அதிரசம் செய்வது இவ்வளவு ஈசியா? இத்தனை நாளா இது தெரியாமல் போயிருச்சே!

adhirasam7
- Advertisement -

நம்முடைய பாரம்பரியமான உணவு வகைகளில் அதிரசமும் ஒன்று. நிறையப் பேருக்கு அதிரசம் ரொம்பவும் பிடிக்கும். கடையிலிருந்து வாங்கி சாப்பிடுவார்கள். வீட்டில் செய்தால் சரியான பக்குவம் வராது என்ற காரணத்தால், ஆசை தீர அந்த அதிரசத்தை சாப்பிட முடியாது. உங்களுடைய வீட்டிலேயே செய்தால் அந்த அதிரசத்தை பத்து நாட்கள் கூட வைத்து சாப்பிடலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த பாரம்பரிய அதிரசத்தை சுலபமாக, மிக மிக சுலபமான முறையில் எப்படி செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

adhirasam3

அதிரசம் செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1/2 கிலோ, வெல்லம் 1/2 கிலோ, அதிரசத்தை சுட்டு எடுப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய். (கடையில் பச்சரிசி வாங்கும்போது, மாவு பச்சரிசி என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். வெல்லத்திலும் பாகு வெல்லமாக கிடைத்தால் அதிரசத்தின் சுவை கூடுதலாக கிடைக்கும்.)

- Advertisement -

Step 1:
முதலில் பச்சரிசியை 3 முறை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு, அதன் பின்பு குடிக்கின்ற நல்ல தண்ணீர் ஊற்றி, மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு அந்த அரிசியில் இருந்து தண்ணீரை மொத்தமாக வடிகட்ட வேண்டும். ஒரு சொட்டு தண்ணீர் கூட இருக்கக் கூடாது. முடிந்தால் சாப்பாட்டு பானையில் அரிசியை போட்டு, சாப்பாடு வடிப்பது போலவே, ஐந்து நிமிடங்கள் அதிலிருக்கும் தண்ணீரை வடித்து எடுத்து விட்டால் கூட சரிதான்.

adhirasam1

Step 2:
இந்த அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த அரிசியை சல்லடையில் போட்டு சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதிரசம் செய்ய அரிசி மாவு ரொம்பவும் நறநறவென்று இருக்கக் கூடாது.

- Advertisement -

மாவை அப்படியே ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு கிண்ணத்தை வைத்து, அதில் 1/2 கிலோ அளவு வெல்லத்தை, தூள் செய்து போட்டு கொள்ளுங்கள். இந்த வெல்லத்தோடு கால் டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி, நன்றாகக் கரைத்து கொதிக்க விட வேண்டும். வெள்ளம் முழுமையாக கொதி வந்த பிறகு, அடுப்பில் 5 நிமிடங்கள் வரை வெல்லத்தை பாகு காய்ச்சினால் மட்டும் போதும். உங்களுக்கு பாகு பதம் பார்க்கத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை.

adhirasam2

Step 3:
அடுப்பில் வெல்லம் நன்றாகக் கொதிக்க ஆரம்பிக்க வேண்டும். அதன் பின்பு அடுப்பை, மிதமான தீயில் வைத்து விட்டு, வெள்ளத்தை 5 நிமிடங்கள் மட்டும் கொதிக்க வைத்து, அகலமான பாத்திரத்தில் தயாராக இருக்கும் அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, மர கரண்டியை போட்டு நன்றாக கலக்க வேண்டும். (வெல்லத்தில் தூசி இருந்தால், வடிகட்டியில் வடிகட்டி ஊற்றிக் கொள்ளுங்கள்.) மரக் கரண்டி இல்லை என்றாலும், உங்களுடைய வீட்டில் பருப்பு கடையும் மத்து இருக்கும் அல்லவா? அந்த மத்தை கொம்பு பக்கமாக வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக பாகு காய்ச்சி இருக்கும் வெள்ளத்தை, அரிசி மாவில் ஊற்றி கரைத்துவிட வேண்டும்.

- Advertisement -

adhirasam

Step 4:
கரைப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். இருப்பினும் கட்டி பிடிக்காமல் கலந்து விடுங்கள். (இறுதியாக இந்த மாவில் கால் ஸ்பூன் அளவு சோடா உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.ஏலக்காய் தூள் சுக்கு தூள் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.) அதன் பின்பு மீண்டும் நன்றாக மாவை கலக்கி விடுங்கள். உடனடியாக அதிரச மாவை சூட்டோடு மூடி போட்டு மூடக்கூடாது. கொஞ்ச நேரம் நன்றாக ஆறிய பின்பு மூடி வைத்துக் கொள்ளலாம்.

adhirasam4

வெல்லத்தை ஊற்றி கலக்கும்போது, மாவு தண்ணீர் பதத்தில் தான் இருக்கும். இந்த மாவை அப்படியே 8 மணி நேரம் வரை ஆற விட்டு விடுங்கள். அதன் பின்புதான் அதிரச மாவு கெட்டியாக மாறும். இரவு இந்த மாவை தயார் செய்துவிட்டு, மறுநாள் காலை அதிரசத்தை சுட்டு எடுக்கலாம். 8 மணி நேரம் கழித்து, அந்த மாவை, எடுத்து அகலமான தட்டில் போட்டு, சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். (மாவின் பக்குவம் உங்களுக்கு சரியாகதான் இருக்கும். மாவு ரொம்ப கெட்டியாக இருப்பது போல நீங்கள் உணர்ந்தால், கொஞ்சமாக சுடுதண்ணீரை தெளிப்பு பிசைந்து கொள்ளலாம். தவறொன்றும் கிடையாது.)

adhirasam5

Step 5:
வாழை இலை இருந்தால் அதில் கொஞ்சம் எண்ணெய் தடவி, அதில் உருண்டைகளை வைத்து தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட்டு, எண்ணெயில் விட்டு பொரித்து எடுத்துக் கொள்ளலாம். வாழை இலை இல்லாதவர்கள் பால் கவர் அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் மற்ற ஏதாவது ஒரு கவரை சதுர வடிவில் வெட்டிக் கொண்டு, அதில் கொஞ்சம் எண்ணையை தடவிக் கொண்டு ஒவ்வொரு அதிரச உருண்டைகளாக எடுத்து தட்டி, சுட்டு எடுத்தால் சூப்பர் அதரசம் சுலபமாக தயாராகி இருக்கும்.

adhirasam6

ஒருவரால் இந்த அதிரசத்தை செய்து முடித்துவிட முடியாது. ஒருவர் தட்டிப் போட்டுக் கொண்டே இருக்க, ஒருவர் எண்ணெய் சட்டியில் இருந்து அதிரசத்தை சிவக்க வைத்து எடுத்தால், கொஞ்சம் வேலை ஈசியாக முடியும். ஆனால், இந்த முறையில் ஒரு முறை அதிரசத்தை முயற்சி செய்து பாருங்கள். பக்குவம் தவறாமல் சூப்பரா சூட்டி எடுத்திடலாம்.

இதையும் படிக்கலாமே
ஒரே மாதிரியான வடை சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? இப்படி ஒரு தெய்வீகமான வடையை முயற்சி செய்து பாருங்கள்! அப்புறம் அடிக்கடி சுட ஆரம்பிச்சிடுவீங்க.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -