எந்த இடத்தில் மச்சம் இருந்தால் உங்களுக்கு மிகப்பெரிய யோகம் தெரியுமா?

Matcha palan

*   நெற்றியில் மச்சம்

நெற்றியில் மச்சம் அமைவது ஒரு விசேஷமான நிலை; ஞானத்துக்கான அம்சம். விருப்பம்போல் வாழ்க்கை அமையும். வாழ்க்கைத் துணைவரின் அன்பு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.ஆண்களுக்கு நெற்றியின் வலது புறத்தில் மச்சம் இருப்பின் மிகுந்த செல்வங்களை பெறும் யோகம் ஏற்படும். பெண்களுக்கு நெற்றியின் வலது புறத்தில் மச்சம் இருப்பின் தைரியம் அதிகம் இருக்கும். பிறருக்கு பணிந்து போகாத தன்மையும் இருக்கும். பெண்களின் நெற்றியில் இடதுபுறம் மச்சம் இருப்பின் அவர்கள் முன் கோபக்காரர்களாகவும், அற்ப குணங்கள் கொண்டவர்களாகவும், மன அழுத்தம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

கண்கள்

ஆண்களுக்கு வலது கண்ணில் மச்சம் இருக்குமானால் அவர்கள் நண்பர்களால் ஆதாயம் பெறுபவர்களாக இருப்பார்கள். ஆண்களின் வலது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் மிகுதியான புகழ் பெற்றவர்களாகவும், ஆன்மீக நாட்டம் அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள். பொதுவாக பெண்களுக்கு எந்த ஒரு கண்ணில் மச்சம் இருப்பினும் அவர்களின் வாழ்வில் கஷ்டங்கள் அதிகம் உண்டாகும்.

mole

புருவம்

- Advertisement -

ஆண்களுக்கு புருவத்தின் மத்தியில் மச்சம் இருந்தால் தீர்க்காயுள் உண்டாகும். வலது புருவத்தில் மச்சம் இருந்தால் தன யோகம் ஏற்படும். நெற்றிப் பொட்டின் வலது பக்கத்தில் மச்சம் இருப்பின் திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். இடது புருவத்தில் மச்சம் இருப்பின் ஏற்ற இறக்கங்கள் மிகுந்த வாழ்க்கை, ஊதாரித்தனமாக செலவு செய்யும் குணம் கொண்டவராக இருப்பார். மேற்கண்ட இடங்களில் பெண்களுக்கு இருக்கின்ற மச்சங்கள் மத்திமமான பலன்களையே தரும்.

*  மூக்கில் மச்சம்

இவர்கள், முன்கோபிகள். மனைவி-மக்களிடம் ஒருவித கெடுபிடியுடன் இருப்பார்கள். பெண்களுக்கு மூக்கு நுனியில் மச்சம் இருந்தால், சேவை மனப்பான்மை பெற்றிருப்பார்கள். அணிமணிகளில் விருப்பம் இருக்காது. சிலருக்கு, திருமண விருப்பம்கூட இல்லாமல், சந்நியாசி போல இருப்பார்கள். மூக்கில் நுனியில் அல்லாமல் வேறு இடத்தில் மச்சம் இருந்தால் பொறுப்பு இல்லாதவர்களாகத் திகழ்வார்கள்.

*   உதடுகளில் மச்சம்

உதடுகளில் உள்ள மச்சம் பெருஞ் செல்வத்தைக் குறிக்கும். தாராள பணப்புழக்கம் இருக்கும். சரஸ்வதி தேவியின் கடாட்சம் கிட்டும். கல்வியில் உயந்த நிலையை எளிதில் அடைவார்கள். கட்டடக்கலை, சிற்பம், ஓவியக்கலை போன்ற ஏதாவது ஒன்றில் பெரும் புகழை இவர்கள் அடைவார்கள். சுகபோகங்களில் கட்டுக்கடங்காத விருப்பம் இவர்களிடம் இருக்கும். ஆண்களுக்கே மேல் மற்றும் கீழ் உதடுகளில் மச்சம் இருக்குமாயின் காதல் உணர்வு அதிகம் உள்ளவர்கள். வாழ்வில் எதிலும் அலட்சியப்போக்கு நிறைந்தவர்களாக இருப்பார்கள். மக்கள் செல்வாக்கு ஏற்படும். பெண்களுக்கு மேல் மற்றும் கீழ் உதடுகளில் மச்சம் இருந்தால் அவர்கள் உயர்ந்த குணங்களை கொண்டவர்களாகவும், ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்பார்கள்.

mole
*   முகவாயில் மச்சம்

இது நல்ல அம்சமாகும். பெண்ணாக இருந்தால் நல்ல தைரியசாலிகளாக இருப்பார். ஜோதிடம், வைத்தியம் போன்றவற்றில் கைதேர்ந்தவர்கள். உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படும். குடும்ப வாழ்வு திருப்திகரமாக இருக்கும். உதட்டிற்கு மேல் மச்சம் இருக்கும் பெண்கள் அன்பான, அமைதியான சுபாவம் கொண்ட கணவர் அமையப் பெறுவார்கள். ஆண்களுக்கு உதடுகளுக்கு மேல் மச்சம் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கலைத் துறைகளில் ஆர்வம் அதிகமிருக்கும்.

கன்னம்

ஆண்களுக்கு வலது கன்னத்தில் மச்சம் இருக்குமானால் அவர்கள் பிறரை கவருகின்ற வசீகர சக்தி நிறைந்தவர்களாக இருப்பார்கள். இரக்க குணம் அதிகம் கொண்டவர்களாகவும் இருக்கக்கூடும். அதே நேரம் இடது கன்னத்தில் மச்சம் இருக்குமாயின் அவர்களுக்கு ஏற்றத்தாழ்வான வாழ்க்கையே அமையும். பெண்களின் வலது கன்னத்தில் மச்சம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் படபடப்பு மிகுந்தவர்களாக இருப்பார்கள். ஏற்ற இறக்கமான வாழ்க்கை உண்டாகும். அதேநேரம் வலது கன்னத்தில் மச்சம் இருக்குமானால் பிறரை கவருகின்ற அழகு, தாங்கள் விரும்பியதை அடைந்தே தீர குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

*  செவிகளில் மச்சம்

வலது செவியில் மச்சம் அமைந்திருப்பது ஆண்களுக்கு நல்ல பலனைத் தரும்; பெண்களுக்கு சுமாரான பலனையே தரும். பலவிதமான தொழிலில் நல்ல பயிற்சியும், தேர்ச்சியும் இருக்கும். பெற்றோரிடமும், மனைவியிடமும் அதிக பாசமிருக்கும்.

இடது பக்க செவியில் இருப்பது ஆண்களுக்கு நல்ல பலனை அதிகம் தருவதில்லை; ஆண்களுக்கு வலது காதின் நுனியில் மச்சம் இருக்குமானால் உயிருக்கு ஆபத்தான கண்டங்கள் ஏற்படலாம். இடது காது நுனியில் மச்சம் இருக்கும் பட்சத்தில் கூடா நட்பு, அவமானங்கள் போன்றவை ஏற்படும். காதுகளுக்கு உள்ளே மச்சம் இருக்குமானால் பேச்சாற்றல் மூலம் செல்வம், திடீர் யோகம் ஏற்படும். இடது பக்க செவியில் மச்சம் பெண்களுக்கு சிறந்த பலனைத் தரும். பணி எதுவாயினும் முயற்சியால் வெற்றியடைவார்கள். வாழ்க்கையின் பிற்பகுதி இவர்கள் விரும்பியவாறு அமையும்.

mole

*  நாக்கில் மச்சம்

அறிஞர்கள், மேதைகள், ஆராய்ச்சி யாளர்கள், விஞ்ஞானிகள், மகான்கள் போன்றோருக்குத்தான் நாக்கில் மச்சம் இருக்கும். இவர்களுக்கு தன்னம் பிக்கை அதிகம். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனியவர்களாக இருப்பார்கள். குழந்தை உள்ளம் படைத்த இவர்கள், மற்றவர்களை எளிதில் நம்பிவிடுவார்கள்.

*  கழுத்தில் மச்சம்

கழுத்தில் மச்சம் உள்ள பெண்கள், திடகாத்திரமும் நல்ல ஆரோக்கியமும் பெற்றுத் திகழ்வார்கள். இவர்கள், எவருக்கும் அஞ்சாதவர். எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். பொறாமைக் குணம் இவர்களுக்கு கிடையாது. பெண்களுக்கு வலது கழுத்துப் பகுதியில் மச்சம் இருந்தால் பிள்ளைகளால் யோகமான வாழ்க்கை ஏற்படும் ஆண்களுக்கு கழுத்தின் வலது புறம் மச்சம் இருந்தால் ஆடம்பரமான வாழ்க்கையும், அதிக அளவில் சொத்துக்கள் சேர்க்கையும் ஏற்படும்.

mole
*  முதுகில் மச்சம்

முதுகின் வலப்புறம் மச்சம் இருந்தால், பெரிய லட்சியவாதியாக இருப்பார்கள். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்குவர். வலப்புற முதுகில் மச்சம் உடைய பெண்கள், வேலை செய்து சம்பாதிப்பவர்களாக இருப்பார்கள். முதுகின் இடதுபுறம் மச்சம் இருந்தால் இளமை பருவத்தில் மந்தநிலை ஏற்படும். கல்வி கற்பதில் இடையூறும் முயற்சிகளில் தோல்வியும் ஏற்படும்.

