மார்கழி மாதம் ஏற்ற வேண்டிய ஜோதி விளக்கு.

vilakku1
- Advertisement -

மார்கழி மாதம் என்றாலே இறைவழிபாட்டிற்கு ரொம்ப ரொம்ப உகந்த மாதம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீங்கள் செய்யும் பூஜை உங்களுக்கு, அந்த வருடம் முழுவதும் நல்ல பலனை கொடுத்துக் கொண்டே இருக்கும். வருடம் முழுவதும் சந்தோஷமாக வாழ இந்த மார்கழி மாதத்தில் இறைவனை வழிபாடு செய்யுங்கள்.

சில பேருக்கு வாழ்க்கையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும் போகும். ஆனால், பல பேருக்கு பிரச்சனையில் தான், வாழ்க்கையாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் எட்டு திக்கிலிருந்து வரும் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க இந்த ஒரு வழிபாட்டை மார்கழி மாதம் முடிவதற்குள் செய்து விடுங்கள்.

- Advertisement -

மார்கழி மாதம் ஒரு நாள் மட்டுமாவது பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, உங்கள் தீராத பிரச்சனையை இறைவனது பாதங்களில் இறக்கி வையுங்கள். தீராத அந்த பெரிய துன்பம் இந்த மார்கழி மாதம் முடிவதற்குள் சரியாகிவிடும். சரி அந்த ஜோதி விளக்கு வழிபாட்டை எப்படி செய்வது நாமும் தெரிந்து வைத்துக் கொள்வோமா.

மார்கழி மாத ஜோதி விளக்கு வழிபாடு

ஜோதி விளக்கு என்றே கடைகளில் விற்கும். இந்த விளக்கு திரியை பக்கவாட்டில் போட மாட்டோம். நடுவில் திரி போட்டு ஏற்றுவோம். இந்த விளக்கு எரியும்போது இந்த விளக்கில் இருக்கும் வெளிச்சமானது, அந்த விளக்கை சுற்றி எட்டு திக்கிலும் பிரதிபலிக்கும். இந்த விளக்கை தான் ஜோதி விளக்கு என்று சொல்லுவார்கள். மார்கழி மாதம், ஏதாவது ஒரு நாள், மார்கழி வெள்ளிச் செவ்வாயில் கூட இந்த விளக்கை ஏற்றி வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

பூஜை அறையில் இந்த விளக்கை மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்றி வைத்து விடுங்கள். அந்த விளக்கின் ஒலி எப்படி எட்டு திக்கிலும் பட்டு பிரகாசமாக ஜொலிக்கின்றதோ, அதேபோல உங்களுடைய வாழ்க்கையும் எட்டு திக்கிலும் பிரகாசமாக ஜொலிக்கும் என்பதுதான் இந்த வழிபாட்டின் தாத்பர்யமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

ஏற்றி வைத்த இந்த விளக்குக்கு முன்பாக அமர்ந்து உங்கள் குடும்பத்தில் இருக்கும், எந்த பிரச்சனை முதலில் சரியாக வேண்டுமோ, அந்த பிரச்சனையை இறைவனிடம் சொல்லி, அந்த பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் என்று பிரார்த்தனை வையுங்கள். உதாரணத்திற்கு கணவருக்கு வருமானம் அதிகரிக்க, திருமண வயது ஆகியும் இன்னும் திருமணம் நிச்சயிக்கப்படாமல் இருப்பவர்களுக்கு நல்லபடியா வரன் அமையனும், நோய்நொடி தீரனும், கடன் சுமை குறையனும், என்று எந்த வேண்டுதலை வேண்டும் என்றாலும் வைக்கலாம். ஒரு வேண்டுதலாக இருக்கட்டும்.

- Advertisement -

பிரம்ம முகூர்த்த நேரத்தில் மார்கழி மாதம் இந்த விளக்கை ஏற்றி வைத்து நீங்கள் வைக்கம் வேண்டுதல் நிச்சயம் மார்கழி மாதம் முடிவதற்குள் பலிக்கும். தினமும் இந்த விளக்கை ஏற்றி வைத்து வழிபாடு செய்வதாக இருந்தாலும் சரிதான். முடியாதவர்கள் மார்கழி மாதம் வரக்கூடிய வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த விளக்கில் கட்டாயம் நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு ஏற்ற வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சரி இந்த விளக்கு எங்களிடம் இல்லை. இந்த விளக்கை வாங்கக்கூடிய சந்தர்ப்பமும் எங்களுக்கு இல்லை. என்ன செய்வது. பஞ்சு வாங்கி உருட்டி மல்லிகைப்பூ திரி போல தயார் செய்து கொள்ளுங்கள். ஒரு மண் அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அந்த வாய்ப்பகுதி இல்லாதது போல கூட அகண்ட தீபங்கள் உங்களுக்கு கடையில் கிடைக்கிறது.

இதையும் படிக்கலாமே: மார்கழி முதல் நாள் நிலை வாசலில் வைக்க வேண்டிய பொருள்

விலை மலிவாக தான் இருக்கும். அந்த விளக்கை வாங்கி அதில் நல்லெண்ணெய் ஊற்றி அதற்கு நடுவே நீங்கள் தயார் செய்த அந்த பஞ்சதிரியை வைத்து, ஏற்றினாலும் இதுவும் ஜோதி தீபம் போலத்தான் எரியும். இந்த விளக்கின் வெளிச்சமும் எட்டு திக்கிலும் பிரதிவளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விளக்கு ஏற்றி வழிபாடு செய்தாலும் உங்கள் வேண்டுதல் பலிக்கும் என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -