12 ராசிக்காரர்களும் தங்களிடம் இருக்கும் இந்த குணத்தை மாற்றிக் கொண்டால் அவர்களுடைய வாழ்க்கையே மாறும் தெரியுமா? உங்கள் ராசிக்கு நீங்கள் எதை மாற்றிக் கொள்ள வேண்டும்?

sad-men-astro-wheel
- Advertisement -

12 ராசிக்காரர்களுக்கும் தனித்துவமான குணாதிசயங்களும், குணங்களும் உண்டு. மேஷத்தில் பிறந்தவர்கள் பலரும் சில சமயங்களில் ஒரே மாதிரியான குண அமைப்பை கொண்டு விளங்குவதாக ஜோதிடர்கள் கணித்து கூறுகிறார்கள். இதே போல ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்கள் இராசிக்கு உரிய குணங்களை கொண்டு விளங்குகிறார்கள். இவர்கள் எந்த குணத்தை மாற்றிக் கொண்டால் அவர்களுடைய வாழ்க்கை மாறும்? என்பதை தான் பொதுப்பலனாக இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மேஷம்:
12 ராசியில் முதல் ராசியாக இருக்கும் மேஷத்தில் பிறந்தவர்கள் மிகுந்த பிடிவாத குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு விஷயம் வேண்டும் என்றால் அது கட்டாயம் விடாப்பிடியாக வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். இவர்களுடைய இந்த பிடிவாத குணத்தை மாற்றிக் கொண்டால் இவர்களுடைய வாழ்க்கையே நிச்சயம் மாறும். இந்த பிடிவாத குணம் பல இழப்புகளை இவர்களுக்கு கொடுத்திருக்கும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களிடம் மாற்றிக் கொள்ள வேண்டிய ஒரு குணம் என்றால் அதை அவசரம் என்று கூறலாம். இவர்களிடம் பொறுமை என்பது சுத்தமாக இருக்காது. எதுவும் உடனுக்குடன் நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சில விஷயங்கள் பொறுமையாக இருந்தால் தான் உங்கள் கைக்கு கிடைக்கும். நீங்கள் பொறுமையை இழந்தால் இருப்பதும் இல்லாமல் போய்விடும், எனவே இந்த குணத்தை நீங்கள் மாற்றிக் கொண்டால் உங்கள் வாழ்க்கை மாறும்.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இரட்டை குணம் அதிகம் காணப்படும். எந்த ஒரு விஷயத்திலும் ஒரே முடிவை இவர்கள் எடுப்பதில்லை. இதை செய்யலாமா? அல்லது அதை செய்யலாமா? என்று சாய்ஸ் வைத்திருப்பார்கள். எல்லா விஷயத்திலும் இவர்கள் சாய்ஸ் வைப்பதால் பல இடங்களில் இவர்கள் தோல்வியை தழுவ நேரிடுகின்றது, எனவே ஒரு முடிவில் தீர்க்கமாக இருப்பது இவர்களுடைய வாழ்க்கையையும் மாற்றி அமைக்கும்.

- Advertisement -

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு பொறாமை குணம் அதிகம் இருக்கும். எப்பொழுதும் எல்லா இடங்களிலும் இவர்கள் தான் தனித்துவமாகத் தெரிய வேண்டும், முதன்மையான இடத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்கள். இந்த ஆசை பேராசை ஆகும் பொழுது அது பொறாமை குணமாக மாற்றம் பெறுகிறது. பொறாமை குணம் தேவையற்ற பிரச்சனைகளில் அடிக்கடி இவர்களை ஈடுபடுத்துகிறது. இந்த குணத்தை இவர்கள் மாற்றிக் கொண்டால் வாழ்க்கை மாறும்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்கள் தங்கள் மேல் இருக்கும் தவறுகளை ஒருபோதும் ஒத்துக் கொள்வது இல்லை. தெரியாமல் அவர்கள் ஏதாவது ஒரு தவறை செய்து விட்டால் அதை நியாயப்படுத்தி மற்றவர்களை பின்னுக்கு தள்ளும் குணம் கொண்டவர்கள். தங்கள் தரப்பு நியாயங்களை மற்றவர்கள் புரிந்து கொள்வது போல, நீங்களும் மற்றவர்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வது இல்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றால் மற்றவர்களும் அதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதை மாற்றிக் கொண்டால் உங்கள் வாழ்க்கை மாறும்.

- Advertisement -

கன்னி:
கன்னியில் பிறந்தவர்கள் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். தங்களுடைய காரியம், நடக்க வேண்டும் என்றால் அதற்காக எந்த அளவிற்கும் அவர்கள் இறங்கிப் போக தயாராக இருப்பார்கள். காரியவாதிகளாக கருதப்படும் இந்த ராசிகாரர்களுக்கு பொறுமை என்பதும் குறைவு தான். ஏதாவது ஒரு காரியத்தை சாதித்துக் கொள்ள இவர்கள் நாடகமாடுவதை மாற்றிக் கொண்டால் வாழ்க்கை மாறும்.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் நியாயத்தை பேசிக் கொண்டே இருப்பார்கள். இவர்களுடைய ராசியின் சின்னம் தராசு என்பதாலோ என்னவோ எல்லா விஷயத்திலும் சரியாக இருக்க வேண்டும் என்று நச்சரிப்பார்கள். உங்களைப் போல மற்றவர்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பதை நீங்கள் மாற்றிக் கொண்டால் உங்களுடைய வாழ்க்கை மாறும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்கள் கொண்ட கொள்கையிலிருந்து பின் வாங்குவதில்லை. சில சமயங்களில் வளைந்து கொடுத்து சென்று தான் ஆக வேண்டும். எடுத்த முடிவுகள் தவறு என்று தெரிந்தால் அதை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒருமுறை எடுத்து விட்டால் எடுத்தது தான் என்று விடாப்பிடியாக உட்கார்ந்து கொண்டிருந்தால் அதுவே உங்களுடைய வாழ்க்கைக்கு ஆபத்தாக முடிவதற்கு வாய்ப்புகள் உண்டு.

தனுசு:
தனுசில் பிறந்தவர்கள் எதையும் திட்டமிடாமல் போகின்ற போக்கில் போய்க் கொண்டு இருப்பார்கள். எதிர்காலம் பற்றிய கவலை இல்லாமல் இருப்பதால் இவர்களுடைய வாழ்க்கையில் நிறையவே தர்ம சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. முன்கூட்டியே திட்டமிட்டு எதிர்காலம் பற்றிய அக்கறையும் இருந்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கலாம்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்கள் நீலிக்கண்ணீர் வடிப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? என்று எப்போதும் ஒரு தயக்கம் இவர்களிடம் இருக்கும். தன்னை ஒருவரும் குறை கூறி விடக்கூடாது என்று அதிக மெனக்கெடல் செய்து கடைசியில் ஏதாவது சொல்லிவிட்டால் பாசாங்கு செய்து மறைத்து விடுவார்கள். மற்றவர்களை ஏமாற்றி உங்களுக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தால் உங்கள் வாழ்க்கை மாறும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்கள் எதையாவது ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பார்கள். ஆராய்ச்சியில் ஏதாவது நன்மை நடக்க போகிறது என்றால் பரவாயில்லை, ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லாமல் தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைத்து மூக்கை உடைத்து கொள்வார்கள். அடுத்தவர்களுடைய விஷயத்தை உன்னிப்பாக கவனிக்காமல் உங்கள் வேலையில் நீங்கள் கவனம் செலுத்தினால் உங்கள் வாழ்க்கை மாறும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்கள் எல்லா சமயங்களிலும் அமைதியை கடைபிடிப்பவர்கள். எங்கு அமைதியாக இருக்க வேண்டுமோ, அங்கு மட்டுமே அமைதியாக இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் நீங்கள் அமைதியாக இருந்தால் அது உங்களுக்கு எதிர் வினையாக மாறும். பிரச்சினைகளைக் கண்டு தூரமாக ஓடிப் போகாமல் அதை எதிர் கொள்ள முயற்சி செய்தால் உங்கள் வாழ்க்கை மாறும்.

- Advertisement -