*  மார்பில் மச்சம்

பொதுவாக மார்பில் மச்சம் உடையவர்கள் இளமையில் பெரும் துன்பங்களை அனுபவித்து, பிற்கால வாழ்வில் நல்ல சுகத்தை அடைவார்கள். மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசும் இயல்பு கொண்டவர்களாகத் திகழ்வார்கள். வாழ்க்கையில் என்ன கஷ்டங்கள் ஏற்பட்டாலும், அதை பிறர் அறியா வண்ணம் சகித்துக்கொள்வார்கள். எந்த நிலையிலும் தங்களது கஷ்டங்களை பிறரிடம் கூறி முறையிட மாட்டார்கள். சிற்பம், மரவேலை, சிலை செய்தல் போன்ற பணிகளில் சிறந்து விளங்குவார்கள். ரகசியத்தை மிகவும் எச்சரிக்கையுடன் கட்டிக்காப்பார்கள்.

mole
*  அக்குளில் மச்சம்

வலது பக்கத்தில் இருந்தால் வாழ்க்கை ஏற்ற இறக்கமாக அமையும். எனினும் இவர்கள் மலர்ச்சியான முகத்தோற்றத்துடன் இருப்பர். தாங்கள் சங்கடப்படும் சூழ்நிலையிலும் பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைப்பர். எனினும் கெட்டப்பெயரே மிஞ்சும். எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனைக்கு இவர்களே சான்று!

  * இடுப்பில் மச்சம்

வலது பக்க இடுப்பில் மச்சம் இருப்பின், அந்த அன்பர்கள் நேர்மையானவர்களாகத் திகழ்வர். அதிகம் பேசமாட்டார்கள். தங்களுடன் நெருங்கி பழகுபவர்களிடம் அளவு கடந்து அன்பு செலுத்துவார்கள். இதேபோல், மற்றவர்களால் அன்பு செலுத்தப்படும்போது, மனமுருகி அடிமையாகி விடுவார்கள்.

இடதுபக்க இடுப்பில் மச்சம் இருப்பின் திடமான உள்ளம், கடுமையாக உழைக்கும் இயல்பை பெற்றிருப்பர். கள்ளம் கபடமற்றவர்கள். இவர்கள் பிறந்த இடத்தை விட்டு, வெளி இடத்தில் வாழ்வை அமைத்துக்கொண்டால், வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். எனினும், எதையும் நிதானித்து செய்யும் பொறுமை இல்லாதிருந்தால், காரியம் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு.

mole

*  தொப்புளில் மச்சம்

தொப்புளில் மச்சமுடையவர்கள் அசாதாரணமான குணம் கொண்டவர்களாக விளங்குவார்கள். ஏதாவது ஒரு விஷயத்தில் புதுமையும் புரட்சியும் செய்துகொண்டே இருப்பார்கள். தொடர்பில்லாத விஷயங்களில் ஈடுபட்டு, அதன் பொருட்டு போராடிக் கொண்டிருப்பார் கள். இவர்களுடைய திருமண வாழ்வில் சிறுசிறு சலசலப்புகளும் சங்கடங்களும் அடிக்கடி ஏற்படும். பெண்களின் தொப்புளின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் யோகமான வாழ்க்கை உண்டாகும். தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் அமைதியற்ற வாழ்க்கையும், பொருள் நஷ்டம் ஏற்படும். தொப்புளிற்குள்ளாக மச்சம் இருந்தால் ஆடம்பரமான வாழ்க்கை உண்டாகும்.

