- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமார்கழி மாத சிறப்பு பாடல்

மார்கழி மாத சிறப்பு பாடல்

- Advertisement -

ஆண்டாள் திருவடிகளே சரணம் ! சூடிக்கொடுத்த சுடர்கொடியாக திகழ்ந்தவள் ஆண்டாள் நாச்சியார். எம்பெருமான் மீது காதல் கொண்டு, ஆண்டாள் நாச்சியார் மார்கழி மாதம் 30 நாள் நோன்பிருந்து திருப்பாவை பாடல்களை பாடி, எம்பெருமானை கரம் பிடித்த ஆண்டாள் நாச்சியாரின் பரிபூரண ஆசீர்வாதம் நமக்கும் கிடைக்க வேண்டும் என்றால், இந்த மார்கழி மாதத்தில் நாமும் திருப்பாவை 30 பாடல்களையும் பாடி எம்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.

இப்படி செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமல்லாமல் இல்லற வாழ்க்கையில் சண்டை சச்சரவோடு வாழும் கணவன் மனைவி கூட, மார்கழி மாதம் 30 நாளும் எம்பெருமானை வழிபாடு செய்தால் இல்லறம் சிறக்கும். இதோடு மட்டுமா. உங்களுடைய வாழ்வையில் இன்னும் என்னென்ன கஷ்டங்கள் இருக்கிறதோ, அந்த கஷ்டங்களுக்கு எல்லாம் முடிவு காலம் பிறக்க வேண்டும் என்றாலும் மார்கழி மாதம் எம்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

அந்த அழகான கோதை ஆண்டாள் நாச்சியாரின் மனம் மகிழ்ச்சி அடைய, இந்த மார்கழி மாதத்தின் சிறப்புகளை எல்லாம் ஒன்று சேர்த்து கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு தமிழ் பாடலைப் பற்றித்தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த பாடலை மார்கழி மாதம் முழுவதும் தினமும் காலை நேரத்தில் எழுந்து படிக்க முடியும் என்றாலும் படிக்கலாம்.

இல்லையென்றால் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது ஒரு முறை இந்த பாடலை படியுங்கள். எம்பெருமான் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, நீங்கள் கேட்கும் வரங்களை உங்களுக்கு நிச்சயம் வாரி வாரி கொடுத்து விடுவார். அது மட்டும் இல்லாமல் இந்த பாடலை படிக்கும் போதே படிப்பவர்கள் மனதில் ஒரு ஆனந்தம் ஏற்படும். அந்த ஆனந்தமே உங்கள் வாழ்க்கையை சிறப்பித்து தரும்.

- Advertisement -

மார்கழி மாத சிறப்பு பாடல்

மார்கழி கோலம் சிரிக்குதடி
திரு மார்கழி திங்கள் பிறக்குதடி
பொங்கு நீராடிட பூவையர் கூடிட

பொன் கதிர் நிற பண்பாடிட
அன்னை பராசக்தி அனைவரையும் காக்க
ஆண்டாள் பாசுரம் இசையினை கேட்க
புண்ணை மலர்களே பூமியில் தெளிக்க

- Advertisement -

பூமகள் சிரித்து பொன்னை கொடுக்க
குங்குமம் மங்கையர் கும்பிடும் திங்கள்
கோவிலில் மணி ஒலி முழங்கிடும் திங்கள்
எங்குமே சோம்பல் மறைந்திடும் திங்கள்

இல்லம் செழிக்க அழைத்திடும் திங்கள்
சூடிக்கொடுத்த நாச்சியார் பேரை
தோகையர் சொல்லி வணங்கிடும் மாதம்
பாடி உருகும் தெய்வ சன்னதி
பக்தோர் கூடும் மங்கல மாதம் இந்த மார்கழி மாதம்.

ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் !

இதையும் படிக்கலாமே: தங்கமும் பணமும் அதிகரிக்க சொல்ல வேண்டிய மந்திரம்

எளிமையான எல்லோராலும் பாட படக்கூடிய தமிழ் வரிகளால் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த பாடலை உங்களோடு இன்றைய தினம் பகிர்ந்து கொள்வதில் மன மகிழ்ச்சியோடு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்