பண வரவுக்கு உண்டான எத்தனையோ அதி அற்புதம் வாய்ந்த மந்திரங்கள் நம்முடைய ஆன்மீகத்தில் உள்ளது. அதிலும் ஒரு சிறப்பு வாய்ந்த மந்திரத்தை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இப்போது மார்கழி மாதம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நாட்களில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து, பின் சொல்லக் கூடிய இந்த மந்திரத்தை சொல்லி பாருங்கள்.
உங்களுடைய பணக்கஷ்டத்திற்கு ஏதாவது ஒரு வகையில் அந்த இறைவன் நல்லதொரு தீர்வினை கொடுப்பான். இந்த மார்கழி மாதத்தில் நம் பண கஷ்டத்தை தீர்க்க போகும் அந்த மந்திரம் என்ன, அதை எப்படி உச்சரிப்பது பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
மார்கழியில் பணக்கஷ்டத்தை தீர்க்கும் மந்திரம்
அதிகாலை வேலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையை அலங்காரம் செய்து, விளக்கு ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கைகளில் ஸ்படிக மாலையை வைத்து இந்த மந்திரத்தை சொன்னால் அதி அற்புதமான பலன்கள் கிடைக்கும். அது எல்லாம் எங்களால் வாங்க முடியாது என்றால், உள்ளங்கைகளில் 2 ஏலக்காய், 2 கிராம்பு வைத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களும் மகாலட்சுமியின் வசிய தன்மை ரொம்ப ரொம்ப அதிகம். தரையில் ஒரு விரிப்பு விரித்து முதுகு தண்டுவடத்தை நேராக வைத்து அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.
பணம் தரும் மந்திரம்
ஓம் தனகார திருஷ்டயே நமஹ !
ஓம் ஜெயந்தாய நமஹ !
பணம் சம்பந்தமாக மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பவர்கள் ஒரே ஒரு நாள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த மந்திரத்தை சொல்லி பாருங்கள். இக்கட்டான சூழ்நிலை உங்களுக்கு கொஞ்சம் தளர்வடைய செய்யும். கழுத்தை நெரிக்கும் அளவுக்கு பணப்பிரச்சனை இருக்கும் பட்சத்தில், தேவையான பணம் கையை வந்து சேரும். ரொம்பவும் காரியத்தடை இருக்கிறது.
எடுக்கின்ற முயற்சிகள் தோல்வி அடைகிறது என்றாலும், இந்த மந்திரத்தை சொல்லி பலன் பெறலாம். காரியத்தடை விளக்கும். எந்த நேரத்தில் இந்த மந்திரத்தை சொன்னாலும் பலன் உண்டு. ஆனால் ஆன்மீக வழிபாட்டிற்கு உரிய இந்த மார்கழி மாதத்தில், பிரம்ம முகூர்த்த நேரத்தில், ஒரு நாள் இந்த மந்திரத்தை 27 முறை சொல்லும் போது, 27 நாள் இந்த மந்திரத்தை உச்சரித்த பலனை நம்மால் நிச்சயம் பெற முடியும்.
இதையும் படிக்கலாமே: முன்வினை பாவம் தீர்க்கும் நாகலிங்க பூ
மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு கையில் வைத்திருக்கும் ஏலக்காய் கிராம்பை அப்படியே பர்ஸில் அல்லது பணம் வைக்கும் பெட்டியலோ வைத்து விடுங்கள். மந்திரத்தின் சக்தியை அந்தப் பொருள் தன்னகத்தே தீர்த்து வைத்திருக்கும். இந்த பொருளை பணம் வைக்கும் இடத்தில் வைப்பதன் மூலம், நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் பணம் பல மடங்கு பெருகுவதை கண்கூடாக காணலாம், எளிமையான இந்த ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறவும்.