திர பகவான்
நான்காம் திருப்படி : பராசக்தி
ஐந்தாம் திருப்படி : அங்காரக பகவான்
ஆறாம் திருப்படி : முருகன்
ஏழாம் திருப்படி : புத பகவான்
எட்டாம் திருப்படி : விஷ்ணு
ஒன்பதாம் திருப்படி : வியாழ ( குரு ) பகவான்
பத்தாம் திருப்படி : பிரம்மா
பதினொராம் திருப்படி : சுக்கிர பகவான்
பனிரெண்டாம் திருப்படி : இலட்சுமி
பதிமூன்றாம் திருப்படி : சனி பகவான்
பதிநான்காம் திருப்படி : எம தர்ம ராஜன்
பதினைந்தாம் திருப்படி : இராகு பகவான்
பதினாறாம் திருப்படி : சரஸ்வதி
பதினேழாம் திருப்படி : கேது பகவான்
பதினெட்டாம் திருப்படி : விநாயகப் பெருமான்

இந்தப் பதினெட்டு படியில் ஒற்றைப்படை வரிசையில் நவக்கிரகங்களும் இரட்டைப்படை வரிசையில் தெய்வங்களும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது. நம் உலகத்தில் இருக்கும் அனைத்து சக்திகளும் இந்த 18 படிகளில் ஐக்கியம் என்பது ஐதீகம்.

 Iyyappa

ஐயப்பனின் திருநாமங்கள் 18 என்று மற்றொரு வரலாறு கூறுகிறது.

ஒன்றாம் திருப்படி : குளத்துப்புழை பாலகன்
இரண்டாம் திருப்படி : ஆரியங்காவு ஐயன்
மூன்றாம் திருப்படி : எரிமேலி சாஸ்தா
நான்காம் திருப்படி : அச்சன்கோயில் அரசன்
ஐந்தாம் திருப்படி : புவனேஸ்வரன்
ஆறாம் திருப்படி : வீரமணி கண்டன்
ஏழாம் திருப்படி : பொன்னம்பல வாஸன்
எட்டாம் திருப்படி : மோஹினி பாலன்
ஒன்பதாம் திருப்படி : சிவ புத்ரன்
பத்தாம் திருப்படி : ஆனந்த சித்தன்
பதினொன்றாம் திருப்படி : இருமுடிப் பிரியன்
பனிரெண்டாம் திருப்படி : பந்தள ராஜகுமாரன்
பதிமூன்றாம் திருப்படி : பம்பா வாஸன்
பதினான்காம் திருப்படி : வன்புலி வாஹனன்
பதினைந்தாம் திருப்படி : ஹரிஹர சுதன்
பதினாறாம் திருப்படி : ஸத்குரு நாதன்
பதினேழாம் திருப்படி : பிரம்மாண்ட நாயகன்
பதினெட்டாம் திருப்படி : ஸத்ய ஸ்வரூபன்

சபரி மலையை சுற்றியுள்ள மலைகள் 18

சபரி மலை, பொன்னம்பல மேடு, கவுண்ட மலை, நாக மலை, சுந்தர மலை, சிற்றம்பல மேடு, கல்கி மலை, மாதங்க மலை, மைலாடும் மலை, ஸ்ரீ மாத மலை, தேவர் மலை, நிலக்கல் மலை,தலப்பாறை மலை, நீலி மலை, கரி மலை, புதுச்சேரி, அப்பாச்சி மேடு, இஞ்சிப் பாறை.

 Iyyappa

இப்படியாக 18 என்ற கணக்கிற்கு மகிமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். பகவத் கீதை அத்தியாயங்கள் 18, சபரி மலையில் அமைந்துள்ள மலைகள் 18, சித்த புருஷர்கள் 18, சரணம் விளக்கும் முறைகள் 18, ஐயப்பனின் தத்துவ குணங்கள் 18, ஐயப்பனின் போர்க்கருவிகள் 18, புராணங்களின் எண்ணிக்கை 18, குருசேத்திர யுத்தம் நடந்த நாட்கள் 18. அந்த சபரிமலை ஐயப்பனின் அருமை பெருமைகளை எல்லாம் வாயால் சொல்லி முடித்துவிட முடியாது. அந்த ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக செல்லும் பக்தர்கள் அவர்களது மனதிலுள்ள தீய எண்ணங்களை எல்லாம் 18 படிகளுக்கு கீழேயே விட்டு விட்டு செல்வது நல்லது. இவ்வளவு புனிதங்கள் கொண்ட அந்த படியினை தன்னலமற்ற, தூய்மையான மனதினை கொண்டு புனிதப்படுத்துவோம்.

இதையும் படிக்கலாமே
இது போன்ற மேலும் பல ஆன்மிக தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.