டேஸ்டியானா மசாலா ஆம்லெட் இப்படி கூட செஞ்சு கொடுத்தா மிச்சம் வெக்காம எல்லா சாப்பாடும் காலியாகுமே!

egg-masala-omlet
- Advertisement -

விதவிதமான முட்டை வகைகளில் நாம் விரும்பி சாப்பிடும் இந்த ஆம்லெட் எல்லோரும் ஒன்று போல போடுவது கிடையாது. ஒவ்வொருவரும் தங்கள் வாகிற்கு ஏற்ப வித்தியாசமாக போட்டு அசத்த கூடிய இந்த ஆம்லெட்டை இது போல நீங்கள் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க, ஒரு குண்டான் சோறு இருந்தாலும் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க! அவ்வளவு டேஸ்டியான இந்த முட்டை ஆம்லெட் வித்தியாசமான முறையில் எப்படி போட போகிறோம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மசாலா ஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை – 2, பெரிய வெங்காயம் – ஒன்று, சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய் தூள் – அரை டீஸ்பூன், மல்லி தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலா – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

மசாலா ஆம்லெட் செய்முறை விளக்கம்:
முதலில் மசாலா ஆம்லெட் செய்வதற்கு தேவையான எல்லாப் பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு முட்டைக்கு இந்த அளவு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் நீங்கள் முட்டை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஏற்ப அளவுகளையும் கூட்டிக் கொள்ளுங்கள். பெரிய வெங்காயம் ஒன்றை மீடியம் அளவில் எடுத்து தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தோசைக் கல் ஒன்றை அடுப்பில் வைத்து பற்ற வையுங்கள். தோசைக்கல் கொஞ்சம் சூடானதும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு நன்கு பொரிந்து வந்ததும் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். வெங்காயம் சீக்கிரம் வதங்கி வர தேவையான அளவிற்கு உப்பை சேர்த்து வதக்கி பாருங்கள். அதற்குள் தேவையான அளவிற்கு முட்டையை எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்கு அடித்து வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வதங்கி வரும் பொழுது மசாலா வகைகளை இப்பொழுது ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும்.

- Advertisement -

முதலில் மஞ்சள் தூள் சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். பின்னர் அதிலேயே மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள் மற்றும் தனியா தூள் ஆகியவற்றை சேர்த்து தேவை என்றால் மேலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வதக்கி விடுங்கள். இவை நன்கு வதங்கிய பின்பு தோசைக் கல்லில் இருந்து ஓரமாக ஒதுக்கி வையுங்கள். இப்போது நீங்கள் அடித்து வைத்துள்ள முட்டையை நடுப்பகுதியில் ஊற்றி பரப்பி விடுங்கள். பின்னர் ஒதுக்கி வைத்துள்ள இந்த வெங்காய கலவையை தோசை கரண்டியால் எடுத்து அப்படியே முட்டை கலவையின் மீது போட வேண்டும்.

பின்னர் ஒருபுறம் நன்கு வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வையுங்கள். இதை செய்யும் பொழுது குறைந்த தீயில் வைத்துக் கொண்டு செய்யுங்கள். இருபுறமும் பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்து சுடச்சுட இந்த மசாலா ஆம்லெட்டை பரிமாற வேண்டியது தான். ரொம்பவே சூப்பரான ருசியாக இருக்கக் கூடிய இந்த ஆம்லெட்டை இந்த முறையில் நீங்களும் உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பார்த்து அசத்துங்க.

- Advertisement -