நினைத்ததை சாதிக்க புதன் கிழமைகளில் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்

Budhan-Manthiram
- Advertisement -

நவகிரகங்களை பொறுத்தவரை ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் எதை செய்தாலும் அதை நன்கு ஆராய்ந்து செய்ய உதவும் கிரகமாக விளங்கிறார் புதன். புத்திக்கு அதிபதியான புதனின் அருள் நமக்கு இருந்தால் எப்பேர்ப்பட்ட சூழலையும் அறிவுக்கூர்மையோடு சமாளித்து வெற்றி காணலாம். புதன் பகவானுக்குரிய புதன் கிழமைகளில் அவருக்குரிய மந்திரத்தை ஜபித்து அவரை வணங்குவதன் பலனாக அவரின் அருளை பெறலாம். இதோ அவருக்கான மந்திரம்.

Budhan bagavaan

புதன் மந்திரம் :

இணக்கமாம் மகிழ்ச்சி இன்பம் இயலுறும் புத்தி யுக்தி
வணக்கமாம் கல்வி மேன்மை வருந்தனம் மகிழ்ச்சி புண்யம்
துணக்கமாம் பந்துவாகித் துலங்கிடச் சுகங்கள் நல்கும்
கணக்கனாம் எந்தை பாதம் கழலடி சென்னி வைப்பாம்.

- Advertisement -

புதன் கிழமைகளில் அருகில் உள்ள கோயிலிற்கு சென்று நவகிரக சன்னதியில் புதன் பகவானை வணங்கி இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பலனாக புதன் பகவானின் அருள் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற உதவும் அகத்தியர் மந்திரம்

புதன் பகவானுக்கு பச்சை நிற வஸ்திரம் சார்த்தி, வெண் காந்தள் மலர்களால் அர்ச்சனை செய்து, பச்சைப்பயறும் வெல்லமும் சேர்த்த பாயசத்தை நைவேத்தியம் செய்து வழிபட்டால் புதன் பகவானால் ஏற்பட்ட ஜாதக தோஷங்கள் விலகும். இதன் மூலம் வாழ்வில் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் விலகி புத்தி கூர்மையோடு செயல்பட்டு எதிலும் வெற்றி காணலாம்.

- Advertisement -