மாசி மாதம் தாலி சரடு மாற்றும் முறை

mangalyam
- Advertisement -

மாசி மாதம் தாலிக்கயிறு மாற்றுவதற்கு உகந்த மாதம். மாசி கயிறு பாசிப்படியும் என்று சொல்லுவார்கள். புது தாலி சரடு மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மாதம், எந்த முறைப்படி தாலி கயிறை மாற்ற வேண்டும் என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தகவல்கள் உங்களை தீர்க்க சுமங்கலியாக வலம் வரச் செய்ய நிச்சயம் உதவியாக இருக்கும்.

மாசி மாதம் தாலி கயிறு மாற்றும் முறை

பொதுவாகவே தாலிக்கயிறு மாற்ற வேண்டும் என்றால் திங்கள், புதன், வியாழன் இந்த மூன்று கிழமைகளில் மாற்றலாம். செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு, இந்த நாட்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக தாலி கயிறு மாற்றக்கூடிய அந்த நாளில் மரணயோகம் இருக்கக் கூடாது. கணவனுக்கும் மனைவிக்கும் சந்திராஷ்டமம் இருக்கக் கூடாது. அதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தாலி கயிறு மாற்றக்கூடிய நேரம் ராகு காலம் எமகண்டம் இருக்கக் கூடாது. கூடுமானவரை காலை 6:00 மணியிலிருந்து 7:00 அல்லது 7:00 மணியிலிருந்து 8:00 இந்த நேரத்தில் தாலி சரடை மாற்றுவது சிறப்பு. குறிப்பாக மதியம் 12 மணிக்கு மேல் தாலி சரடு மாற்றவே கூடாது. அதேபோல அடிக்கடி தாளிக்கடை மாற்றக்கூடாது.

நீங்கள் தாலி சரடு மாற்றி ஒரு வருடம் ஆகி இருந்தால் மட்டும் இந்த மாசி மாதத்தை தாலி சரடு மாற்றுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு சில நாட்களுக்கு முன்பு, ஒரு சில மாதத்திற்கு முன்பு தான் தாலி சரடு மாற்றி உள்ளேன். தாலி சரடு புதுசாக தான் இருக்கிறது எனும் பட்சத்தில் அதை மாற்ற வேண்டாம்.

- Advertisement -

தாலி சரடு மாற்றும்போது கவனிக்க வேண்டியவை.

பெண்கள் அதிகாலை வேலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு, ஏதாவது உணவு சாப்பிட்டு விட வேண்டும். ஒரு டம்ளர் காப்பியாவது குடிச்சுக்கோங்க. பூஜை அறையில் குலதெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பூஜை அறையில் அமர்ந்து ஒரு மூத்த சுமங்கலியின் உதவியோடு, அல்லது கணவரின் உதவியுடன் இந்த தாலி சரடு மாற்றிக் கொள்ளுங்கள்.

முடிந்தால் உங்கள் திருமணத்திற்கு எடுத்த முகூர்த்த புடவையை கட்டிக்கொண்டு, நெற்றியில் குங்குமம் தலையில் பூவோடு இந்த தாலி சரடு மாற்றலாம். கழுத்தில் இருக்கும் சரடை கழட்டுவதற்கு முன்பாக கழுத்தில் புது மஞ்சள் கயிறை கட்டிக்கொண்டு தான், பழைய சரடை கழட்ட வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கழட்டிய பழைய சடடை கால் படாத இடத்தில் போடணும் அப்படி இல்லை என்றால் ஏதாவது ஒரு மரத்தில் கட்டி விட்டுடுங்க. புதுமஞ்சள் கயிறை அம்பாளின் பாதங்களில் வைத்து எடுத்து கட்டிக் கொள்வது சிறப்பு.

- Advertisement -

தாலி சரடு மாற்றிய பின்பு கணவரின் கையால் தாலிக்கு குங்கும பொட்டு வைத்து, அவர் காலில் விழுந்த ஆசீர்வாதம் பெறுவது நன்மையை கொடுக்கும். கணவர் வெளியூரில் இருக்கிறார் என்றால் அதைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம் பிரச்சனை ஒன்றும் கிடையாது. தாலி சரடு மாற்றிய பின்பு கணவர் உங்களோடு உள்ளூரில் இருக்கும் பட்சத்தில் இரண்டு பேரும் தம்பதி சரீரமாக பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளையும் மகாலட்சுமி தாராயும் வழிபாடு செய்யவும்.

மகாலட்சுமி கோவிலில் கொடுக்கக்கூடிய குங்குமத்தை தாலி சரடு மாற்றி, அன்று உங்களுடைய சரடில் வைத்துக் கொள்வது தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை உங்களுக்கு கொடுக்கும். மாசி மாதம் விஷ்ணுபதி புண்ணிய காலம் மாதம் என்று சொல்லுவார்கள் ஆகவே பெருமாள் கோவிலுக்கு போவது சிறப்பு. பிடித்த கணவராக இருந்தாலும் சரி, பிடிக்காத கணவராக இருந்தாலும் சரி, அவர் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே செய்ய வேண்டிய ஒரு சம்பிரதாய முறை இது.

இதையும் படிக்கலாமே: நாளை வளர்பிறை பஞ்சமி திதி வழிபாடு

ஆகவே தாலி சரடு மாற்றும்போது கணவர் ஆயுளோடு இருக்க வேண்டும். கடைசி வரை உங்க கூடவே இருக்கணும் என்று நினைத்து மாற்றிக் கொள்ளுங்கள். கடைசிவரை தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை கொடுக்க வேண்டும் என்ற வேண்டுதலை குலதெய்வத்திடமும் வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -