உங்கள் திருமணம் இந்த மாதத்தில், இந்த நட்சத்திரத்தில், இந்த திதியில் நடைபெற்றால், உங்கள் வாழ்க்கை எப்பொழுதும் சுபிட்சமாக இருக்கும்

hindu marriage
- Advertisement -

பொதுவாகவே “வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் செய்துப் பார்” என்று ஒரு பழமொழி இருக்கிறது. இதற்கு ஏற்றார் போல் ஒரு வீட்டைக் கட்டுவதும், கல்யாணத்தை செய்வதும் இரண்டுமே மிகவும் கடினமான வேலைகள் தான். வீடு என்பது காலம் முழுக்க நாமும், நமது குடும்பமும் சேர்ந்து வாழும் ஒரு பொக்கிஷமாகும். அதேபோல் திருமணம் என்பதும் நமது வாழ்க்கையின் இறுதி வரை நம்முடன் வரக்கூடிய உறவுகளை நிர்ணயிப்பதாகும். எனவே இவை இரண்டிற்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து தான் ஆக வேண்டும். இவ்வாறு வாழ்க்கையில் மிகவும் முக்கியமான இந்த நிகழ்வுகள் சரியான காலகட்டத்தில், சரியான தருணத்தில் நடந்தால் மட்டுமே அனைத்தும் சிறப்புடன் இருக்கும். வீட்டைவிட்டு வெளியில் செல்வதாக இருந்தாலும் நேரம் பார்த்து, கிழமை பார்த்து செல்வது பலரின் வழக்கம். ஆனால் வாழ்க்கைக்கு மிக முக்கியமான இந்த திருமணத்தை எப்படி சரியான மாதத்தில், சரியான நேரத்தில் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

திருமணம் செய்ய ஏற்ற மாதம்:
திருமணம் செய்வதற்கு முதலில் மாப்பிள்ளை, பெண் இருவருடைய ஜாதகத்தைப் பொருத்தம் பார்த்து, அவர்களின் ஜாதகத்திற்கு ஏற்ற மாதத்தை குறிப்பார்கள். அவ்வாறு ஒவ்வொருடைய ஜாதகத்தை பொருத்து அமையும் ஒவ்வொரு மாதத்திற்கும் தனிப்பட்ட சிறப்புகள் இருக்கிறது. அப்படி சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை, தை, மாசி, பங்குனி இவை அனைத்தும் திருமணம் செய்ய ஏற்ற மாதங்களாகும்.

- Advertisement -

திருமணம் செய்ய ஏற்ற திதி:
திதி என்பதும் நேரம் குறிப்பதில் மிகவும் முக்கியமான ஒரு தருணமாகும். ஒரு புதிய ஆடை எடுப்பதாக இருந்தாலும் கூட அஷ்டமி, நவமி போன்ற திதிகளில் எடுக்க செல்ல மாட்டார்கள். அவ்வாறு திருமணத்திற்கு நேரம் குறிக்கும் பொழுது இந்த திதியை கவனமாகப் பார்க்க வேண்டும். அப்படி துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதமே, திரியோதசி இவ்வாறான திதிகளில் திருமணம் செய்வது மிகவும் நல்லது.

திருமணம் செய்வதற்கு ஏற்ற நட்சத்திரம்:
திருமணம் செய்யும் ஆண், பெண் நட்சத்திரப் பொருத்தத்துடன் சேர்த்து அவர்களுக்கு திருமணம் செய்யும் நாளில் வரக்கூடிய நட்சத்திரத்தின் பொருத்தம் மிகவும் அவசியமானதாகும்.

- Advertisement -

எனவே குறிப்பிட்ட இந்தப் பத்து நட்சத்திரங்களில் திருமணம் செய்வது மிகவும் நன்றாக இருக்கும். மிருகசீரிஷம், மகம், சுவாதி, அஸ்தம், உத்திரம், மூலம், அனுஷம், உத்திராடம், திருவோணம், உத்திராட்டாதி, ரேவதி போன்ற நட்சத்திரங்களில் திருமணம் செய்யலாம்.

திருமணம் செய்ய ஏற்ற நாள் மற்றும் லக்னம்:
ரிஷபம், மிதுனம், கன்னி, கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் போன்ற லக்னங்களில் திருமணம் முடிப்பது சிறப்பு. அவ்வாறு மணமகன், மணமகள் பொருத்தம் பொருந்தி விட்டால், நேரம், நட்சத்திரம் சரியாக அமைந்துவிட்டால் அனைத்துவித நாட்களுமே சிறந்த நாட்கள் தான். எனவே செவ்வாய் கிழமை, சனிக்கிழமை இவை இரண்டைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் திருமணம் செய்யலாம்.

- Advertisement -