சபரிமலையில் நடக்கும் பிரச்சனைகள் எப்போது தீரும். ஜோதிடர்கள் கூறுவது என்ன?

sabarimalai-aiyyapaa

ஜோதிட கலை என்பது மிக பெரும் கடல் போன்றது. பழங்காலத்தில் ஜோதிட கலையை பயன்படுத்தி மக்கள் வாழ்வில் அனைத்து விடயங்களிலும் வெற்றிகளை கண்டனர். மகத்தான இக்கலையை ஒரு சிலர் தவறாக பயன்படுத்தியதால் இக்கலையின் மீது பலருக்கும் திட நம்பிக்கை ஏற்படாமல் போய்விட்டது. ஆனால் அன்றாடம் உலகத்தில் நிகழும் பல நிகழ்வுகளை ஜோதிட கலையை பயன்படுத்தி பார்க்கும் போது பல விடயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். அப்படி சமீப காலமாக நாடு முழுவதும் பேசப்படும் சபரிமலை கோயில் விவகாரத்தை ஜோதிட ரீதியான கண்ணோட்டத்தில் இங்கு காணலாம்.

ayyappan

நமது புராணங்களில் ரிஷிகள், தேவர்கள், தெய்வங்கள் என பல தரப்பட்டவர்களும் கிரகங்களின் பாதிப்பால் பல கஷ்டங்களை அனுபவித்ததை நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். அப்படியிருக்க பூமியில் இருக்கும் அனைத்தும் நவகிரகங்களின் தாக்கத்தில் இருக்கும் போது, நன்மை தீமை கலந்த பலன்கள் எப்போதும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

சமீப காலமாக தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நடக்கும் விடயங்கள் அனைத்தும், அம்மாநிலத்திற்கு சில கிரகங்களின் பாதகமான அமைப்பால் தான் உண்டாகிறது என்பது பல வருடம் ஜோதிடத்தில் அனுபவம் பெற்ற ஜோதிடர்களின் கருத்தாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்கள் செல்லலாம் என்கிற நீதிமன்ற தீர்ப்பு, அதை தொடர்ந்த பதற்றமான சூழ்நிலை ஆகியவை சிறந்த உதாரணங்கள் என அந்த ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

இதில் சபரிமலை ஐயப்பன் கோயில் விடயம் கடந்த சில மாதங்களாக கேரளா மாநில மக்களை கொதிப்பான சூழலில் வைத்திருக்கிறது. ஜோதிட கலை ரீதியாக இவ்விடயத்தை பார்க்கும் போது கேரள மாநிலத்திற்குரிய ராசியாக கன்னி ராசி இருக்கிறது. இந்த ராசிக்குரிய நட்சத்திரங்களில் ஒன்றாக உத்திரம் நட்சத்திரம் இருக்கிறது. சபரிமலையில் பக்தர்களுக்கு அருள்பாளிக்கும் ஸ்ரீ ஐயப்பன் இந்த உத்திரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆவர்.

- Advertisement -

ayyappan

இந்த கன்னி ராசி தற்போது தனுசு ராசியில் இருக்கும் சனி கிரகத்திற்கு 10 ஆம் இடமாக வருகிறது. மேலும் மகர ராசியில் இருக்கும் கேது, தனுசு ராசி சனி ஆகிய இரு பாப கிரகங்களின் பார்வை தற்போது கன்னி ராசியின் மீது இருப்பதால் ஐயப்பன் சுவாமி விவகாரத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டேயிருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் ஏற்படவிருக்கும் ராகு – கேது கிரக பெயர்ச்சியால் ஐயப்பன் விவகாரத்தில் சிறிது மாற்றம் ஏற்படும் என்றாலும், அடுத்த சனி கிரக பெயர்ச்சியின் போது மட்டுமே பிரச்சனைகள் முழுவதும் தீர்ந்து இவ்விவகாரத்தில் ஒரு நிரந்தர தீர்வு ஏற்படும் என்பது ஜோதிடர்களின் கருத்தாக உள்ளது.

இதையும் படிக்கலாமே:
தண்ணீர் அருந்தும் முறை மற்றும் நன்மைகள்

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sabarimala temple problem in Tamil. It is also called as Sabarimala kovil in Tamil or Ayyappan kovil prachanai in Tamil or Sabarimala Temple in Tamil.