வயிறு

ஆண்களுக்கு வயிற்றில் மச்சம் இருந்தால் மிகுந்த பொறாமை குணம் கொண்டவர்களாக இருக்கக்கூடும். அதே நேரம் அவர்களுக்கு அடி வயிற்றில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பெண்களால் யோகம், அதிகாரமிக்க பதவிகள், ஆடம்பரமான வாழ்க்கையும் ஏற்படும். பெண்களுக்கு வயிற்றில் மச்சம் இருந்தால் சிறந்த குணங்களும், நிறைவான வாழ்க்கையும் அமையும். அடிவயிற்றுப் பகுதியில் மச்சம் இருப்பின் அப்பெண்களுக்கு ராஜயோகமான வாழ்க்கை உண்டாகும்

*  தொடைகளில் மச்சம்

பொதுவாக தொடைகளில் மச்சம் ஆண்களுக்கு நல்ல பலனைத் தரும். பெண்களுக்கு சுமாரான பலனையே தரும். வலது தொடையில் மச்சம் உடைய ஆண்கள் மன உறுதி படைத்தவர்கள். இன்பம், துன்பம் இரண்டையும் சமமாக பாவிப்பார்கள். இவர்கள் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். பிறர் எண்ணங்களை கண்டறியும் சக்தி படைத்தவர்கள். இவர்களை யாருமே ஏமாற்ற முடியாது. இவர்களை யாராலும் புரிந்து கொள்ளவும் இயலாது. கல்வி, பயிற்சிகளில் அக்கறையும் ஆர்வமும் காட்ட மாட்டார்கள். ஜன்ம விரோதியாக இருந்தாலும் இவர்களிடம் நேருக்கு நேர் உரையாடினால், சரணடைந்து விடுவார்கள்.

புட்டங்கள்

ஆண்களின் புட்டங்களில் மச்சம் இருந்தால் அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு மிக்க வாழ்க்கை உண்டாகும். பெண்களின் புட்டங்களில் மச்சம் இருப்பின் சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை உண்டாகும்.

*  உள்ளங்கையில் மச்சம்

ஆண்களுக்கு வலது கையில் மச்சம் இருப்பது மிகவும் உயர்ந்த அம்சமாகும். வலது உள்ளங்கையில் மச்சம் இருக்கும் எனில், அவர்கள் சகல சாஸ்திரங்களிலும் வல்லவர்களாக இருக்கவேண்டும் என்பது விதி. குறிப்பாக கணித சாஸ்திரம். நீதி, பொறியியல் போன்ற வற்றில் ஆழ்ந்த அறிவுள்ளவர்கள். சிறுகச் சிறுக முன்னேறி உன்னதமான நிலையை அடைவார்கள்.

mole

*  கை விரல்களில் மச்சம்

கை விரல்களில் அமையும் மச்சங்களுக்கு ஏறத்தாழ ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே மாதிரியான அம்சங்கள் நிகழக் கூடும். கட்டை விரலில் இருந்தால் எப்பொழுதும் மகிழ்ச்சி உண்டு.

ஆள்காட்டி விரலில் மச்சம் இருந்தால், தலைமை பொறுப்பு வகிப்பவர்களாகவும், ஆட்சி அதிகாரம் செய்யக்கூடிய அம்சம் பெற்றவர் களாகவும் இருப்பர். தன்னம்பிக்கை அதிகம் இருக்கும்.நடுவிரலில் மச்சம் இருப்பின் கலை உள்ளம் படைத்த வர்களாக இருப்பார். குறிப்பாக வாய்ப்பாட்டு இசைக்கருவிகள், நடனம், நாடகம் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.

mole
* மோதிர விரலில் மச்சம் 

அமைந்திருப்பின் அழகான தோற்றம் கொண்டவர்களாக இருப்பர். எதையும் கூர்மையாக விளங்கிக் கொள்ளும் இயல்பு உண்டு. எதிர்ப்புகளை இவர்கள் எளிதில் முறியடியப்பார்கள்.

சுண்டு விரலில் மச்சம் இருந்தால் சரஸ்வதியின் அருள் பெற்றவர்கள் என்பது சாஸ்திர விதி. கல்வித் துறையில் இவர்களுக்கு மிகவும் உயர்ந்த தகுதி அமையும். எதிலும் முன்னெச்சரிக்கையாக செயல்படுவது இவர்களின் குணம்.

இவர்கள், தனியார் பதவியில் உயர் நிலையில் இருப்பார்கள். அரசியல் துறையில் பேச்சாளராகவும், வழக்கறிஞர் எனில் புகழ்பெற்றவராகவும் திகழ்வர். இடது கை சுண்டு விரலில் மச்சம் இருந்தால், அவர்களிடம் பிடிவாத குணம் அதிகம் இருக்கும்.