மார்கழி மாதம் முடிவதற்குள் பூஜை அறையில் இந்த 1 பொருளை வைத்து, ஒரு நாளாவது பூஜை செய்வது, வீட்டிற்கு கோடி நன்மைகளை கொடுக்கும்.

thulasi
- Advertisement -

மார்கழி மாதம் ஒரே நாள் வீட்டில் பூஜை செய்தாலே கோடி நன்மையை நம்மால் பெற முடியும் என்றால், அப்போது தினம் தினம் இந்த பூஜையை வீட்டில் செய்தால் நமக்கு வரக்கூடிய அபரிவிதமான பலனை நம்மால் வார்த்தையால் நிச்சயம் சொல்ல முடியாது. மார்கழி மாதத்தில் நம்முடைய வீட்டில், நம் வீட்டுப் பூஜை அறையில் கட்டாயம் வைத்து வழிபட வேண்டிய ஒரு பொருள் என்ன என்பதைப் பற்றிய ஆன்மீக ரீதியான தகவலை பற்றியும், இந்த மார்கழி மாதம் முடிவதற்குள் செய்ய வேண்டிய சில விஷயங்களைப் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

thulasi-theertham

பின் சொல்லக்கூடிய விஷயங்களை உங்களால் முடிந்தால் தொடர்ந்து செய்யலாம். முடியாதவர்கள் ஒரே ஒரு நாள், ஒரே ஒரு முறை செய்தால் கூட போதும் நிச்சயமாக அதற்குண்டான பலனை அந்த பகவான் உங்கள் கையில் கொடுத்து விடுவான் அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

- Advertisement -

முதலில் பூஜையறையில் முக்கியமாக வைத்து வழிபட வேண்டிய அந்த ஒரு பொருள் என்ன என்று தெரியுமா? புனிதமான துளசி. பெருமாளுக்கு உகந்த மகாலட்சுமிக்கு உகந்த இந்த துளசி இலையால் உங்கள் பூஜை அறையை அலங்காரம் செய்து பெருமாளுக்கும் மகாலட்சுமி தாயாருக்கும் துளசி இலைகளை சமர்ப்பணம் செய்து ஒரு சிறிய பஞ்ச பாத்திரத்திலோ அல்லது பித்தளை சொம்பிலோ தண்ணீரை ஊற்றி, அதில் பச்சை கற்பூரத்தை நொறுக்கிப் போட்டு, துளசி இலைகளை போட்டு, வில்வ இலைகளை போட்டு, அதை சுவாமி படத்திற்கு முன்பாக வைத்து தீபம் ஏற்றி உங்களுடைய பிரார்த்தனையை மனதார செய்யுங்கள். மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்தத்தில்.

vishnu-lakshmi

இந்த வழிபாட்டை முடிந்தவர்கள் தினசரி மேற்கொள்ளலாம். முடியாதவர்கள் மார்கழி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமைகளில் செய்யலாம். அதுவும் முடியாதவர்கள் மார்கழி மாதம் முடிவதற்குள் உங்கள் கைகளால் பெருமாளுக்கு ஒரு நாளாவது துளசி மாலையை வாங்கி போடுங்கள். மகா லட்சுமி தேவிக்கு துளசி மாலையை சமர்ப்பணம் செய்யுங்கள். இது நமக்கு கோடி புண்ணியத்தை கொடுக்கக் கூடியது என்று சொல்கிறது சாஸ்திரம். நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பலனடையலாம்.

- Advertisement -

அடுத்தபடியாக இந்த மார்கழி மாதம் முடிவதற்குள் நாம் செய்ய வேண்டிய வேலை ஒன்று உள்ளது. அது என்ன? புண்ணியத்தை தேடிக் கொள்வதற்காக, நாம் செய்த பாவங்களை கழித்து கொள்வதற்காக என்றும் வைத்துக் கொள்ளலாம். மார்கழி மாதம் குளிர் காலம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால் இந்த குளிர் காலத்தில் வீதியில் குளிரால் வாழக்கூடிய ஏழை மக்கள் மிக மிக அதிகம்.

vasthira-dhanam

அதாவது போர்த்திக்கொள்ள போர்வை கூட இல்லாமல், இன்றளவும் நிறைய பேர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் வீட்டின் அருகில் முதியவர்கள் ஊனமுற்றவர்கள் யாருக்கேனும் இப்படிப்பட்ட பிரச்சனை இருந்தால் அவர்களுக்கு குளிருக்கு அடக்கமாக கம்பளி போர்வையை வாங்கி தானமாக கொடுக்கலாம். முடிந்தால் ஷொட்டர் போன்ற பொருட்களையும் வாங்கி இப்படி குளிரில் நடுங்கும் மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு தானம் கொடுப்பது நமக்கு புண்ணியத்தை சேர்க்கும். உங்களால் முடிந்த உதவிகளை மனதார அடுத்தவர்களுக்கு செய்வது என்பது, இறைவனுக்கே செய்யும் தொண்டாக சொல்லப்பட்டுள்ளது. நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -