ஒருவருடைய ஜாதக அடிப்படையில் எப்போது திருமணம் செய்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?

astrology
- Advertisement -

மனிதர்கள் அனைவருமே தங்கள் வாழ்வில் செய்யும் எந்த ஒரு விடயமும் அவர்களுக்கு நிறைவான மன மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்துடனேயே செய்கின்றனர். அதில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளும் விதிவிலக்கல்ல. வாழ்க்கையில் மணம் வீச ஆண் – பெண் இருவருக்கும் திருமணம் என்பது இன்றியமையாததாகிறது. அப்படிப்பட்ட திருமணத்தை மணமக்களின் ஜாதகத்தின் அடிப்படையில் எந்த காலத்தில் செய்யலாம்? எப்படி செய்தால் அவர்களின் மன வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும்? என்பது போன்ற ஜோதிட சாஸ்திர விதிகளை பற்றி இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக மணமகன் – மணமகள் ஆகிய இருவரின் ஜாதகத்தில் சில குறைகள் இருந்தாலும், அவர்கள் திருமணம் செய்யும் நேரம் மட்டும் நன்றாக அமைந்தால் அந்த குறைகளால் அவர்களின் வாழ்வில் எந்த பாதிப்பும் ஏற்படாது. குருபகவான் அவரவர் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 இடங்களில் இருக்கும் நேரம் குரு பலமாக கருதப்படும். திருமணம் செய்வதற்கு மணமக்கள் இருவருக்கும் அல்லது யாரேனும் ஒருவருக்கோ ஜாதகத்தில் முழு சுப கிரகமான குரு பலம் இருந்தாலே போதும்.

- Advertisement -

மணமகன் அல்லது மணமகளின் ஜாதகத்தில் குருபகவான் 2-ம் இடத்தில் இருக்கும் போது திருமணம் செய்தால், அந்த தம்பதியர்கள் தன, தானிய சம்பத்துக்கள் நிறைந்த வாழ்க்கையை பெறுவார்கள். 5 ஆம் இடத்தில் குரு இருக்கும் போது திருமணம் செய்தால் பெற்றவர்களின் சொற்படி கேட்டு நடக்கும் நல்ல பிள்ளைகள் பிறப்பார்கள்.

7 ஆம் வீட்டில் குரு இருக்கும் சமயம் திருமணம் செய்தால் பெண்கள் தீர்க்க சுமங்கலி பாக்கியத்தைப் பெறுவார்கள். 9 ஆம் இடத்தில் குரு இருக்கும் பொழுது திருமணம் செய்தால் கணவருக்கு செல்வம், மக்கள் செல்வாக்கு போன்றவை கிடைக்கும். 11 ஆம் வீட்டில் குரு இருக்கும்பொழுது திருமணம் செய்தால் மனைவி அல்லது கணவர் வழியில் பெருமளவு செல்வம் வந்து சேரும்.

- Advertisement -

ஒருவரின் ஜென்ம ராசிக்கு சூரியன் 3, 6, 10, 11 ம் இடங்களில் பிரவேசம் செய்வதே சூரிய பலம் என கருதப்படுகிறது. இந்த சூரிய பலம் என்பது பொதுவாக பெண் ஜாதகிகளை விட ஆண் ஜாதகர்களின் வாழ்க்கையில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

மணமகன் அல்லது மணமகளின் ஜாதகத்தில் இருக்கும் யோகாதிபதிகளின் தசாபுக்தி காலமாக அவர்கள் திருமண செய்யப்போகும் காலமாக அமைந்தால், அவர்களின் திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்று சீரும் சிறப்புமாக வாழ்வார்கள்.

- Advertisement -

மணமகன் அல்லது மணமகளின் ஒருவர் ஜாதகத்திலோ அல்லது இருவரின் ஜாதகத்திலும் அஷ்டமச்சனி விரயச்சனி நடைபெற்றால் எக்காரணம் கொண்டும் அவர்களுக்கு அந்த சனி தோஷம் நீங்கும் காலம் வரை திருமணம் செய்யக் கூடாது.

சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி மற்றும் தை மாதங்களில் சுப முகூர்த்த தினத்தில் திருமணம் செய்வது சிறப்பு. “மலமாதம்” எனப்படும் ஒரே மாதத்தில் 2 பவுர்ணமி அல்லது 2 அமாவாசை திதிகள் வருகின்ற மாதத்தில் குடும்பத்தில் திருமணம் உட்பட எத்தகைய ஒரு சுப நிகழ்ச்சியையும் செய்யக்கூடாது.

மேற்சொன்ன மாதங்களில் வருகின்ற வளர்பிறை, துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, திரயோதசி தினங்களில் திருமணம் செய்வது சிறப்பு. குறிக்கப்பட்ட திருமண நாள், திருமணம் செய்ய போகும் மணபெண்ணிற்கு மாதவிலக்கு ஏற்படக்கூடிய நாட்களாக இல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம்.

- Advertisement -