மார்கழி முதல் நாள் நிலை வாசலில் வைக்க வேண்டிய பொருள்

vasal1
- Advertisement -

இன்றைய நாளை அவ்வளவு எளிதாக நினைத்து விடாதீர்கள். மார்கழி முதல் நாள், பெருமாளுக்கு உரிய திருவோண நட்சத்திரம், பஞ்சமி திதி, ஞாயிற்றுக்கிழமையில் வந்திருக்கிறது. ஞாயிறு என்றால் சூரிய பகவான், சூரிய பகவானுக்கு உரிய எண் 1. பெரும்பாலும் இந்த ஞாயிற்றுக்கிழமைகளில் நாம் செய்யக்கூடிய பரிகாரங்கள் நம் வாழ்க்கையில் வெற்றியை தரக்கூடிய பரிகாரங்களாக இருக்கும்.

கண் திருஷ்டி கழிப்பதற்கு இந்த ஞாயிற்றுக்கிழமை உகந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது. நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால், வாழ்க்கையில் உயர வேண்டும் என்றாலும் ஞாயிற்றுக்கிழமை சூரியனை வழிபாடு செய்வது அவசியம். இந்த ஞாயிற்றுக்கிழமை நாள் மார்கழி ஒன்றாம் தேதியோடு சேர்ந்து வந்திருப்பதால், இந்த தினத்தை வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு நாம் எப்படி பயன்படுத்த போகின்றோம் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவுதான் இது.

- Advertisement -

நீங்கள் வாழ்க்கையில் முன்னேறாமல் இருப்பதற்கு அடுத்தவர்களுடைய பொறாமை குணமோ, கண் திருஷ்டியோ காரணமாக இருந்தால், இந்த பரிகாரம் உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.

இவனுக்கு என்ன நிறைய பணம் சம்பாதித்து விட்டான். நல்ல வேலையில் இருக்கின்றான். நல்ல பொண்டாட்டி இருக்குது. நல்ல குழந்தைகள் இருக்குது. வேறு என்ன குறை என்று ஊரே உங்களை பார்த்து பேசுதா. அந்த கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க இது ஒரு எளிமையான வழிபாடு.

- Advertisement -

மார்கழி ஒன்றாம் தேதி நிலை வாசலில் வைக்க வேண்டிய பொருள்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் மட்டை தேங்காய். தேங்காய் அந்த நாரோடு இருக்கும். மட்டை தேங்காயை வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு சிவப்பு நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். குலதெய்வத்தை மனதார நினைத்து இந்த மட்டை தேங்காயை அந்த சிவப்பு துணியில் வைத்து கட்டி, நிலை வாசல் படிக்கு வெளியில் தொங்கவிட்டு விட வேண்டும்.

பரிகாரம் அவ்வளவுதான். இதை மார்கழி மாதம் ஒன்றாம் தேதி அதாவது, இன்று மாலை 6.00 மணிக்கு செய்யுங்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இந்த தேங்காயை பூஜை அறையில், குலதெய்வத்தின் பாதங்களில் வைத்துவிட்டு இதை எடுத்து அப்படியே நிலை வாசலில் கட்டி விட்டால் போதும் உங்கள் வீட்டுக்குள் எந்த கண் திருஷ்டியும் நுழையாது.

- Advertisement -

வீட்டிற்குள் இருப்பவர்களும் கண் திருஷ்டியால் பாதிக்கப்பட மாட்டார்கள். இந்த தேங்காயை மாதம் ஒருமுறை மாற்ற வேண்டும். அந்த துணியோடு தேங்காயை கழட்டி கொண்டு போய் ஓடுகின்ற தண்ணீரில் விடலாம். அப்படி இல்லை என்றால் ஊருக்கு ஒதுக்குப்புறமாக கால் படாத செடி கொடிகள் கீழே போட்டு விட்டு வரலாம்.

இதையும் படிக்கலாமே: மார்கழி மாதம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய மூன்று விஷயங்கள்

மாதத்தில் வரும் முதல் தேதியிலேயே இந்த தேங்காவை நீங்கள் மாற்றலாம். தமிழ் தேடியையே கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள். முக்கண் உள்ள தேங்காய் சிவனுக்கு உரியது. தேங்கி நிற்காமல் வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்றால் இந்த தேங்காய் பரிகாரம் உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -