பொதுவாகவே ஒவ்வொரு வாரத்திலும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை என்பது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. அதிலும் மாசி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை என்பது தை வெள்ளி மற்றும் ஆடி வெள்ளிக்கு இணையான பலனை தரக்கூடியதாக திகழ்கிறது. அதோடு மட்டுமல்லாமல் மாசி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை என்பது காரடையான் நோன்போடும் அதே சமயம் பௌர்ணமி திதியும் சேர்ந்து வரக்கூடியது என்பதால் இந்த வெள்ளிக்கிழமைக்கு அதீத சக்தி இருக்கிறது. அப்படிப்பட்ட மாசி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை வீட்டில் எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் ராஜ யோக வாழ்க்கை அமையும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மாசி கடைசி வெள்ளி வழிபாடு
மகாலஷ்மிக்கு உரிய கிழமையாக திகழக்கூடியது தான் வெள்ளிக்கிழமை. மேலும் அம்பாளை வழிபாடு செய்வதற்கு உகந்த கிழமையாகவும் வெள்ளிக்கிழமை திகழ்கிறது. பராசக்தியை வழிபாடு செய்து தீர்க்க சுமங்கலி யோகத்தை பெற்ற சாவித்திரி தேவி மேற்கொண்ட விரதத்தை தான் காரடையான் நோன்பு என்று கூறுகிறோம். இந்த காரடையான் நோன்பும் மாசி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்றுதான் வருகிறது. மேலும் அன்றைய தினம் தான் மாசி மாதத்தின் கடைசி நாளாகவும் திகழ்கிறது. அன்றைய தினத்தில் மகாலட்சுமி ஜெயந்தியும் சேர்ந்து வருகிறது என்பதால் அன்றைய தினம் மிகவும் விசேஷ மிகுந்த தினமாக கருதப்படுகிறது.
காரடையான் நோன்பு விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் எப்பொழுதும் போல் அவர்களுடைய வழிபாட்டை மேற்கொள்வதோடு இந்த ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வைத்தால் மட்டும் போதும். மகாலட்சுமி வழிபாடு செய்தாலும் அம்பாளை வழிபாடு செய்தாலும் மற்ற பிற தெய்வங்களை வழிபாடு செய்தாலும் அந்த வழிபாட்டோடு இந்த ஒரு தீபத்தை மட்டும் ஏத்தி வைத்தால் போதும். வீட்டில் எப்போதும் ஏற்றக்கூடிய தீபங்களை தவிர்த்து இந்த ஒரு தீபத்தை நாம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை மார்ச் மாதம் 14ஆம் தேதி காலையிலிருந்து இரவுக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம். ராகு காலம், எமகண்டம் இந்த நேரத்தை மட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள். முடிந்த அளவிற்கு மாலை நேரத்தில் ஏற்றுவது மிகவும் சிறப்பு.
இதற்கு நமக்கு தேவைப்படக்கூடிய முக்கியமான ஒன்றுதான் அரச இலை, மரங்களின் ராஜாவாக திகழக்கூடியது தான் அரசமரம். இந்த அரச மரத்தில் இருந்து ஒரே ஒரு இலையை மட்டும் பறித்து வந்து மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தம் செய்து ஈரமில்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த அரச இலைக்கு சந்தனம் குங்குமம் வைத்து வீட்டு பூஜை அறையில் ஒரு தாம்பாள தட்டை வைத்து அதற்கு மேல் அந்த இலையை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபம் கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். இந்த தீபத்திற்கு வாசனை மிகுந்த மலரை சூட்ட வேண்டும். இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு அந்த தீபத்திற்கு பக்கத்திலேயே ஒரு சிறிய கிண்ணத்தில் வெள்ளை மூச்சை வைத்து உங்களுடைய இஷ்ட தெய்வத்தையும் குலதெய்வத்தையும் மனதார வழிபாடு செய்ய வேண்டும். மேலும் கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும், திருமணம் நடக்க வேண்டும், வேலை கிடைக்க வேண்டும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று எந்த வேண்டுதல் உங்களுக்கு இருந்தாலும் அந்த வேண்டுதலை கூறி வழிபாடு செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து அந்த தீபத்தை குளிர வைத்துவிடலாம்.
இதையும் படிக்கலாமே:காரடையான் நோன்பு வழிபாடு
இந்த முறையில் மாசி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று நாம் தீபமேற்றி வழிபாடு செய்ய அனைத்து தெய்வங்களின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நம்முடைய வேண்டுதல் நிறைவேறுவதோடு கடன் இல்லாத ராஜ யோக வாழ்க்கையை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.