வாழ்வின் அடுத்த நிலைக்கு உயர உதவும் மந்திரம்

Sivan manthiram

மனிதனாய் பிறந்த பலர் வாழ்வில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்று நினைப்பதுண்டு. அப்படி நினைப்பதில் தவறில்லை அனால் நமது முன்னேற்றமானது செல்வதை நோக்கி மட்டுமே இல்லமால் அடுத்தவருக்கு உதவுதல், இறைபணி செய்தல் போன்ற பல நலன் விடயங்களிலும் முன்னேற்றம் காண்பது நல்லது. அதோடு உண்மையற்ற இந்த நிலையில் இருந்து உண்மையான இறை நிலையை அடைய முன்னேற்றம் காண்பதும் அவசியம். அந்த வகையில் ஒருவர் தான் இருக்கும் நிலையில் இருந்து அனைத்து விதத்திலும் முன்னேற்றம் அடைய ஜபிக்க வேண்டிய ஒரு அற்புதமான மந்திரம் இதோ.

Perumal

அப்யாரோஹ மந்திரம் :

ஓம் அஸதோ மா ஸத்கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய
ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

அப்யாரோஹ மந்திரம் என்றால் ஜெபிப்பவர்களது நிலையை உயர்த்தும் மந்திரம் என்று பொருள்.

மந்திரத்தின் பொது பொருள்:

இறைவா என்னுள் இருக்கும் அறியாமை என்னும் இருளை விளக்கி என்னை பேரொளிக்கு அழைத்துச்செல்ல வேண்டுகிறேன். உண்மையற்ற இந்த நிலையில் இருந்து என்னை உண்மை நிலைக்கு அழைத்து செல்ல வேண்டுகிறேன். மரணத்தில் இருந்து விடுவித்து என்னை மரணமில்லா பெரு வாழ்விற்கு அழைத்து செல்ல வேண்டுகிறேன்.

இதையும் படிக்கலாமே:
நினைத்ததை சாதிக்க புதன் கிழமைகளில் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்

இந்த மந்திரத்தை தினமும் 9 முறை ஜெபிப்பதன் பலனாக நமக்குள் அறிவொளி பெருகும், நமது வாழ்வில் முன்னேற்றம் பெருகும், இறைபக்தியில் நாட்டம் பெருகும்.