- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமாசி அமாவாசை குலதெய்வ வழிபாடு

மாசி அமாவாசை குலதெய்வ வழிபாடு

- Advertisement -

மாசி சிவராத்திரி என்பது சிவபெருமானுக்கு எப்படி உகந்த நாளாக கருதப்படுகிறதோ அதேபோல்தான் பலரும் இந்த மாசி சிவராத்திரி சமயத்தில் குலதெய்வ வழிபாட்டை செய்வார்கள். மேலும் அடுத்த நாள் வரக்கூடிய அமாவாசை என்பது குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அப்படி மாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தன்று வீட்டில் எந்த தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மாசி அமாவாசை குலதெய்வ வழிபாடு

இந்த பிரபஞ்சத்தில் பேராற்றல் மிகுந்த நாளாக கருதப்படுவது அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்கள்தான். அதனால் தான் அன்றைய தினத்தில் குலதெய்வ வழிபாட்டையும் இஷ்ட தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதிலும் சில குறிப்பிட்ட மாதங்களில் வரக்கூடிய அமாவாசை, பௌர்ணமி தினங்களில் கண்டிப்பான முறையில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குறிப்பிட்ட மாதங்களில் ஒன்றாக திகழ்வதுதான் மாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினம். அன்றைய தினத்தில் நாம் கண்டிப்பான முறையில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

குலதெய்வத்தின் அருள் கிடைத்துவிட்டால் நம் வாழ்வில் எண்ணற்ற நன்மைகள் உண்டாகும் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட குலதெய்வம் நம்முடைய வீட்டிற்கு வருவதற்கு மாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையான பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் இரவு 12 மணிக்குள் இந்த ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய குலதெய்வம் நம் வீட்டிற்கு வந்து பரிபூரணமான அருளை தரும் என்று கூறப்படுகிறது.

இதற்கு ஒரு மண்ணால் செய்யப்பட்ட சிறிய பானை அல்லது ஒரு பெரிய அகல் விளக்கை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். அதற்கு மேல் பச்சரிசியை பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றும் பொழுது உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை முழுமனதோடு நினைத்துக் கொண்டும் கூறிக் கொண்டு ஏற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி நாம் மண்ணால் செய்யப்பட்ட தட்டின் மீது பச்சரிசியை பரப்பி தீபம் ஏற்றும் பொழுது குலதெய்வம் எங்கு இருந்தாலும் நம் வீடு தேடி ஓடி வந்து நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றும். இந்த தீபம் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் எரிய வேண்டும். பிறகு அதை குளிர வைத்து விடலாம். தீபத்தை குளிர வைத்தபிறகு பச்சரிசியை நாம் எப்பொழுதும் போல் சமையலுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். மற்ற பொருட்களை எப்பொழுது போல் சுத்தம் செய்து வேறு ஏதாவது பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:முன் ஜென்ம கர்ம வினை

எளிதில் கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை வைத்து நாம் குலதெய்வத்தை நினைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்ய குலதெய்வம் நம் வீடு தேடி வந்து நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்