நாளை மார்கழி கடைசி வெள்ளிக்கிழமை – இவற்றை செய்தால் பன்மடங்கு பலன் உண்டு

margali-laksmi

கடும் குளிரை ஏற்படுத்துகிற மாதம் மார்கழி மாதம். இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்தால் உடலுக்கும் மனதிற்கும் கிடைக்கும் உற்சாகம் வேறு எந்த மாதத்தின் அதிகாலை பொழுதில் கிடைப்பதில்லை. அதிலும் இம்மாதத்தில் தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, இறைவனை வணங்குபவர்களுக்கு அனைத்து வளங்களும் வாழ்வில் வந்து சேரும். அந்த வகையில் மார்கழி மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை தினத்தில் நாம் செய்யும் வழிபாட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

andal-srivilliputhur

மார்கழி மாதம் சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய இரு மூர்த்திகளையும் வழிபடுவதற்குரிய ஓவர் சிறந்த மாதமாக இருக்கிறது. அதிலும் மார்கழி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அனைத்தும் மகாலட்சுமி அருளை பெறுவதற்கு அவரை வழிபடுவதற்குரிய சிறந்த நாட்களாகும். சூரியன் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசியில் பிரவேசித்து தை மாதம் பிறப்பதற்கு முன்பாக வரும் மார்கழி மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை மிகவும் விசேஷமானது.

இந்த மார்கழி மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு வீட்டின் பூஜையறையில் இருக்கும் லட்சுமி மற்றும் இதர பெண் தெய்வங்களின் படங்களுக்கு சிவப்பு நிற மலர்களை சாற்றி, தீபம் ஏற்றி வணங்க வேண்டும். அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளையும், மகாலட்சுமி தாயார், ஆண்டாள் ஆகியோரை வணங்க வேண்டும். நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் பாசுரங்கள் உங்களுக்கு தெரிந்தால் அதை துதித்தவாறு பெருமாளையும், ஆண்டாளையும் வணங்குவது அவர்களின் அருட்கடாட்சம் உங்களுக்கு கிடைத்து நன்மைகள் பல வாழ்வில் ஏற்படும்.

durga-devi-amman

இந்த மார்கழி இறுதி வெள்ளிக்கிழமை தினத்தில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை அகலில் நெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட வேண்டும். முடிந்தால் எலுமிச்சை மாலையை துர்க்கை அம்மனுக்கு சாற்றி வழிபடுவது நல்லது. மேற்கூறிய வழிபாடுகளை மார்கழி இறுதி வெள்ளிக்கிழமை தினத்தில் செய்வதால், புதிதாக பிறக்கின்ற தை மாதத்தில் அனைத்திலும் நன்மையான பலன்களையும், எடுக்கும் முயற்சிகளில் சிறந்த வெற்றிகளையும் பெறுவீர்கள்.

இதையும் படிக்கலாமே:
சபரிமலையில் நடக்கும் பிரச்சனை பற்றி ஜோதிடம் கூறுவது என்ன

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Margazhi last friday in Tamil. It is also called as Margazhi matham in Tamil or Vellikilamai valipadu in Tamil or Margali valipadu in Tamil or Margali sirappu in Tamil