உங்கள் வீட்டில் அரைத்து வைத்திருக்கும் எந்த ஒரு மசாலா பொடியிலும் இனி ஒரு வண்டு கூட வராது. இந்த டிப்ஸை ஒரு வாட்டி ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

masala-powder
- Advertisement -

பொதுவாகவே நம்முடைய வீட்டில் அரைத்து வைத்திருக்கும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், இந்த பொருட்களில் எல்லாம் சீக்கிரமே வண்டு வந்துவிடும். குறிப்பிட்டுச் சொல்லப் போனால் ரவை, மைதா மாவு, கோதுமை மாவு, போன்ற பொருட்களிலும் சீக்கிரமே வண்டுபிடித்துவிடும். வண்டு பிடிக்காமல் இருப்பதற்கு வேப்ப இலை, பட்டை துண்டு, லவங்கம் இப்படி நிறைய பொருட்களை அதில் போட்டு வைத்தாலும் வண்டு பிடிக்கத்தான் செய்கிறது. என்ன செய்வது சமையல் பொருட்களில் வண்டுபிடிக்காமல் இருக்க சில புதிய குறிப்புகள்.

masala-powder1

உங்களுடைய வீட்டில் எந்த மசாலா பொருட்களை கிலோ கணக்கில் நிறைய அரைத்து வைத்திருக்கும் பட்சத்தில் அந்த பெரிய டப்பாவில் அப்படியே வைத்து சமையலுக்கு பயன்படுத்த கூடாது. பெரிய டப்பாவில் இருக்கக்கூடிய மசாலா பொருட்களை தேவையான அளவு ஒரு சிறிய டப்பாவிற்கு மாற்றிக் கொண்டு, அதன் பின்பு தான் பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

கிலோ கணக்கில் ஸ்டோர் செய்து  வைத்திருக்கும் மசாலா பொருட்களின் அளவிற்கு ஏற்ப அந்தப் பொருளோடு உப்பினை கலந்து வைக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு கிலோ மிளகாய்த்தூள் அரைத்து வைத்துள்ளர்கள் என்றால் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு உப்பை அந்த மிளகாய்த் தூளுடன் நன்றாக கலந்து வைத்தால் சீக்கிரத்தில் அந்த மிளகாய் தூள் வண்டு பிடிக்காமல் இருக்கும். மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா பொடி இப்படி எல்லாம் பொடிக்கும் இந்த டிப்ஸ் பொருந்தும்.

salt

உப்பு தூளுக்கு பதிலாக இந்த மசாலாப் பொருட்களில் கொஞ்சமாக பெருங்காயப் பொடியையும் கலந்து வைக்கலாம். பெருங்காயப் பொடியை நீங்கள் மசாலா பொருட்களோடு கலந்து வைத்த பின்பு, அதை சமையலில் சேர்க்கும் போது பெருங்காயத்தூள் அளவோடு பார்த்து சேர்த்துக் கொள்ளவேண்டும். பெருங்காயத் தூள் வாசம் சமையலில் அதிகமாக வீசும் அளவிற்கு விட்டுவிடாதீர்கள். மசாலா பொருட்களில் பெருங்காயப் பொடியை சேர்த்து கலந்து வைத்தாலும் நிச்சயமாக அந்த பொடி நீண்ட நாட்களுக்கு வண்டு வராமல் இருக்கும்.

- Advertisement -

கோதுமை மாவிலும் கொஞ்சமாக உப்பு சேர்த்து கலந்து வைத்தால் வண்டு படிக்காமல் இருக்கும். ரவையை நன்றாக வறுத்து எடுத்து ஆறவைத்து, ஒரு ஈரமில்லாத காற்றுப்புகாத டப்பாவில் ஸ்டோர் செய்து வைப்பதுதான் ஒரே வழி. வெறும் அரை கிலோ பாக்கெட் என்றால், அந்த ரவையை எழுத்து எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம் நீண்ட நாட்களுக்கு வண்டு, புழு பிடிக்காது.

ravai

அடுத்தபடியாக வெல்லம், சர்க்கரை போன்ற பொருட்களில் எறும்பு வராமல் இருப்பதற்கு கிராம்பை போட்டு வைக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். இருப்பினும் அதில் எரும்பு வரத்தான் செய்கிறது. சர்க்கரைக்கு உள்ளே எறும்பு போகும் அளவிற்கு, டப்பாவில் சர்க்கரையை கொட்டி வைக்கக்கூடாது.

- Advertisement -

perungayam

சர்க்கரையை கொட்டி வைத்திருக்கும் டப்பாவின் மேலே உள்ள மூடி அழுத்தமாக இல்லை எனும் பட்சத்தில் சர்க்கரை வாசத்திற்கு எறும்பு போகத்தான் செய்யும். டப்பாவுக்கும் மூடிக்கும் இடையே ஒரு டிஷ்யூ பேப்பரையோ அல்லது கவரையோ போட்டுவிட்டு, அதன் பின்பு அதன் மேல் மூடியை போட்டு இறுக்கமாக மூடி வையுங்கள். உள்ளே எரும்பு போவதற்கு வாய்ப்பே கிடையாது.

box

இறுதியாக ஒரு டிப்ஸ். என்னதான் மசாலா பொருட்களில் வண்டு வராமல் இருக்க வேண்டும் என்று பாதுகாத்து வைத்தாலும் ஒரு மாதத்திற்கு ஒரு முறை அந்த மசாலா பொருட்களை வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கும் பட்சத்தில் அந்த மசாலா பொருட்களில் வண்டு வராமல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

அந்த காலத்தில் நம்முடைய பாட்டிமார்களுக்கு இதே வேலைதான். வீட்டில் உள்ள பருப்பு வகைகள் தானிய வகைகள் மசாலா பொருட்கள் அனைத்தையும் வெயிலில் காய வைத்து அடிக்கடி சுத்தம் செய்து பத்திரப்படுத்தி வைப்பார்கள். இப்போது நாம் எல்லா பொருட்களையும் எல்லா மசாலா வகைகளையும் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்கின்றோம். உங்களுக்கு எது வசதியாக உள்ளதோ அதை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்.

- Advertisement -