- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமார்கழி சனிக்கிழமை பிரதோஷ வழிபாடு

மார்கழி சனிக்கிழமை பிரதோஷ வழிபாடு

- Advertisement -

நாளைய தினம் 28.12.2024 மார்கழி மாதம் வந்திருக்கக்கூடிய சனி மகா பிரதோஷம். இந்த நாளில் ஈசனை வழிபாடு செய்யாத ஒரு புழு பூச்சி கூட இந்த பூமியில் இருக்கக் கூடாது. ஏனென்றால் இந்த நாள் அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த நாள். கிரகாசாரத்தின் அடிப்படையில் உங்கள் வாழ்வில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் சரி, அந்த பிரச்சனைகளை சரி செய்ய நாளைய தினம் பிரதோஷ நேரத்தில் ஈசனை கட்டாயம் நீங்கள் வழிபாடு செய்ய வேண்டும்.

கிரக தோஷங்கள் எல்லாம் நீங்கி, உங்கள் வாழ்வு வளம் பெறும். அதிலும் குறிப்பாக ஜென்ம சனி நடக்கும் கும்பம் ராசி அன்பர்களும், அஷ்டம சனி நடக்கும் கடகம் ராசி அன்பர்களும் நாளைய தினம் கோவிலுக்கு சென்று சிவனை பாருங்கள். உங்கள் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் நிச்சயம் விலகும். கடந்த சில மாதங்களாக உங்கள் வாழ்க்கையில் படாத கஷ்டமே இருந்திருக்காது. அந்த கஷ்டத்தில் இருந்து விலக வேண்டும் என்றால், நாளைய தினம் ஈசனின் பாதங்களை சரண் அடைவது தான் ஒரே வழி.

- Advertisement -

இதற்காக எந்த பரிகாரமும், எந்த செலவும் பெருசாக செய்ய வேண்டாம். இருவது ரூபாய்க்கு வில்வ இலைகளை வாங்கிக் கொண்டு போய் சிவபெருமான் ஆலயத்தில் கொடுத்து விட்டு, சனிக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி அந்த சிவன் கோவிலில் அமர்ந்து “ஓம் நமசிவாய” மந்திரத்தை சொன்னாலே போதும்.

உங்களுக்கான பிரச்சனைகள் அன்றோடு தீர்ந்துவிடும். சனிபகவான் உங்களை பெருசாக சோதனை செய்து பார்க்கவே மாட்டார். மற்ற கிரகங்களும் நல்லது செய்ய துவங்கி விடும். முடிந்தால் நாளை சனிக்கிழமை முழுவதும் விரதம் இருந்து, கோவிலுக்கு சென்று கோவிலுக்கு தரும், மாலை பிரதோஷ பூஜைகள் முடிவடைந்த உடன் கோவிலில் கொடுக்கும் அந்த பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டு விரதத்தை முடித்தால் சொல்லவே வேண்டாம், கோடி கோடி புண்ணியம்.

- Advertisement -

இதற்கான பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்து விடாது. சிவனின் அருள் ஆசி இருப்பவர்களுக்கு மட்டும்தான் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். அதற்காக வாய்ப்புகள் கிடைக்காதவர்கள் எல்லாம் இறை ஆசிர்வாதம் கிடைக்காதவர்கள் என்று அர்த்தம் கிடையாது. கோவிலுக்கு செல்ல  வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனும் போதும், மனதார சிவ சிவ, ஓம் நமசிவாய என்ற நாமத்தைச் சொன்னாலே அவர்களுக்கு முக்தி கிடைத்துவிடும்.

நாளைய தினம் சிவனடியார்களுக்கு அல்லது பசியால் வாடி கஷ்டப்படுபவர்களுக்கு உங்களால் இயன்ற ஒரு அன்னதானத்தை செய்யுங்கள். நிச்சயம் உங்களுடைய கஷ்டங்களுக்கான விடிவுகாலம் பிறக்கும். கோவிலுக்கு எல்லாம் எங்களால் செல்ல முடியாது இந்த நேரத்தில் நாங்கள் அலுவலகத்தில் இருப்போம் என்றால், இருந்த இடத்திலிருந்து நமசிவாய நமசிவாய நமசிவாய என்று 27 முறை சொல்லிவிட்டு, இன்னல்களில் இருந்து காப்பாற்று ஈசனே என்று சொல்லிவிட்டு உங்களுடைய வேலையை பாருங்கள். மற்றதை அந்த எம்பெருமான் பார்த்துக் கொள்வான்.

இதையும் படிக்கலாமே: பிரச்சினைகளை தீர்க்கும் மார்கழி வெள்ளிக்கிழமை பரிகாரம்

எங்களால் வீட்டில் வழிபாடு செய்ய முடியும் என்றால் இந்த பிரதோஷ நேரத்தில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வில்வ இலைகளால் உங்கள் வீட்டில் இருக்கும் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யலாம். அண்ணாமலை ஈஸ்வரருக்கு அர்ச்சனை செய்யலாம். எதுவுமே இல்லையா அந்த விளக்கு தான் சிவபெருமான் என்று நினைத்து விளக்குக்கு அர்ச்சனை செய்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்