மாசி மாதம் என்றாலே அந்த மாதத்திற்கு ஒரு தனி சிறப்பு. மாசிமகம், மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி, காரடையான் நோன்பு, மாசி அமாவாசை, மாசி பௌர்ணமி என்று எல்லா நாளுமே விசேஷமான நாட்கள் தான். இந்த மாதமானது குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமை அன்று பிறக்கவிருக்கிறது. பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர வேண்டும்.
இந்த மாதமாவது கடன் தொல்லையிலிருந்து விடுபட வேண்டும், இந்த மாதம் ஆவது வாழ்க்கையில் பெரிய நல்லது நடக்க வேண்டும் என்பவர்கள், மாசி 1 ஆம் தேதி வியாழக்கிழமை குரு பகவானை நினைத்து என்ன வழிபாடு முறைகளை மேற்கொள்வது, ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
குரு பகவான் வழிபாடு
குரு பகவான் என்றாலே அவருக்கு பிடித்த பொருள் கருப்பு கொண்டை கடலை. மஞ்சள் நிறம். ஆக மஞ்சள் நிற பூக்களை வாங்கிக் கொள்ளுங்கள். கருப்பு கொண்டை கடலையை வாங்கிக் கொள்ளுங்கள். நாளை காலை 108 கொண்டைக்கடலைகளை ஒரு கிண்ணத்தில் போட்டு, பூஜை அறையில் வைத்து தட்சிணாமூர்த்தியின் திருவுருவப்படம் இருந்தால், அதற்கு மஞ்சள் நீற பூக்களை போடுங்கள்.
இல்லை என்றால் விளக்குக்கு பக்கத்தில் மஞ்சள் நிற பூக்களை வைத்துக்கொண்டு, தீபச்சுடர் தான் தட்சிணாமூர்த்தி, குரு பகவான் என்று நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய பணக்கஷ்டம் என்ன. அது தீர வேண்டும் என்று பிரச்சனையை குரு பகவானிடம் சொல்லி மனதார வேண்டிக்கொண்டு, அந்த கருப்பு கொண்டை கடலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு ஊறவைத்து விடவும். நாளை காலை இந்த வேண்டுதலை வைத்துவிட்டு, அந்த கொண்டைக்கடலை தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும்.
நாளை மாலை 6 மணிக்கு மஞ்சள் நிற நூலில் இந்த கருப்பு கொண்டை கடைகளை கோர்த்து, உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு எடுத்துச் செல்லுங்கள். தட்சிணாமூர்த்தி இருக்கக்கூடிய கோவிலுக்கு செல்ல வேண்டும். தட்சிணாமூர்த்திக்கு இந்த கொண்டை கடலை மாலையை போட்டு, மஞ்சள் நிற பூக்களை வாங்கி கொடுத்துமுடிந்தால் மஞ்சள் நிற பிரசாதம் செய்து வைத்து, மஞ்சள் நிற வஸ்திரம் வாங்கி குருபகவானுக்கு தானம் செய்து, பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். சிவன் கோவிலில் தட்சிணாமூர்த்தி சன்னிதானம் இருக்கும் அந்த இடத்திற்குச் சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளவும்.
இந்த வழிபாட்டை நாளைய தினம் செய்தால் இந்த மாசி மாதம் முடிவதற்குள் உங்களுடைய பணக்கஷ்டம் நிச்சயம் தீரும். எல்லோருமே பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் சிக்கி இருக்கின்றோம். உங்களுக்கும் இதுபோல ஏதாவது தீராத கஷ்டங்கள் இருக்கிறது. இந்த பண கஷ்டத்தால் என்னால் இரவில் நிம்மதியாக தூங்கக்கூட முடியவில்லை என்றால், அந்த ஒரு பண கஷ்டத்திற்காகவே இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.
இதையும் படிக்கலாமே: மாசி 1. விஷ்ணுபதி புண்ணிய காலம் 2025
அந்த பண கஷ்டத்தை தீர்த்துக் கொடுப்பதற்கு அந்த தட்சிணாமூர்த்தி நிச்சயம் உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நல்லதொரு வழியை காண்பித்துக் கொடுப்பார் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.