மார்கழி மாதத்தில் செய்ய வேண்டிய செயல்களும், தவிர்க்க வேண்டிய செயல்களும் என்னென்ன? இவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

Margali
- Advertisement -

பொதுவாகவே மார்கழி மாதத்தை பற்றிய சில தவறான எண்ணங்கள் மக்களிடையே நிலவிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு மார்கழி மாதத்தை பீடை மாதம் என்று பலரும் சொல்கின்றனர். மார்கழி மாதம் உண்மையில் பீடை மாதம் கிடையாது. இந்த மாதத்தில் திருமணம் செய்வது, வீடு குடியேறுதல், சுபகாரியங்கள் துவங்குதல் போன்ற நல்ல விஷயங்கள் எதனையும் மக்கள் செய்யாத காரணத்தினால் இந்த மாதத்தை பீடை மாதம் என்று சொல்கின்றனர். ஆனால் இவற்றையெல்லாம் செய்வதற்கும், செய்யாமல் இருப்பதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. இந்த மார்கழி மாதத்தில் எப்போதையும் விட இயற்கை சூழ்நிலை இயல்பாக இருப்பதில்லை. எனவே செய்யப்படும் வேலைகள் அனைத்தும் செய்யாமல் தள்ளி வைக்கப் படுகின்றது. அப்படி மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவைகளும், செய்யக் கூடாதவையும் என்னவென்றுதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kolam1

கிருஷ்ண பரமாத்மா கூறுவது என்னவாயின் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன். இவ்வாறு பெருமை நிறைந்த மார்கழி மாதத்தை பீடை மாதம் என்று சொல்வதில் உண்மை இல்லை. மார்கழி மாதம் தனுர் மாதம் என்றும் சொல்லப்படுகிறது. தட்சாயன காலமும் இந்த மார்கழி மாதத்தில் தான் முடிவடைகிறது. அத்துடன் சூரியனின் தெற்கு பக்க இயக்கமானது இந்த மார்கழி மாதத்தில்தான் முடிவடைகிறது.

- Advertisement -

இதனால் சூரிய கதிர்கள் பூமியின் மீது விழுவதில் மாற்றம் உண்டாகிறது. எனவே இந்த மாதத்தில் விதைகள் முளைப்பதில்லை. இதனால் தான் விவசாயிகள் விதை விதைப்பதை இந்த மாதத்தில் செய்வதில்லை. இவ்வாறு தான் மனிதர்களின் நிலைமையும், இந்த மாதம் இறைவனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் திருமணம் ஆகும் தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எனவே தான் திருமணம் செய்வதை இந்த மாதத்தில் தவிர்த்து விடுகின்றனர்.

sun

இவ்வளவு சிறப்பு மிகுந்த இந்த மாதத்தில் தவறியும் செய்யக்கூடாத விஷயங்கள் என்று சில இருக்கின்றன. முதலில் பெண்கள் காலை விடிந்த பிறகும் தூங்குவது என்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிப்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

- Advertisement -

இந்த மாதத்தில் இவ்வாறு குளிப்பதன் மூலம் ஒரு வருடத்திற்கான ஆக்ஸிஜன் நமக்கு ஒரு மாதத்திலேயே கிடைத்துவிடும். இவ்வாறு காலை எழுந்து நீங்கள் செய்யும் மார்கழி மாத பூஜை ஒரு வருட பூஜை பலனைக் கொடுக்கிறது. அடுத்ததாக இந்த மாதத்தில் கோலம் போடுவது என்பது வழக்கமாக உள்ளது. பொதுவாக மார்கழி மாதத்தில் தானம், தருமங்கள் செய்வதன் மூலம் சிறந்த பலன் கிடைக்கிறது. ஆனால் அனைவராலும் தானங்கள் செய்ய முடிவதில்லை.

ant1

எனவேதான் அரிசிமாவில் கோலம் போடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். இதனால் எறும்புகள், ஈக்கள் பசியாறும் என்பதனால் தான். ஆனால் இன்றைய தலைமுறையினர் வேலைக்கு செல்லும் அவசரத்தில் இரவே கோலம் போடுகின்றனர். இவ்வாறு கோலம் போடுவது குடும்பத்திற்கு நன்மையை தருவதில்லை. எனவே எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் இரவில் கோலம் போடுவதை தவிர்த்து விட வேண்டும்.

kovil

முடிந்தவரை மார்கழி மாதத்தில் தினமும் கோவிலுக்கு சென்று பஜனையில் கலந்து கொள்வது இறை அருளைப் பெறுவதற்கான சிறந்த வழியாக அமைகிறது. இந்த மாதத்தில் கடவுள்கள் அனைவருக்கும் சிறந்த பூஜைகளும், அபிஷேகங்களும் செய்யப்படுவதால் இந்த மாதத்தில் கோவிலுக்கு செல்வதன் மூலம் இறைவனின் ஆசீர்வாதமும், ஐஸ்வரியமும் முழுமையாகக் கிடைக்கப் பெறுகிறது.

- Advertisement -