திருமணம் செய்யும் பொழுது இதனை மட்டும் கவனமாகப் பார்க்க வேண்டும். இல்லையென்றால் திருமணமான சில நாட்களிலேயே கணவன் மனைவியிடையே விவாகரத்து ஏற்படும் நிலைமை உண்டாகும்.

marriage
- Advertisement -

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். ஆண், பெண் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கும் முன்னர் முறைப்படி பல சாஸ்திர சம்பிரதாயங்கள் பின்பற்ற படுகின்றன. அவ்வாறு முதலில் நாம் பார்க்க வேண்டியது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள ஆண் மற்றும் பெண் இவர்களுக்கான ஜாதகம் பொருத்தம்தான். முதலில் இவர்களின் ஜாதகத்தில் ஏதாவது தோஷம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவரின் ஜாதகத்தில் ஏழரை சனி, அஷ்டம சனி நடக்கிற காலமாக இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் நாம் எதிர்பார்த்திராத அளவில் பெரிய பாதிப்புகளை உண்டாக்கும். இவ்வாறு அஷ்டம சனி நடக்கும் காலங்களில் திருமணம் செய்வதால் உண்டாகும் பாதிப்புகளை பற்றி தான் இந்த பதிவில் தெளிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Hindu Marriage

ஒருவரின் முன் ஜென்ம கர்ம வினைகளை பொருத்து சனிபகவான் அவர்களுக்கான தண்டனையை கொடுப்பதே ஏழரை சனி அல்லது அஷ்டமத்து சனி எனப்படும். பொதுவாக ஏழரைசனி மற்றும் அஷ்டமத்து சனி இவை இரண்டுமே வயதிற்கு ஏற்றார் போல் பிரச்சினைகளைக் கொடுக்கும். நான்கு வயது முதல் 15 வயதில் உள்ளவர்களுக்கு அஷ்டமத்து சனி நடக்கிறது என்றால் அவர்கள் படிப்பில் சற்று மந்தமாகவும் மிகவும் கவனக்குறைவு உடையவர்களாகவும் இருப்பார்கள். இதுவே 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அஷ்டமத்து சனி நடக்கிறது என்றால் அவர்களின் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும்.

- Advertisement -

அது போல திருமண வயதில் உள்ளவர்களுக்கு அஷ்டமத்து சனி நடக்கிறது என்றால் அவர்களின் திருமணத்தில் நிறைய பிரச்சனைகள் உண்டாகும். அதையும் மீறி அவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் பொழுது கணவன் மனைவி இருவருமே மிகப் பெரிய பாதிப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

sani-baghavan

இன்றைய காலகட்டத்தில் குடும்பநல நீதிமன்றங்களில் திருமணமான சில நாட்களிலேயே விவாகரத்து செய்ய வரிசையில் நிற்கும் தம்பதிகளை காணமுடிகிறது. இதில் பெரும்பாலான ஜோடிகளின் ஜாதகத்தை பார்த்தோம் என்றால் தம்பதிகள் இருவரில் எவரேனும் ஒருவருக்கு நிச்சயம் ஏழரைசனி அல்லது அஷ்டமத்து சனி நடந்து கொண்டிருக்கும்.

- Advertisement -

ஏழரை சனி, அஷ்டமத்து சனி நாட்களில் திருமணமாகி சில ஆண்டுகள் வாழ்ந்த தம்பதியினருக்கே இவ்வாறான நிலைமை ஏற்படுகிறது என்றால் புதியதாக திருமணம் ஆகபோகிறவர்களுக்கு அஷ்டமத்து சனி நாட்களில் என்னென்ன பாதிப்புகள் உண்டாகும் என்பதை இப்போது நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

fight2

அஷ்டமத்து சனி இரண்டரை வருடங்கள் தான் இருக்கும் என்பதனால் கணவன் மனைவியிடையே வரும் பிரச்சனைகளை சற்றுப் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். அப்படி எவரேனும் ஒருவர் விட்டுக் கொடுத்து சென்றால் அவர்களின் திருமண வாழ்க்கை நலமாக இருக்கும். ஆனால் ஆண், பெண் இருவருமே விட்டுக்கொடுக்காமல் பிடிவாதமாக இருந்தார்கள் என்றால் நிச்சயம் அவர்களின் திருமணம் விவாகரத்தில் தான் முடியும்.

- Advertisement -

அஷ்டம சனி நடக்கிறதென்றால் அந்த குடும்பத்தில் சிக்கல்களும், பிரச்சனைகளும் மாறி மாறி வந்து கொண்டுதான் இருக்கும். தேவை இல்லாமலே சண்டைகள் உருவாகும். உங்கள் உறவினர்கள் மூலமாக பல குழப்பங்கள் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் வேலை செய்யும் இடங்களில் பிரச்சனை, வேலை இடமாற்றம், சிலருக்கு திடீரென வேலை பறிபோகுதல் இவ்வாறான நிலைமையும் உண்டாகும்.

cash

திருமணம் செய்து கொண்ட புதிய தம்பதியினருக்கு பல கனவுகள் இருக்கும். ஆனால் மிகவும் மோசமான பாதிப்புகள உண்டாக்கும் அஷ்டம சனி அவற்றை அனுபவிக்க முடியாத சூழ்நிலையை உண்டாக்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும் நிலைமை உண்டாகும். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் கணவன் மனைவி இருவருமே நல்ல புரிதலுடன் சூழ்நிலையை சுமுகமாக சமாளித்துக் கொண்டார்கள் என்றால் பயப்பட வேண்டிய அவசியமில்லை

happy.

அஷ்டமசனியினால் உண்டாகும் பாதிப்புகளிலிருந்து விலகியிருக்க சனிக்கிழமைதோறும் தோறும் கோவிலுக்குச் சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய், எள் சேர்த்து விளக்கேற்றி வந்தால் நல்ல பலனை பெற முடியும்.

- Advertisement -