இந்த விஷயம் மட்டும் உங்களுக்கு தெரிந்தால், நாளைக்கே இந்த செடியை கொண்டு வந்து உங்கள் வீட்டு வாசலில் முன்பு நட்டு வைத்து விடுவீர்கள்!

maruthani-lakshmi

எல்லோர் வீட்டு வாசலிலும் இருக்க வேண்டிய செடிகளின் பட்டியலில், இந்த மருதாணி செடியும் ஒன்று. மருதாணி செடி இலைகளை பறித்து பெண்கள் தங்களுடைய கையில் வைத்துக் கொண்டால் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பதையும் தாண்டி இன்னும் சில விஷயங்களை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த மருதாணி செடிக்கு உள்ள மகத்துவத்தை தெரிந்துகொண்டால், நாளையே உங்கள் வீட்டு வாசலில் மருதாணி செடியைக் கொண்டு வந்து நட்டு வளர்க்கத் தொடங்கி விடுவீர்கள். அந்த அளவுக்கு அதி அற்புதம் வாய்ந்த மகிமைகள் இந்த மருதாணி செடிக்குள் அடங்கியுள்ளது. அதில் சிலவற்றை பற்றி இப்போது நாமும் தெரிந்து கொள்வோம்.

maruthani2

பொதுவாகவே பெண்கள் எப்போது வேண்டும் என்றாலும் இந்த மருதாணி இலைகளை பறித்து அரைத்து தங்களுடைய கைகளில் வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக விரல்களில் உள்ள நகங்களில் மருதாணியை இட்டு வைக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். பெண்களுக்கு மாதவிடாய் காலங்கள் வருவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு இந்த மருதாணி இலைகளை அவர்களுடைய கைகளில் வைத்துக் கொண்டால், ஆரோக்கிய ரீதியாகவும் நமக்கு உடல் சூடு தணியும். வயிறு வலி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறைவதை நிச்சயம் பெண்களால் உணர முடியும்.

மாதவிலக்கு நேரத்தில் பெண்களை, கண்ணுக்குத் தெரியாத கெட்ட தேவதைகள் அணுகும் என்ற ஒரு கருத்தும் உண்டு. அந்த கெட்ட சக்தி பெண்களிடம் நெருங்காமல் இருக்க, கையில் சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த மருதாணி, பெண்களை பாதுகாக்கும்.

அடுத்தபடியாக இந்த மருதாணி இலைகளை பறித்து அரைத்து சிறிய தட்டைகளாக தட்டி வெயிலில் நன்றாக உலர வைத்துக் கொள்ளுங்கள். இது காய்ந்ததும் வரட்டி போல மாறிவிடும். சிலபேர் இதை தேங்காய் எண்ணெயில் போட்டு தலைக்கு தேய்க்க பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த மருதாணி இலை தட்டைகளை கொஞ்சம் சுத்தபத்தமாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டு பூஜை அறையில் வெள்ளிக்கிழமை அன்று இந்த மருதாணி இலை தட்டையை ஒரு சிறிய மண் அகலில் வைத்து, அதன் மேலே ஒரு லவங்கம் வைத்து, அதன் மேலே ஒரு கற்பூரம் வைத்து ஏற்றி, உங்கள் வீட்டு மகாலட்சுமிக்கு ஆரத்தி காட்ட வேண்டும். இந்த கற்பூர ஆரத்தியை வீடு முழுவதும் கொண்டுபோய் காட்டுங்கள். வீட்டில் கண்ணுக்குத்தெரியாத கெட்ட சக்தி இருந்தால் அது உடனடியாக வெளியே விரட்டி அடிக்கப்படும். இந்த புகைக்கு வீட்டில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் கூட அழிந்து போகும்.

karpuram

அந்த அகல் விளக்கில் இருக்கும் மருதாணி வரட்டியை கற்பூரத்தால் எரித்து நன்றாக சாம்பலாக்கி, தனியாக ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமான காரியங்களுக்கு வெளியே செல்லும்போது அந்த மருதாணி பஸ்பத்தை கொஞ்சமாக எடுத்து நெய்யில் அல்லது பன்னீரில் குழைத்து நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். யார் கண்களுக்கும் தெரியாமல் உச்சந்தலையில் தடவிக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு நெற்றியில் பொட்டுப் போல வைத்தால் காத்து கருப்பு அண்டாது. உங்களுடைய காலடி பாதங்களிலும் லேசாக தடவி சென்றால், நீங்கள் செல்லும் காரியம் நிச்சயம் வெற்றிதான். முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.