ஒருவருடைய வறுமை என்பது அவருடைய வாழ்க்கையையே மாற்றும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக திகழ்கிறது. யாரொருவருக்கு வறுமை ஏற்படுகிறதோ அவர்கள் கண்டிப்பான முறையில் கடன் பிரச்சினையால் பாதிக்கப்படுவார்கள். கடன் வந்துவிட்டால் வாழ்க்கையில் நிம்மதி என்பதே இருக்காது. ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். அதனால் நம்மால் முடிந்த அளவிற்கு வறுமை நம்மை ஆட்கொள்ளாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த வறுமை நம்மிடம் அணுகக் கூடாது என்றால் நம்முடைய கடின உழைப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இதோடு மகாலட்சுமி தாயாரின் அருளும் பரிபூரணமாக தேவைப்படுகிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய வறுமை நீங்கி மகாலட்சுமி லஷ்மி கடாட்சம் ஏற்படுவதற்கு ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
மகாலட்சுமி தாயாரின் அருள் பெற்ற பொருட்களை வைத்து நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் லஷ்மி கடாட்சம் என்பது ஏற்படும். லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு விட்டாலே வறுமை நீங்கி வருமானம் அதிகரித்து கடன் சுமையிலிருந்து நம்மால் வெளியே வர முடியும். அப்படி மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய ஒரு பொருளாக திகழ்வதுதான் மருதாணி இலை. மருதாணியை கையில் வைத்துக்கொண்டு நாம் வழிபாடு செய்தோம் என்றால் அந்த வழிபாட்டின் முழு பலனையும் நம்மால் பெற முடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அப்படிப்பட்ட மருதாணியில் மகாலட்சுமி தாயாரின் அம்சம் நிறைந்திருக்கிறது. இந்த தீபத்தை வியாழன், வெள்ளி அல்லது பௌர்ணமி தினங்களில் வீட்டில் ஏற்றலாம். ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலையைப் போட்டு பரப்பிக் கொள்ள வேண்டும். அதற்கு மேலே மகாலட்சுமி தாயாரின் அம்சம் பொருந்திய ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை போட்டு உங்கள் கை நிறைய சில்லறை காசுகளை எடுத்து அதற்கு மேல் பரப்பி விட வேண்டும்.
பிறகு அதற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை மகாலட்சுமி தாயாருக்கு முன்பாகவோ அல்லது பெருமாளுக்கு முன்பாகவோ ஏற்றலாம். பிறகு இந்த தீபத்தை சுற்றி வாசனை நிறைந்த மலர்களை வைத்து அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். இந்த முறையில் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமாவது நாம் தீபம் ஏற்று வழிபட்டோம் என்றால் மகாலட்சுமி தாயாரின் பரிபூரணமான அருள் நமக்கு கிடைக்கும். வறுமை நீங்கும். வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினை அனைத்தும் படிப்படியாக குறையும்.
இதையும் படிக்கலாமே: குலதெய்வம் வீட்டிற்கு வர சொல்ல வேண்டிய மந்திரம்
மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை வாரம் தோறுமோ மாதம் தோறுமோ தவறாமல் முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுடைய வாழ்க்கையில் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.