உப்புமாவை ஒரு முறை இந்த மசாலா சேர்த்து செஞ்சு பாருங்க உப்புமாவே பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட சட்டியை காலி பண்ணாம எந்திரிக்க மாட்டாங்க.

Masala rava uppuma
- Advertisement -

நம்மில் பெரும்பாலான பேருக்கு டிபன் வகைகளில் உப்புமா என்றால் எப்போதும் ஒரு அலர்ஜி தான். இதர உணவு வகைகளைப் போல இதை பெரும்பாலும் யாரும் விரும்பி உண்ணுவதில்லை. இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் உப்புமாவை கொஞ்சம் மசாலாக்கள் சேர்த்து மிகவும் சுவையாக செய்வது எப்படி என்பதை தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த உப்புமா செய்ய முதலில் ஒரு வெங்காயம், இரண்டு தக்காளி, இரண்டு பச்சை மிளகாய், ஐந்து பல் பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து சூடானதும் ஒரு கப் ரவையை லேசாக வாசம் வரும் வரை வறுத்து அதை ஒரு தட்டில் கொட்டி தனியாக அப்படியே ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது மறுபடியும் அடுப்பை பற்ற வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடான பிறகு கால் டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் உளுந்து, சேர்த்து பொரிந்த பிறகு, ஐந்து முந்திரி ஒரு கைப்பிடி பச்சை வேர்க்கடலை இவை இரண்டையும் சேர்த்து நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு கொஞ்சமாக கருவேப்பிலை சேர்த்த பிறகு நறுக்கி வைத்த பூண்டு, பச்சை மிளகாய், சேர்த்து கலந்த பிறகு வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வந்த பிறகு அரிந்து வைத்த தக்காளியை சேர்த்து தக்காளி நன்றாக குழையும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

இப்போது தக்காளி குழைந்த பிறகு ஒரு டீஸ்பூன் மிளகாய்த் தூள், கால் டீஸ்பூன் கரம் மசாலா, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், 1அரை ஸ்பூன் உப்பு இவை அனைத்தும் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்த பிறகு ஒரு கப் ரவைக்கு இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த நேரத்தில் உப்பை ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் ஏற்கனவே வறுத்து வைத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கொள்ளுங்கள். ரவையை கொட்டும் போது ஒரு பக்கம் கரண்டியால் கிளறி விடுங்கள். ரவை முழுவதும் சேர்த்த பிறகு அடுப்பை லோ ஃப்லேமில் வைத்து மூடி போட்டு இந்த உப்புமாவை 5 நிமிடம் மூடி வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கல்யாண வீட்டு பருப்பு ரசம்

ஐந்து நிமிடம் கழித்து ஒரு முறை லேசாக கலந்து பிறகு மேலே கொத்துமல்லி தழைகளை தூவி இறக்கி விட்டால் மிகவும் சுவையான சாலா உப்புமா தயார். இதற்கு தேங்காய் சட்னி அரைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். இந்த முறையில் செய்தால் உப்புமா வேண்டாம் என்று யாரும் சொல்லவே மாட்டார்கள். நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க

- Advertisement -