மாசி வெள்ளி அங்காள பரமேஸ்வரி வழிபாடு

angala-eshwari
- Advertisement -

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது. ஆடி மாதம் என்றால் மாரி அம்மனுக்கு, புரட்டாசி என்றால் பெருமாளுக்கு, கார்த்திகை என்றால் ஐயப்பனுக்கு, என்று ஒவ்வொரு வழிபாட்டை ஒவ்வொரு மாதத்திற்கு என்று ஒதுக்கி வைத்திருக்கின்றோம். அதேபோல இந்த மாசி மாதம் எந்த அம்பாளுக்கு சிறப்பு.

குடும்ப கஷ்டம் தீர, மாசி மாதம் செவ்வாய்க் கிழமையும், வெள்ளிக்கிழமையும் எந்த கோவிலுக்கு சென்று எப்படி வழிபாடு செய்து. சக்தி வாய்ந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

அங்காள பரமேஸ்வரி வழிபாடு

குடும்பத்தில் ஓயாத பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. சுப காரியத்தடை, திருமணம் ஆகி ரொம்ப நாள் ஆகியும் குழந்தை வரம் கிடைக்கவில்லை. வீட்டில் கணவருக்கு வருமானமே இல்லை. கடன் தொல்லையும் இருக்கிறது. குடும்பத்தில் உறவுகளோடு எப்போதும் சண்டை சச்சரவு தான். நிம்மதி என்பது ஒரு துளி கூட கிடையாது. கண் திருஷ்டி கெட்ட சக்தியின் தாக்கம்.

இரவு தூக்கம் என்பதே இல்லை என்று புலம்புபவர்கள் எல்லோருமே இந்த வழிபாட்டை மறக்காமல் செஞ்சுருங்க. இந்த மாசி மாதம் நாம் வழிபட வேண்டிய தெய்வம் அங்காள பரமேஸ்வரி. கஷ்டங்களை தூக்கிப்போட்டு வதம் செய்யக்கூடியவள் இவள். கொஞ்சம் கோவக்காரி தான். ஆனால் குழந்தை உள்ளம் கொண்டவள்.

- Advertisement -

மாசி மாதம் தன்னுடைய ஆலயத்திற்கு வந்து பக்தர்கள் கேட்ட வரங்களை வாரி கொடுத்து விடுவாள். இந்த மாசி மாதம் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு செல்லுங்கள். அங்காள ஈஸ்வரிக்கு உங்களால் முடிந்தால் எலுமிச்சம் பழம் மாலை கோர்த்து கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால் செவ்வரளி பூக்களால் மாலை கட்டி அம்பாளுக்கு சாத்தலாம்.

அம்பாளுக்கு இரண்டு மண் அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அம்பாள் கோவிலுக்கு சிவப்பு நிறத்தில் இருக்கும் குங்குமத்தை வாங்கி தானம் கொடுக்க வேண்டும். உங்களால் முடியும் என்றால் சிவப்பு நிற வஸ்த்திர தானமும் அம்பாளுக்கு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அம்பாள் கோவிலில் சூலத்திற்கு முன்பாக நின்று கொண்டு உங்கள் குடும்ப கஷ்டம் தீர வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஒரு எலுமிச்சம் பழத்தை அந்த சூளத்தில் குத்துங்கள். உங்களை பிடித்த கெட்ட சக்தி எல்லாம் நசுங்கிப் போகும். பிறகு அம்பாளை மூன்று முறை வலம் வந்து நமஸ்காரம் செய்து கொண்டு சிறிது நேரம் கோவிலில் அமர்ந்து பிரார்த்தனை வைக்கலாம். இதனால் உங்களுடைய பெரிய குடும்பப் பிரச்சனை கூட சுலபமாக சரியாகிவிடும்.

நம்ம எல்லாருக்கும் தெரியும். மாசி மாதம் மசான கொள்ளை எவ்வளவு சிறப்பு வாய்ந்த வழிபாடு என்பது. மாசி மாதம் செவ்வாய், வெள்ளி, அமாவாசை பௌர்ணமி, இப்படி வரக்கூடிய தெய்வீக ஆற்றல் நிறைந்த நாட்களை தவிர விடாமல் அங்காள பரமேஸ்வரி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் உங்கள் குடும்பத்திற்கு நல்லது நடக்கும்.

உங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மேல் சொன்ன வழிபாடை செய்து வேண்டுதல் வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் முடிந்தால் இந்த மாசி மாதத்தில் ஒரு செவ்வாய்க்கிழமையோ, வெள்ளிக்கிழமையோ அல்லது வேறு ஏதாவது கிழமையிலோ மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு ஒரு முறை சென்று வாருங்கள். ரொம்ப ரொம்ப நல்லது.

இதையும் படிக்கலாமே: உடனடியாக பணக்கஷ்டத்தை தீர்த்து வைக்கும் கோவில்

ஏனென்றால் இந்த அங்காள பரமேஸ்வரி அவதாரம் எடுத்த இடமாக இந்த மேல்மலையனூர் தான். அதேபோல அங்காள பரமேஸ்வரி அவதாரம் எடுத்த மாதமும் இந்த மாசி மாதம் தான். வாய்ப்பு உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -